கனவு திரை (வாசிப்பனுபவம்)
எழுத்தாளர் நரேஷ் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக எழுதிய சினிமா விமர்சனத்தில் சிறந்த 30 படங்களின் புனைவு கட்டுரை தொகுப்பு தான் " கனவு திரை ". தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொரியன், இன்னும் சில வேற்று மொழிப்படங்கள், வெப்சீரிஸ், மற்றும் ஆவணப்படங்கள் என எல்லாம் சேர்ந்த கதம்பம் தான் "கனவு திரை" எனக்கு பிடித்த படங்கள் என்று யோசித்தால் இப்போதைக்கு நினைவில் வருவது, அவள் ஒரு தொடர்கதை, பூவே பூச்சுடவா, கடலோர கவிதைகள், அழகன், 7ஜி ரெயின்போ காலனி திருடா திருடா போன்ற படங்கள். இவற்றை பல முறை பார்த்த அனுபவம் உண்டு. இனியும் டிவியில் போட்டால் பார்ப்பேன். ஆனால் படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பதை தவிர எனக்கு சினிமா பற்றிய ஆர்வம் பெரிய அளவில் இல்லை. தமிழ் சினிமா தவிர வேற்று மொழிப்படங்கள் எதையும் அதிகம் பார்த்த அனுபவம் இல்லை. அதிலும் உலக சினிமா பற்றிய அறிவு எள்ளளவும் கிடையாது. சினிமா பற்றிய விமர்சனம் என்று பார்த்தால் சன் டிவி சினிமா விமர்சனம், விகடன் விமர்சனம், அதையும் தாண்டி முகநூலில் கண்ணில்படும் விமர்சனம் இவை தான் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகம் இது போன்ற சினிமா