எழுத்தாளர் நர்மியின் "மஜ்னூன் குறுங்கதைகள்" நூல் விமர்சனம்

ஒரு படைப்பு என்னச்செய்ய வேண்டும் என்று என்னை கேட்டால், அது ஏதோ ஒரு உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்த வேண்டும். நரேஷின் மஜ்னூன் குறுங்கதையை படித்த பின்னர் குறுங்கதை தொகுப்புகளை தேடித்தேடி வாசிக்க தொடங்கியிருக்கிறேன். புனைவை கையில் எடுப்பதற்கு  தைரியம் வேண்டும்.  குறுங்கதைகளை கையாள இன்னும் அதிகமாகவே தேவையென கருதுகிறேன். அது ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது.

இந்த குறுங்கதை தொகுப்பை வாசித்து முடித்தபோது தெரிந்ததெல்லாம் இதை எழுதியவர் ஒரு தேர்ந்த வாசகன் என்பது மட்டுமே. எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தலைப்பும் பரந்துபட்டதாக இருந்தது. எனக்கு பிடித்த குறுங்கதைகள் பற்றி கூறுவதற்கு முன்னர் எழுத்தாளரின் காதல் வகையறா கதைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. 😜

"அங்கு யாரும் புலப்படவில்லை" என்ற குறுங்கதையில் கடைசிவரை ஒரு சுவாரஸ்யமான திகில் ஒன்று இருந்துக்கொண்டே இருந்தது. இதில் உண்மையில் பேய் யாரென்ற வினா தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

"கயா" என்ற கதையில் புவியை உருவாக்கிய கிரேக்க தெய்வம் பற்றிய அறிமுகம், 

"பழைய எழுத்தாளரும், புதிய எழுத்தாளரும்" என்ற கதையில் வெளிப்படுகிற நகைச்சுவையுடன் கூடிய ஒரு  பகிடி செய்யும் பாணி, 

"மிகைல்" என்ற கதையில் யதார்த்தத்துடன் அறிவியலை கலந்து விட்டு சுவாரஸ்யமாக கதையை நகர்த்தும் புள்ளி, என எல்லாமே உண்மையில் நன்றாக இருந்தது. 

முற்றிலும் புதிய வடிவத்தில் 
எதிர்காலம், வைரஸ், முன்னேற்றம்,கொலைகாரர், மிடில் கிளாஸ், குறுங்கதை எழுத்தாளர், போன்றவை காணப்பட்டன. 

எனக்கு மிக மிக மனதுக்கு நெருக்கமான கதைகளாக இருப்பது
"மூன்று பைத்தியக்காரர்கள்
" விசித்திர சொப்பனங்கள்"  இந்த இரு கதைகள் உண்மையில் அவ்வளவு பிடித்திருந்தது.

" நரகம் " என்ற கதை எப்போதும் நான் மறக்க நினைக்கும் கதை.

உங்களுடைய முதல் தொகுதி சிறப்பாக வெளிவந்திருக்கிறது. மேலும் பல சிறந்த படைப்புகளை வெளியிட என் வாழ்த்துகள் எழுத்தாளரே. 😜

மஜ்னூன் குறுங்கதைகள்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I