Tiny Giants 3D 2014 (Documentary)

வேறும் 43 நிமிடங்களே ஓடக்கூடிய
ஓர் ஆவணப்படம். ஆனால் ஹாலிவுட் 
ஆக்க்ஷன், திரில்லர் படம் பார்த்த உணர்வு. இந்த கதையில் இரண்டு நாயகர்கள். அதே நேரம் பாம்பு, ஆந்தை, பருந்து, ராட்சத நச்சு சிலந்தி, ஒரே கடியில் வளர்ந்த மனிதனையே கொன்று விடக்கூடிய கடும் விஷம் கொண்ட வெள்ளை தேள், பூரான் என நிறைய வில்லன்கள். 

வேவ்வேறான இரண்டு சூழலில் கதை நிகழ்கின்றது. ஒன்று ஒர்க் மரங்கள் நிறைந்த பசுமையான அதேகணம் ஆபத்துகள் நிறைந்த காட்டில் வாழும் 
ஓர் இளம் அணிலையும் மற்றையது 
ஈவிரக்கமே இல்லாத பாலைவனத்தில் வாழும் ஓர் சிறிய வகை எலியினை சுற்றியும். 

மூன்று இன்ச் உயரமான ஹீரோவின் பார்வையில் உலகம் எவ்வளவு பிரமாண்டமாக தெரிகிறது. இதை 
சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். தரையில் இருந்து எலியின் / அணிலின் கண்மட்டத்தில் படமாக்கபட்டவிதம் நமக்கு மினியேச்சர் உலகத்தை காண்பிக்கிறது. வண்ண குடைக்காலான்கள், விழுந்து கிடக்கும் ஒர்க் மரத்தின் சருகுகள், வித்துக்கள் என கண்கவர் அற்புத உலகத்திற்கே அழைத்து போகிறது. புலப்படும்  அத்தனையும் கொள்ளை அழகு.
பின்னணி இசைக்கோர்வையும் சிறப்பு.

அதே நேரம் ஆபத்திற்கும், சவால்களுக்கும் கொஞ்சம்கூட  குறைவில்லை. சாதாரணமாக ஒரு அணிலை பார்க்கும் போது அதற்கு என்ன பிரச்சனை இருந்து
விட போகிறது. எவ்வளவு சுகந்திரமாகவும், இன்பமாகவும் வாழ்கிறது என அதனுடன் மனிதவாழ்வை ஒப்பிட்டு குறைபட்டு கொள்வோம். ஆனால் அந்த குட்டி ஹீரோ தினசரி வாழ்வில் எத்தனை 
சவால்களையும், போராட்டங்களையும், ஆபத்துகளையும் சந்திக்கிறது தெரியுமா? நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது, ஒரு நாள் தாக்குப் பிடிக்கமாட்டோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நரகவாழ்கை. எந்த நேரத்திலும் எந்த பக்கத்திலும் இருந்து எதிரிகள் தாக்கலாம். போர்க்களத்திற்கு ஒப்பான சூழல் கற்காலத்தில் எப்படி நம் மூதாதையர்கள். ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர் 
நோக்கி வாழ்ந்தார்களோ அதற்கு 
ஒப்பான நிலை. இப்பொழுது 
நம்மை அரசினால் உருவாக்கபட்ட 
சட்டங்ளும்  அமைப்புகளும் காப்பாற்றுகின்றன. நம்மிடம் இருக்கும் செல்வம் திருடப்பட்டாலோ, அநீதி இழைக்கப்பட்டாலோ அல்லது நம்மை 
ஒருவர் கொல்வதற்கு முயற்சித்தாலோ, சட்டத்திடம் நாம் முறையீடு செய்து 
நமக்கான நியாயத்தை பெறமுடியும். அதற்காக வரையறுக்கபட்ட தெளிவான நெறிமுறைகள் எம்மிடம் உண்டு.
விலங்குகளின் உலகில் எவ்வித  பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடையாது. டாவின்சியின் "வலியதுதான் உயிர் பிழைக்கும்" என்ற ஒரே கோட்பாடுதான் 
அணில் குளிர்காலத்திற்கு உண்ணத்  தேவையான எகோரன் (acorns) என்னும் ஒர்க் மரத்தின் வித்தினை தேவையான அளவுக்கு தனது பொந்தில் சேகரிக்கிறது. ஆறு மாதம் நீடிக்கும் குளிர்காலத்தில் முழுக்காடே பனியினால் மூடி உறைந்து போய்விடும். அப்பொழுது  தேவையான அளவு உணவு கையிருப்பு இல்லாத பட்சத்தில் பட்டினிச் சாவுதான்.
பனிக்கரடிகளுக்கு போன்று தோலில் கொழுப்பை சேகரித்து, குளிர் காலத்தில் சக்தியாக மாற்றி கொள்ளும் வகையில் அணிலின் உடல் இசைவாக்கம் அடைந்திருக்கவில்லை. குளிர்காலத்தை சமாளிக்க அதற்கிருந்த ஒரே வழி உணவினை போதுமான மட்டும் சேகரித்து வைத்துக்கொள்வதுதான்.

குளிர்காலம் நெருங்கும் சமயத்தில்  சேகரித்து வைத்திருந்த ஒர்க் வித்தின்  (acorns) அளவு மெது மெதுவாக குறைந்து ஒரு கட்டத்தில் முழுவதுமாக தீர்ந்து போகிறது. பிறகுதான் அதற்கு காரணம் இதைவிட வயதில் மூத்த  இன்னொரு அணில் என்பதும். அது களவாடி தன் பொந்தில் மறைத்து வைத்திருக்கின்றது  என்றும் தெரியவருகிறது. பிறகு என்ன பலப்பரீட்சைதான். நம் ஹீரோவால் வில்லனின் மூர்க்கத்தனமான தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. உயிரை தற்காத்துகொள்ள தப்பி ஓடுகிறது. ஸ்லொவ் மோஷனில் காட்டப்படும் 
சண்டை காட்சியேல்லாம் எதோ  
ஜெட் லீயும்  ஜக்கி ஜானும் அடித்து கொள்வது போல அதிரடியாக உள்ளது. 

தன் உழைப்பெல்லாம் சூறையாடப்பட்டு, சொந்த வசிப்பிடத்தில் இருந்து 
விரட்டப்படும் ஹீரோ அதற்கு பின்னரான சவாலை எப்படி சமாளித்தார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

அதேநேரம் இரக்கமில்லா மரண 
பாலைவனத்தில் தன் குடும்பத்தை விட்டு பிரித்து சவாலை எதிர்கொள்ள வெளிவரும் மற்றைய ஹீரோவான இளம் எலி வைல்ட் வேஸ்டில் சுற்றி திரிந்து சாகசம் புரியும் ஜோன் வெயின் (Jhon wayn) போல படுதிகிலான வாழ்கையை வாழுகிறார். 
முழுதாக விபரித்தால் திரையனுபவம்  குறைந்து விடும் என்பதால் மேலும் தொடராமல் இத்துடன் முடிக்கிறேன். 

படுசுவையான ஆவணப்படம். தவறவிடாதீர்கள்

நரேஷ் - 41

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I