இயற்கையை துஷ்பிரயோகம் செய்த முன்னோர்கள்.

நம் முன்னோர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தார்கள். இன்று நாம் இயற்கையை சுரண்டி அழித்து கொண்டிருக்கிறோம். 
இதில் இரண்டாவதாக குறிப்பிட்ட விடயம் உண்மை. அது நமக்கே நன்கு தெரியும்  ஆனால் முன்னோர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தார்கள் என்பது சுத்த பொய்! அதிர்ச்சியாக இருக்கிறதா?

மனிதகுல வரலாற்றை திருப்பி பார்த்தால் நான் சொல்வது புரியும். செப்பியன்கள் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அவுஸ்திரேலியா, அமெரிக்க கண்டங்களை நோக்கி  பயணித்து,  நிரந்தரமா தங்கி
வாழஆரம்பித்த பிறகு அதுவரை அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தாவரங்களும், இராட்சத விலங்குகளும் 
சில ஆண்டுகளுக்கு பிறகு பூண்டோடு அழிந்து போயின. 

வரலாற்று ஆய்வாளர்கள் இயற்கை அனர்த்தங்களின் மேல் பழியை 
போட்டாலும். நாம் ஒன்றும் அத்தனை நல்லவர்கள் கிடையாது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் பனியுகம் ஏற்படும். பல ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பரப்பு பனியினால் போர்த்தப்பட்டிருக்கும். அந்த நிகழ்வுதான் சில பூதாகரமான விலங்குகளின்/தாவரங்களின் அழிவிற்கு காரணமென  ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதே காலக்கட்டத்தில் கடலில் வாழ்ந்த உயிரினங்களுக்கு எவ்வித  பாதிப்பும் நிகழவில்லை. பனியுகம் 
நிலத்தில் ஏற்படுத்தும் அதே பாதிப்பை
தான் கடலிலும் ஏற்படுத்தும். கடல் 
வாழ்உயிரினங்கள் தப்பிப்பிழைத்து கொண்டன. அப்படியென்றால் தரையில் வாழ்ந்த உயிரினங்கள் மட்டும் எப்படி மாயமாக மறைந்து போயிற்று !?

அக்காலத்தில் கடலில் சென்று 
வேட்டையாடும் திறனை நாம் முழுதாக  பெற்றிருக்கவில்லை. இல்லாவிட்டால் 
அவைகளையும் கபளீகரம் செய்திருப்போம்.
அது மட்டுமல்ல நாம் சென்ற இடங்களில் பூர்விகமாக வாழ்ந்த மற்றைய மனிதகூட்டங்கலான நியண்டதல்,  
ஹோமோ ஃபுளோரெசியென்ஸ்   
போன்றோரும் கூட கூண்டோடு அழித்து போனார்கள்.

சேப்பியன்ஸ் - பதிவு 6

நரேஷ் 03-29-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I