கோதுமையை நாம் வளர்க்கவில்லை அதுதான் நம்மை வளர்க்க வைத்தது.

மரபு அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால். கோதுமை சிறப்பாக வெற்றியடையந்த ஒரு தாவர இனமாகும். இன்று பூமியின் மேற்பரப்பில் இதன் அளவுக்கு வேறு எந்த தாவரமும் பல்கிபெருகியதில்லை. மனிதனால் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு பயிரிடபடுகிறது. 

கரடுமுரடான நிலத்தை கோதுமையின் வளர்ச்சிக்கு உகந்தவாறு தயார்படுத்தும் போது அந்த நிலத்தில் பூர்விகமாகயிருந்த மற்றைய மரங்களையும், தாவரங்களையும் அழித்து. நிலத்தை உழுது பண்படுத்தி, விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையகற்றி, மருந்து தெளித்து, பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாத்து என 
அறுவடைக்காலம் மட்டும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம். 

அதன் தேவையும் நாள்பட நாள்பட அதிகரித்துதான் செல்கிறது. நாம் கோதுமையிடம் இருந்து உணவை பெற்று கொள்கிறோம். அதேநேரம் கோதுமையும் நம்மை சிறப்பாக பயன்படுத்தி 
பல்கிபெருகி கொண்டிருக்கிறது. 
பூமியில் இன்றைய திகதியில் மிகவும் வெற்றியடைந்த தாவரம் கோதுமைதான். தன் வழியில் குறுக்கிட்ட எல்லா எதிரிகளையும், போட்டியாளர்களையும் மனிதனை கொண்டு அழித்து பெருகி கொண்டிருக்கிறது. நாம் அதற்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிஜம்! 

விளைவாக கோதுமையையே 
விதவிதமான பெயர்களில் உணவாக உண்று கொண்டிருக்கிறோம். நீங்கள் அடுத்து முறை சூப்பர் மார்க்கெட்டில் 
பொருட்கள் வாங்கியவுடன். உங்கள் கூடையை பாருங்கள். வேறு வேறு பெயரிலும் வடிவத்திலும் கோதுமைதான் நிரம்பியிருக்கும். நம் வேட்டையாடி முன்னோர்களின் பல வகையான உணவுகளை கொண்ட பட்டியலை சுருக்கியத்தில் கோதுமைக்கு முக்கிய பங்குண்டு. ஒருவகையில் இன்று 
வயது வித்தியாசமில்லாமல் 
எல்லோரும் நீரிழிவு நோயுடன் சுற்றி கொண்டிருப்பத்திற்கும் இதுவே காரணகர்த்தா. 

கோதுமையை நாம் வளர்க்கவில்லை. 
மாறக அதுதான் நம்மை வளர்க்க வைத்து கொண்டிருக்கிறது.

***
#சேப்பியன்ஸ் - பதிவு 5

#நரேஷ் 03-28-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I