வேளாண்மை புரட்சியும், வேட்டையாடி வாழ்கையும்

 வேளாண்மை புரட்சிக்கு பிறகு 
மனித இனம் பல்கி பெருகி சிறப்பாக வளர்ச்சியடைந்தது என்றாலும். வேளாண்மை புரட்சி என்பது உண்மையில் நமக்கு நாமே வைத்து கொண்ட ஒரு ஆப்புதான். காரணம் நாம் காட்டில் வேட்டையாடிகளாக வாழ்ந்த பொழுது அடுத்த நாளை பற்றிய கவலையில்லை. பல வகையான விலங்குகளை வேட்டையாடியும், காய் கனிகளை பறித்துண்டும் வாழ்ந்தோம். ஒரு வேலை அன்று எதுவும் கிடைக்காமல் பட்டினியாக இருந்தாலும் மறுநாள் எதோ ஒன்றை பெற முடிந்தது. வாழ்கை கடுமையா இருந்தாலும் சுகந்திரமாகவும் நிம்மதியாகவும் 
உலாவ முடிந்தது. 

மனிதன் வேட்டைச் சமூகத்திலிருந்து 
விலகி வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு நிலத்தை உழுது பண்படுத்தி, 
பயிரை விதைத்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சி, களையகற்றி, பிறவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்து என அறுவடை காலம் மட்டும் இரவு பகல் பாராது மிக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 

அத்துடன் முடியவில்லை. அறுவடைக்கு பிறகு தானிய களஞ்சியத்தை பிற 
இனக்குழுக்களிடம் இருந்து பாதுகாக்க 
கடும் பிரயத்தனபடவேண்டும். 
பலசாலியான ஒரு இனக்குழு திடீரென தாக்கும் போது எல்லாவற்றையும் 
விட்டு பின்வாங்கவும் முடியாது. 
சண்டை செய்தே ஆகவேண்டும். 
ஒருவேளை தோற்றுவிட்டால் பட்டினி 
கிடந்து சாக வேண்டியதுதான். 
இதுவே வேட்டையாடி சமூகமாகயிருந்தால், எதிரி இனக்குழு தம்மைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பின்வாங்கி அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடலாம். அவனிடம் கைவிட்டு சொல்லவோ அல்லது  சுமந்து செல்லவோ எதுவுமே இருக்கவில்லை. கூடினால் முதுகில் சுமந்து சொல்லும் அளவுக்கே அவனிடம் சொத்துக்கள் இருந்தன. ஆனால் வேளாண்மை சமூகத்திடம் அச் சுகந்திரம் இருக்க
வில்லை. அவர்கள் குறிப்பிட்ட வகையான உணவினை மட்டும் நம்பியிருந்தபடியால் வறட்சி அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் அவற்றை இழக்க 
நேரிடும் போது பட்டினிச் சாவுதான். 
ஆனால் வேட்டையாடிகள் பலவற்றை 
தங்கள் உணவு பட்டியலில் வைத்திருந்தபடியால் ஒன்று கிடைக்காவிட்டால் வேறு ஒன்றை 
வைத்து சமாளிக்க முடிந்தது.   

மேம்போக்காக பார்க்கும் போது வேளாண்மை சமூகம் செழிப்பாக  வாழ்ந்ததாக நமக்கு தெரிந்த போதிலும் நிஜத்தில் ஒரு நாடோடி வேட்டையாடிக்கு இருந்த சுகந்திரமும், நிம்மதியும்
விவசாயிக்கு இருக்கவில்லை (இன்றும்).
மொத்த மனித இனத்திற்கு வேண்டுமென்றால் வேளாண்மை புரட்சி நன்மை செய்திருக்கலாம் ஆனால் தனிமனிதனுக்கு துன்பத்தையே அளித்தது.
வேட்டையாடிக்கு அடுத்த நாளை பற்றிய கவலை இருக்கவில்லை அதேநேரம்  விவசாயி அடுத்த வருடத்தையும், எதிர்காலத்தையும்  நினைத்து நித்தமும் கவலைப்பட ஆரம்பித்தான். 

அதற்காக வேட்டையாடிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. அங்கும் பல இன்னல்கள் இருந்தாலும், வேளாண்மை புரட்சி நம்மை மேலும் துன்பத்திற்குள் தள்ளியது என்பதே நிதர்சனம். இதன் தொடர்ச்சியாக தான் இன்றும் நாம் ஆபிஸில் கணனிக்கு 
முன்பு அமர்ந்து சில கோப்புகளை புரட்டிக் கொண்டு எதிர்காலத்தை நினைத்து துன்பப்படுகிறோம். பரிணாமத்தில் நமது டி.ன்.எ வில் இன்னும்  வேட்டையாடியின் இயல்புகள் தான் பதியபட்டுள்ளது. 
ஆனால் வேளாண்மை புரட்சியினால் 
மீண்டு செல்ல முடியாத ஒரு பொறியில் சிக்குண்டு விட்டோம்.  

சேப்பியன்ஸ் - பதிவு 3

நரேஷ் - 03-25-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I