"மஜ்னூன் குறுங்கதைகள்" மற்றும் ஒரு பார்வை

நரேஷின் "மஜ்னூன்" குறுங்கதை தொகுப்பை கிண்டிலில் வாசித்தேன். ஓரிரண்டு சிறுகதைகளும், மசாலாப்பொடி தூவினது போல கொஞ்சுண்டு மைக்ரோ கதைகளும் இருக்கின்றன. குறுங்கதைகளுக்கு குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் பிரபல்யம். வாத்தியார் சுஜாதா ஆரம்பித்து வைத்தது அந்த ஒரு பக்க கதைகளை என்று நினைக்கிறேன். 

என்னை பொறுத்தவரை குறுங்கதைகள் எழுத சிறந்த மொழி வளமும் புத்திசாலித்தனமும் தேவை (வாசகர்களை அலறி அடித்து ஓட வைக்காமல் எழுத மாத்திரமே இவை தேவை) நரேஷிற்கு இரண்டும் நன்கு கைவரப்பெற்றுள்ளது. எனக்கு இருந்த ஒரே ஒரு சிக்கல் இந்த kindle தான். எனக்கு ஏனோ இந்த kindle அவ்வளவாக உவப்பதில்லை. இந்த மாதிரி வேறு வழியே இல்லாத புத்தகங்களுக்கு kindle ஐ நாட வேண்டி இருக்கிறது. 

வெறுமனே ஒரு சுழிக்குள் சுற்றி சுற்றி கதைகள் எழுதாமல் காதல் காமம் என்று தொடக்கி கேயாஸ் தியரி வரை எல்லைகளை விரித்து எழுதி இருக்கிறார். நிறைய புதிய முயற்சிகளை பரீட்சித்துப் பார்த்தது போல தெரிகிறது. அவைகள் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன்.

"அங்கு யாரும் புலப்படவில்லை" ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட். ஒரு ஹாரர் திரில்லர் சோர்ட் பிலிமுக்கு உரிய பக்கா கண்டெண்ட். யாரும் டெக்னீக்கலி கை தேறிய ஷார்ட் பிலிம் டைரக்டர்கள் முயற்சிக்கலாம். 

"காயா" ஷார்ட் அண்ட் நச்.

"பழைய எழுத்தாளரும் புதிய எழுத்தாளரும்" சொந்த அனுபவமோ தெரியவில்லை. கேட்டு விட வேண்டும். 

"மிஹைல் A.1" ஒரு செம்மையான சயின்ஸ் ஷார்ட் ஸ்டோரி. என்னோட தனிப்பட்ட அபிப்பிராயம், எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் சுவாரசியம் ஆக்கி இருக்கலாமோ என்பது. அதாவது உள்ளீடு வலிமையாக இருக்கும் பொது அதை வெளிப்படுத்தும் விதமும் மிக சிறப்பாய் இருத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

"மிடில் கிளாஸ்" என்னும் மைக்ரோ கதைக்கு நிச்சயம் தனியே ஒரு கைதட்டல் வேண்டும். 

"நறுமுகை" ஏற்கனவே வாசித்தது என்றாலும், மீண்டும் ஒரு முறை எழுத்து நடைக்காக வாசித்தேன். ஒரு கிளாசிக் ரொமான்டிக் குறுங்கதை. இதெல்லாம் கற்பனைனு சொன்னா அந்த கற்பனையே நம்பாது.

"சோரம் போனவள்" எல்லாம் குறுங்கதைக்கான இலக்கண finishing touch.

"ஏழு நிமிடங்கள்" சுஜாதாவின் "கடவுள் வருகிறார்" கதையை ஞாபகபடுத்துகிறது. ஆனால் இரண்டு கதைக்கும் சம்பந்தம் இல்லை.

இந்த புத்தகத்தின் ஆகச்சிறந்த சிறுகதையாக "நரகம்" சிறுகதையை சொல்வேன். அந்த characterization எல்லாம் அவ்வளவு பக்கா. படித்து விட்டு நல்ல வேலைகளில் இருப்பவர்கள் கூட குடி என்று வரும் போது இவ்வாறன characterizationகு விதி விலக்கில்லை. உங்களை ஒரு சிறந்த எழுத்தாளனாக காட்டிக்கொள்ள இந்த ஒரு சிறுகதை போதும். கடைசி வரிகள் எல்லாம் சான்சே இல்லை. வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து எழுதுங்கள்.

Lavan Ladchumanan

நூலை வாங்குவதற்கு


Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I