பிரேக் அப் குறுங்கதைகள்

ஆசிரியர்: அராத்து

அராத்து எனக்கு "நீயா நானாவின்" 
மூலமாக தான் அறிமுகமானார். அவர் எழுத்தாளார் என்பதும் சாருவின் 
நெருங்கிய நண்பர் என்பதும் சமீபத்தில் தான் தெரியவந்தது. அவரின் பேச்சு, சிந்தனை எனக்கு பிடிக்கும். சில 
நேரங்களில் உளறுவது சுத்தமாக 
பிடிக்காது.

தொடர்ந்து தீவிர இலக்கியத்தை படித்தபடியால், கொஞ்சம் கணம் குறைந்ததாக ஏதாவது வாசிப்போம் 
என்று தேடிய பொழுது இந்த புத்தகம் கண்ணில்பட்டது. அட்டைபடம் வேறு 
அதை உறுதிப்படுத்திற்று. தலைப்பிலேயே எதை பற்றிய புத்தகம் என்பதை அனுமானித்துக் கொண்டேன்.

படிக்க ஆரம்பித்தால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. அராத்தின் எழுத்தில் உள்ள டார்க் ஹியூமர் எனக்கு பிடிக்கும். அத்துடன் இதில் காமமும் கை கோர்த்துள்ளது ! விடலை பருவத்தில் மறைத்து வைத்து 
படித்த "பிரியா"  பத்திரிகையின் நினைவு வந்து போனது. 

ஆண், பெண் உறவுசிக்கல் பிறகு 
பிரேக் அப் இதுதான் ஒவ்வொரு கதையும். சில உண்மை மாந்தர்களின் கதைகளை தான் புனைந்து உள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். புத்தகம் முழுவதும் 
வகை வகையான காதல் பிரிவுகளை பார்க்கமுடிகிறது. புத்தகத்தின் 95% கதைகளிலும் பெண்கள் மட்டும் தான் படித்தாண்டியுள்ளார்கள். அதுவும் கலவிக்காக, என்பதை தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 
ஒரு பெண் உடல் சுகத்தினை முதன்மைபடுத்தி மட்டும் கூடா நட்பை நாடமாட்டாள். பிறகு வேணுமென்றால் கலவியில் முடியலாம்.  இந்த புத்தகத்தில் ஒரு சில கதைகளை தவிர மற்றை 
பிரேக்அப்ஸ் எல்லாம் கள்ளக்காதலால் முறிவதாக உள்ளதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரேக்அப்க்கு 
கள்ளத்தொடர்பு மட்டுமே காரணமல்ல,
காமம், தாண்டிய பல விடயங்கள் காரணமாய் அமையலாம். 

தீவிர இலக்கிய அலசலுக்கு எல்லாம் 
இதில் சுத்தமாக இடமில்லை. குசலாக வேணுமென்றால் வாசிக்கலாம். சுவாரசியமாகவும், எளிதாகவும் கதையைசொல்வதுதான் அராத்தின் பலமே, அந்த வகையில் பாராட்டுக்கு உரியவர்தான். 
பின் குறிப்பு:
படிக்கும் பொழுது புத்தகத்தை இறுக்கி பிடித்து கொள்ளுங்கள். கை நம் கட்டுப்பாட்டில் இருப்பது ரொம்ப முக்கியம்.

நரேஷ்  03-28-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I