மோசமானவன் மனிதன்

தப்பிப்பிழைத்தல் வரமா, சாபமா ?

பரிணாமத்தில் ஒரு உயிரினத்தின் வெற்றி அதன் மரபஅலகின் எண்ணிக்கையை கொண்டு அளக்கபடுகிறது. அதாவது  அதிகப்படியான எண்ணிக்கையை 
கொண்ட இனம் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஆனால் அந்த வெற்றி தனிப்பட்ட ரீதியாக ஒரு உயிரி அடைந்த துன்பத்தை பற்றி கணக்கில் கொள்ளாது. 

டயனோசர்கள் இன்று பூமியிலிருந்து 
முற்று முழுதாக அழித்து போய்விட்ட 
ஓர் உயிரினம். அதன் உயிர்ப்பான மரபு அலகுகள் எதுவும் இப்பொழுது 
மிச்சமில்லை. இயற்கையையுடன் 
போராட திராணியற்று அழிந்து போய்விட்டது. ஆனால் வாழ்ந்த 
வரைக்கும் சுகந்திரமாக காட்டில் சுற்றி திரிந்து தனக்கு பிடித்த இணையுடன் 
சேர்ந்து வாழமுடிந்தது.

அதே நேரம் இன்று பண்ணை விலங்காக உலகில் அதிகமா இருக்கும் மாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பாருங்கள். இன்றைய திகதியில் காட்டிலிருக்கும் எந்த ஒரு பாலுட்டியை விடவும் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். அதன் வாழ்வுதான் எத்தனை துன்பகரமாக மாறிவிட்டது. 
ஆதியில் தன் இனத்துடன் சேர்ந்து பசுமையான காட்டில் சுற்றி திரிந்தது 
போல அதனால் இப்பொழுது வாழமுடியாது. 
வாழ்வும், சாவும் அந்த பண்ணையின் கூரையின் கீழே தான். கறவைக்காக செயற்கையாக கருவுட்டப்படும். 
பிடித்த இணையுடன் ஜோடி சேர முடியாது. அதற்கு பிறக்கும் கன்று பெண்ணாக இருந்தால் அதற்கும் அதே நிலைமைதான். ஆணாக இருக்கும் பட்சத்தில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு இறைச்சிக்காக வேறொரு இடத்தில் வளர்க்கபடும். ஓடி விளையாட அனுமதியில்லை. பெரிதாக வளரும் மட்டும் கால்களை கூட நகர்த்த முடியாத சிறிய இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும்.  அப்பொழுதுதான் மிருதுவான மாட்டு  மாமிசத்தை நாம் சந்தையில் பெறமுடியும். கடைசியில் அறுக்கபட கன்வயர் பெல்ட்டில் நகரும் போதுதான் தன்னை ஒத்த இன்னொரு மாட்டை நுகர்ந்து பார்க்கும் வாய்ப்பு சில நொடிகள் கிடைக்கும். 
பின்பு இயந்திரத்தின் கூர்மையையான பற்களினால் கழுத்தறுக்கபட்டு கொல்லப்படும்.  

மற்றும் பன்றி, உலகில் அதிகமாக காணப்படும் பறவையினங்களில் 
ஒன்றான கோழிகளுக்கும் இதே 
துயரக்கதைதான். நம்மை போலவே  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் 
காதல், பாசம், இன்பம், துன்பம், வலி, ஸ்பரிஸம் போன்றே உணர்வுகள் உண்டு. நாம் அவற்றை கண்டுக்கொள்வதே 
இல்லை. நம் சுயநலத்திற்காக அவற்றை பெரும் துன்பத்திற்கு உற்படுத்துகின்றோம். 

யோசித்து பாருங்கள் எண்ணிக்கையில் அதிகமா இருப்பது மரபியல் ரீதியாக வெற்றியாக இருக்கலாம். ஆனால் தனி 
ஓர் உயிரிக்கு துன்பம் மட்டுமே மிச்சம். 

சேப்பியன்ஸ் பதிவு - 4

நரேஷ்  03-26-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I