Racing Extinction 2015 (Documentary)

Racing Extinction என்னும் ஆவணப்படம் பார்த்தேன். அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பற்றியது. அதில் ஓர் காட்சியில் உயிரினங்களின் ஓசையை 
பதிவுசெய்து சேகரித்து ஆய்வு செய்யும்  நிறுவனம்; திமிங்கிலம் முதற்கொண்டு, சிறுத்தை, பறவைகள், சீல்வண்டு, சுறா, திமிங்கலம் என எல்லாவற்றின் ஒலியையும் சேகரித்து ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் அந்த சங்கேதங்களை ஓசை என்று கூட விழிக்கவில்லை. சங்கீதம் என்கிறார்கள். உண்மைதான் சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு கேட்டால் இனிமையான இசை கோர்வைதான். அதற்கு முன்னால்  மொசார்ட், பீத்தோவன் எல்லாம் தோற்றுவிடுவார்கள். இயற்கையே பாடிக்கொண்டிருக்கிறது. ஏனொ நமக்குதான் அதை ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்க பொறுமையில்லை. 

அதில் Kauaʻi ʻōʻō என்னும் ஓர் அழிந்து 
வரும் பறவை இனத்தை சேர்ந்த குருவியொன்றின் கிச்சலை ஒலிக்க செய்கிறார். அதுவோர் ஆண் பறவை, 
ஓசை எழுப்பி பெண்துணையை தேடுகிறது. என்று விபரிக்கின்றார். இடைவெளி விட்டு, விட்டு இரண்டு தடவை பாடுகிறது. அதற்கு பதிலாக இசைப்பாட்டு கேட்கவில்லை. 
சில பறவை இனங்கள் பாடித்தான் பெண் துணையை தேடும். பிறகு அந்த பறவை 
எந்த ஓசையையும் எழுப்பவில்லை. சலனமற்று அடங்கி போகிறது. அதுதான் அந்த பறவையினத்தின் கடைசி ஆண் பறவையாம். அதற்கு கடைசிமட்டும் துணையே கிடைக்கப்போவதில்லை. 
பிறகு அந்த இனமே பூமியிலிருந்து கூண்டோடு அழிந்து போய்விடும். 
என்பதை அவர் விவரிக்கும் போது 
என் மனது கணத்து போய்விட்டது. 
யோசித்து பாருங்கள் எவ்வளவு துன்பகரமான நிகழ்வேன. 

அந்த பறவையின் அழிவிற்கு மனிதன் பொறுப்பற்ற முறையில் இயற்கையை துஷ்பிரயோகம் செய்ததே காரணமாகும். இது போன்று இன்னும் ஆயிரக்கணக்காண உயிரினங்கள் அழிவின் விளிம்பில் 
உள்ளது. நாம் அதைப் பற்றிய எவ்வித கவலையோ, பொறுப்போ இல்லாமல் 
கடந்து போய்க்கொண்டிக்கும் போது இயற்கை தன்ஆர்வலர்கள் மட்டும் 
உயிரை பனையம் வைத்து ஆபத்தான இடங்களுக்கு பயணம் செய்து, சட்டவிரோத வேட்டையையும், விற்பனையையும் பதிவு செய்தும். அதை ஆவணப்படுத்தியும். விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
இதன் போது 2015 ஆண்டு வரைமட்டும் கிட்டத்தட்ட 800 தன்னார்வ சுற்றுசூழல் ஆர்வலர்கள் காப்ரேட் கம்பனிகளாலும், கடத்தல் மாஃபியாகளாலும்  கொல்லப்பட்டுள்ளனர். 

பல்லுயிர் ஓம்புதல் என்பதை நிஜவாழ்வில் கடைபிடிப்பவர்கள் இவ் ஆர்வலர்கள்தான். இந்த படத்தில் இன்னொரு காட்சியில் ஒருவர் இரண்டு தசாப்த காலத்திற்கு 
முன்பு மறைந்து போன Baiji வகை டொல்பினை நினைத்து கலங்குகிறார். 
என் காலத்தில் இவ் இனம் பூண்டோடு அழிந்து போய்விட்டது. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று குரல் உடைந்து அழுகிறார். 

