"மஜ்னூன் குறுங்கதைகள்" தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்

"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை பற்றிய நண்பர் மற்றும் தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம் 
Dhashna Moorthy  

***
எழுத்தாளர் நரேஷ் அவர்களின் முதல்
புத்தகம்

"தவிப்பு" எனும் கதையைப் படித்தேன்.
எழுத்தாளனுக்கும் அவன் பிரதிக்குமான உறையாடல் தான் கதை (அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளில் சாந்தியும் எழுத்தாளனும் பேசுவார்களே ஞாபகம் உள்ளதா) கதையென்று சொல்லலாகாது, கதைகளையே கேட்டுக் கேட்டு போரடித்துப் போய் கடுப்பில் இருப்பவர்களுக்கான
ஓர் குறுங்கதைகள் தொகுப்பு.
Kindle Unlimited இல் வாசிக்கவும் கிடைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் புண்ணிவான்களுக்காக வெறும்
49 ரூபாவுக்கும் கிடைக்கிறது.
படித்து விட்டு ரிவ்யூ எழுதுங்கள், பாராட்டுங்கள், திட்டுங்கள்.

இனி கதைகளை பற்றிய என் பார்வை.

4. கயா
புவி மீது நாம் கொள்ளும் அக்கறையை புவியே கேலி செய்யும்படியான கதை.
கயா கிரேக்க புவிக்கடவுளின்
பெயரென்பது உப தகவல்.

5. நரகத்தில் ஒரு நாள்
பேஸ்புக் வாட்சப் ஷேரிங் குரூப்புகளை கலாய்த்து ஒரு கதை.

6. பழைய எழுத்தாளரும்
 புதிய எழுத்தாளரும்.
செம பகடியானதொரு கதை சிரித்துக் கொண்டே படித்தேன். புதிதாக எழுதுபவரை மற்ற எழுத்தாளர்கள் எப்படி பார்க்கிறார்கள். அல்லது தான் எழுதியதைப் பற்றி இன்னொரு எழுத்தாளரிடம் கேட்டால்
என்ன நடக்கும்? இது தான் கதை.
மனசுக்குத் தோன்றியதை செய்தோமா போனோமா என்று இருக்க வேண்டும். எல்லோரிடமும் ஆலோசனை கேட்டால் இப்படித்தான் நடக்கும்.

7. அருவம்
இந்தக் கதை எனக்குப் புரியவேயில்லை.

8. ப்ரஷர் குக்கர் 
மாத,வார,சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலை நேர வாழ்க்கையின் ஒரு துளி இந்த கதை.

9. மிகைல் A.I
சயின்ஸ் பிக்‌ஷன் கதை. கம்ப்யூட்ர்களுக்கு அறிவு வந்தால் என்ன நடக்கும் என்று ஆயிரக்கணக்கான ஹாலிவுட் படங்கள் வந்திருக்கிறதே அதே பாணி கதை.

10. இறந்தகாலம்
காலம் மற்றும் வெளி இவைகளின் அபத்தத்தை பற்றிய ஒரு கதை.
இதைப்படிக்கும் இந்த கணம் உங்களுக்கு இறந்தகாலம், நிகழ்காலம் ஒரு நொடியில் இறந்தகாலமாகிவிடும் அபத்தம்.

19. ஏழு நிமிடங்கள்.
சுஜாதா பாணியில் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கதை ஆனால் முடிக்காமலேயே விட்டுவிட்டது வித்தியாசமாக இருந்தது.

18. கொலை வழக்கு
கொலை நடக்கிறது ,கொலைகாரனை
எப்படி உடனே பிடிக்கிறார் என்பது கதை. ஆனால் நம்பும்படி இல்லை.

17. சோரம்போனவள்
கள்ளக் காதல் பற்றிய குட்டிக் கதை.

16. தாபத்தணல்
காமம் பற்றிய சிறிய கதை.

15. வாட்சப்
லவ்பெயிலியர் கதை

14. நறுமுகை
காதலர்களுக்கடையிலான விளையாட்டுக்கள், காதல், காமம்,
அன்பு, எதிர்பார்ப்பு, இதைப் பற்றிய
ஒரு கதை எனக்குப் பிடித்திருந்தது. 

25. குறுங்கதை எழுத்தாளர்
எனக்கு முன்னுரையென்றால் எவ்வளவு கடுப்பாகும் என்பது உங்களுக்கே தெரியுமே,
மோகமுள் நாவலில் சுகுமாறன் அத்தியாமெல்லாம் போட்டு முன்னுறை எழுதி சோதித்ததை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அந்த கொடுமையை இரண்டே வரிகளில் எழுதி முடித்துவிட்டார் நரேஷ். (இன்னொரு விஷயம் இந்த புத்தகத்தின் முன்னுரையைக் கூட நான் படிக்கவில்லை)

24. கிரஹஸ்தன்
இரண்டே வரிகள் எழுதிவிட்டு நம்மை இருபது வரிகள் யோசிக்க வைத்து விடுகிறார். கூடுதல் விபரங்களுக்கு
புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

23. முதலிரவு
மேலே சொன்ன பாணியில் இரண்டே வரிகளில், ஒரு டபுள் மீனிங் கதை,
மிகவும் ரசித்தேன்.