இன்னொரு போட்டோ ஜெர்னலிஸ்ட் 
அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் அரியவகை  Manta, Mobula ray
திருக்கை மீனின் வேட்டையை ஆவணபடம்மெடுக்க மீனவர்களுடன்  சென்று அம்மீன் கொடூரமாக வேட்டையாடும் அந்த காட்சியை பார்க்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.

தன்னார்வலர்கள் புதியதோர் ஆயுதத்தை கையிலெடுத்து அழிந்துவரும் உயிரினங்களை காப்பாற்ற நினைக்கிறார்கள். அம் முயற்சியில் குறிப்பிட்ட அளவில் வெற்றியும் அடைகிறார்கள். அழிந்துவரும் உயிரினங்களை அழகாகபுகைபடமெடுத்து அவை நம்மை பத்திரிகை, இணையம் ஊடாக வந்தடைய செய்கிறார்கள். 
Obscure digital என்னும் கலையின் மூலம், ப்ரஜெக்டர் ஊடாக பேரும் நகரங்களின் உயரக்கட்டிடங்களின் மீது வண்ணமயமான குறும் ஆவணபடங்களை திரையிட்டு மக்களின் மனதில் அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளின் நிலையையும் அவர்களின்  கடமையையும் உணர்த்தி தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மைதான். புகைப்படத்திற்கு அபார சக்தியுண்டு. மின்னல் வேகத்தில் நின்று பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் மனிதனை நிறுத்தி ஒரு நொடியில் ஆயிரம் கதைகளை பேசி இயற்கையின் மீதான அவனின் பொறுப்பை உணர்த்திவிடுகிறது.

பூமி வெப்பமடைதலுக்கு காபனீர்ஒக்சைடு (Co2) வாயுவின் வெளியேற்றம் முக்கியகாரணம். பிரதானமாக மோட்டார் வாகனங்களும். தொழிற்சாலைகளும் தினமும் பேரும் அளவில் Co2 வை வெளிவிடுகின்றன. அது  வளிமண்டலத்துடன் கலந்து பூமியை வெப்பமடைய செய்வதுடன். அதில் பேரும் அளவு சமுத்திரத்தில் கலந்து கடல் நீரை அமிலமாக்கி அதில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களை அழித்து கொண்டிருக்கிறது.

அதேபோல விலங்கு பண்ணைகளில் 
இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவும் co2 நிகரான பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. நம் உணவு முறையை மாற்றுவதன் மூலம், பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். 
அது உண்மையும் கூட. மாடு, கோழி, 
முட்டை, பால் உணவை குறைப்பதன் 
மூலம் நேரடியாக நீங்கள் மாட்டினையும், கோழியையும் காப்பாற்றவில்லை. 
அந்த மாடு புல்லை தின்று கழிவாக வெளியேற்றும் மீத்தேனின் அளவை குறைத்து, கடல் அமிலமாவதை தடுக்கிறீர்கள். 

இன்னும் 200 வருடங்களின் பின்னர் நம் சந்ததியினர் திருப்பி பார்த்து முன்னோர் எப்படி பொறுப்பில்லாமல்  இத்தனை உயிர்களை அழியவிட்டார்கள் என்று நினைக்ககூடும். பல வருட கூர்ப்பில் உருவான அற்புதமான உயிரினங்களை அழியவிட்டு பார்த்து கொண்டிருக்கிறோம். "ஐயோ பாவம்! யாரோ ஒருவர் இவற்றை காப்பாற்ற மாட்டார்களா" என்று சொல்லிக்கொண்டிருக்காமல், நம்மால் முடிந்ததை செய்யவேண்டும். இது நம் 
பூமி, நாம் தான் பேணிகாக்க வேண்டும். என்பதே இந்த ஆவணப்படம் சொல்லும் செய்தி.

நரேஷ்  - 40

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I