22. வெறுமை
இந்தக் கதை சுத்தமாகப் பிடிக்கவில்லை.
படு திராபையாக இருந்தது. ஆனால் இதில் வரும் ஒரு வரியை ரசித்தேன், அது "தன் கையே தனக்குதவி என்று இருந்தான்"

21. திருட்டு
இது புரியவில்லை, அதனால் பிடிக்கவில்லை.

20. ஜென்நிலை
ஒரு குட்டி ஜென்கதை.

19. மிடில்கிளாஸ்
ஷார்ட்டாக ஒரு தத்துவ கதை.

18. கொலைகாரர்.
ஏதோ வெளிநாட்டு எழுத்தாளரின் கதையைப்பற்றின கதை போல.. எனக்கு ஒரு எழவும் புரியலை...!

17. கோபம்
இதுவும் புரியவில்லை..
ஏதோ கூஸ்பம்ஸ் கதை போல!

16. உபதேசம்
நரேஷ் அவர்களின் சொந்தக் கதை
போல...! செம்ம பகடி.

15. முன்னேற்றம்.
ஒவ்வொரு முறை எழுதும் போதும்
இந்த எழுத்தாளர்கள் எப்படித்தான் எழுதறாங்களோனு வியப்பா இருக்கும் இந்தக் கதை பிரதியும் அதையே பேசுகிறது.

14. வைரஸ்
கொரோனா கதை.

13. எதிர்காலம்
சயின்ஸ்பிக்ஷன் கதை.., பிடிக்கவில்லை.

40. சித்தார்த்தனின் பாவங்கள்
புத்தனிடம் சில கேள்விகள்.
ஏற்கனவே நிறையப்பேர் கேட்டு
விட்ட அதே கேள்விகள் தான் கதை.

39. விசித்திரச் சொப்பனங்கள்
அருமையான கதை. இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த ஒரு கதை. விதவிதமான கனவுகள், கனவுகளுக்கு எல்லையேது?உளவியல் நிபுணர்கள் கனவுகளுக்கு ஏதெதோ காரணங்களைச் சொல்கிறார்கள். இந்தக் கதையில் வரும் கனவுகள் மிக வினோதமாக உள்ளது.

38. ஒரு கடிதம்
காதலியின் பிரிவின் துயரைச்
சொல்லும் கதை...

37. மூன்று பைத்தியங்கள்
செம கதை, மிகவும் ரசித்தேன்.
மூன்றாவது பைத்தியமாக
தன்னையே சொல்வாரென்று
எதிர்பார்க்கவில்லை. ஒரு வகையில் அனைவருமே பைத்தியங்கள் தான்!

36. பிணந்தின்னிகள்
இந்தத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் கதை இதுதான். இந்த மொத்தக் கதைகளில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன். குழந்தையை வன்கலவி செய்து கொன்றுவிடும் கொடூரன்களைப் பற்றிய கதை.

35. காதல்காரி
காதலனின் பிரிவைப் பற்றின கதை. எனக்குப் பிடிக்கவில்லை..
செம அறுவை...!

34. நரகம்
வறுமையின் கொடுமைப் பற்றின கதை. அதுவும் இளமையில், குழந்தையாக இருக்கும் போது பசியில் உணவில்லாமல் தூங்குவது ரொம்பக் கொடுமையானது. இந்தத் தொகுப்பின் இரண்டாவது மாஸ்டர் பீஸ் கதை இது, என் வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த ஒர் இரவு சம்பவத்தை அப்படியே நேரில் பார்த்து எழுதியதைப் போல் இருந்தது.

33. மஜ்னூன்
லைலா, மஜ்னு கதை, இறந்துபோய் சொர்கத்தில் ஏற்கனவே லைலாவைப் பிரிந்து துயரத்தில் இருக்கும் மஜ்னு காலயந்திரத்தில் பின்னோக்கி பயணித்து அவள் இறப்பதை நேரில் பார்த்து வருந்தி மீண்டும் இறக்கிறான்.

32. மலரும் நினைவுகள்
இந்தத் தொகுப்பின் மிக மோசமான
கதை....! சுத்தமாக பிடிக்கவில்லை.

31. ஏழு நிமிடங்கள்
சயின்ஸ் பிக்‌ஷன் கதை,
நாம் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பி தரையிரங்கும் போது, மோதிடுச்சே அதே கான்சப்ட் ஆனா முடிக்காமலேயே விட்டு விட்டது டூ மச்....!

முழுத் தொகுப்பிலும் எனக்கு மிகப் பிடித்த கதைகள்; நரகம், பிணந்தின்னிகள்.

இதையெல்லாம் படித்து முடித்த பின்னர் எனக்குத் தோன்றும் எண்ணம், நரேஷ்
எப்படி ஒரே புத்தகத்தில் இவ்வளவு எக்‌ஸ்பரிமென்டுகளைச் செய்து விட்டார் என்பது தான்! வியப்பாக உள்ளது.
சில கதைகள் மிகச் சிறப்பாக இருந்தது.
சில கதைகள் படிக்கக் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் முதல் புத்தகத்தில் இவ்வளவு ஜானர்களில் எழுதியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள் நரேஷ் வாழ்த்துக்கள்!

 கிண்டிலில் நூலை வாங்குவதற்கு 

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I