கனவு திரை (வாசிப்பனுபவம்)

எழுத்தாளர் நரேஷ்  அவர்கள் கடந்த  நான்கு வருடங்களாக எழுதிய சினிமா விமர்சனத்தில் சிறந்த  30 படங்களின் புனைவு கட்டுரை தொகுப்பு தான் "கனவு திரை". தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொரியன், இன்னும் சில வேற்று மொழிப்படங்கள், வெப்சீரிஸ், மற்றும் ஆவணப்படங்கள் என எல்லாம்  சேர்ந்த கதம்பம் தான்
 "கனவு திரை"

எனக்கு பிடித்த படங்கள் என்று  யோசித்தால் இப்போதைக்கு நினைவில் வருவது, அவள் ஒரு தொடர்கதை,  பூவே பூச்சுடவா, கடலோர கவிதைகள், அழகன், 7ஜி ரெயின்போ காலனி திருடா திருடா  போன்ற படங்கள். இவற்றை பல முறை பார்த்த அனுபவம் உண்டு. இனியும் டிவியில் போட்டால் பார்ப்பேன். ஆனால் படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பதை தவிர எனக்கு சினிமா பற்றிய ஆர்வம் பெரிய அளவில் இல்லை. தமிழ் சினிமா தவிர வேற்று மொழிப்படங்கள் எதையும் அதிகம் பார்த்த அனுபவம் இல்லை. அதிலும்  உலக சினிமா பற்றிய அறிவு எள்ளளவும் கிடையாது. 

சினிமா பற்றிய விமர்சனம் என்று பார்த்தால் சன் டிவி சினிமா விமர்சனம், விகடன் விமர்சனம், அதையும் தாண்டி முகநூலில் கண்ணில்படும் விமர்சனம் இவை தான் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகம் இது போன்ற சினிமா பார்வையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருக்கிறது. எப்படி என்று கேட்டால், சினிமாவின் outline மட்டும் சொல்லிவிட்டு, நிறை, குறைகளை  பேசுகிறது, முக்கியமாக  சில  இடங்களில் spoiler alert  கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சினிமா பற்றியும் ஆசிரியர் தனது  கருத்து, பின்னணி அறிவியல், எவ்வாறு படத்தை அணுகுவது, எந்த சூழ்நிலையில் படத்தை பார்க்க வேண்டும் என்பது முதல் கொண்டு பதிவிட்டு இருக்கிறார். இதிலிருந்து அவரின் சினிமா பற்றிய ஆழமான  புரிதலும், சாதாரண சினிமா விமர்சனத்தை ஒரு சுவராசியமான புனைவு கட்டுரை தரத்தில்  தருவதற்கு அவர் எடுத்து கொண்ட அர்ப்பணிப்பு பிரமிக்கவைக்கிறது.

முதல்  நான்கு தலைப்புகள் மட்டுமே தமிழ் மொழியில் வந்தவை. முதலாவது படம் " நீ தானே என் பொன்வசந்தம் " இந்த படத்தை பற்றிய அலசல்  அட்டகாசம். இந்த படம் எனக்கு பிடிக்கும் பெரியதாக  கொண்டாடப்படவில்லை என்ற வருத்தம் உண்டு.  இந்த படத்தில் சமந்தா நடிப்பு அற்புதமாக இருக்கும். கோபம், புன்னகை, அன்பு ஏக்கம் எல்லாவற்றையும் வார்த்தைகள் இன்றி கண்கள் மூலமாக நமக்கு கடத்துவார்.மேலும்,இசை, பாடல் எல்லாம் அருமையாக இருக்கும். குறிப்பாக  "முதல் முறை பார்த்த ஞாபகம் பாடலும்,  "சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக "
இந்த இரண்டு பாடலும் எத்தனை  முறை கேட்டாலும் நெஞ்சை கீறி செல்லும் வலிமிகுந்த பாடல்கள்.

"ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா,
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா, வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ? தேங்கி போன ஒரு நதியேன இன்று நானடா...."
நேசிப்பவர்களிடம்  ஈகோ பார்க்க கூடாது என்பதை கருவாக கொண்ட  அழகான காதல் படம் "நீ தானே  பொன்வசந்தம்"

இரண்டாவது படம் 96. இன்று வரை  ராம் ஜானு கதாபாத்திரங்கள் பேசப்பட்டு வருகிறது. மிக நேர்த்தியான கட்டுரையாக இதை  செதுக்கியுள்ளார். இந்த படம் வந்த போது நிறைய முகநூல் விமர்சனம் வாசித்து இருக்கிறேன் அதிலிருந்து மாறுபட்ட கோணத்தில்  இருந்தது.. அவ்வளவாக  96 படம் ஈர்க்கவில்லை. ஆசிரியர் ராம் ஜானு பற்றிய கதாபாத்திரங்கள் பற்றி எழுதியது, என் எண்ணத்தின் பிரதிலிப்பாக இருந்ததால் , இந்த இரண்டு கட்டுரைகள் வாசித்ததே, தொடர்ந்து இருக்கும், வேற்று மொழி படங்களை  தொடரக்காரணம் ஏனென்றால் நான்  இவரின்  சுவாரசியமான எழுத்து நடையில் கிளீன் போல்டு.

வாசிக்கும் போதே பார்க்க வேண்டும் என்ற ஆவலை  தூண்டிய படங்கள்.Scam 92, photograph, Bicycle Thieves family man, malika the lion queen, failan,breaking bad,the haunting hill house, Whats Eating Gilbert Grape, A bittersweet life. Rome என்ற படத்தின் விமர்சனம் மட்டுமே இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதி இருக்கலாம் என தோன்றியது.

"நம் சுயநலத்துக்காக அறத்தை மீறி  மற்றவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும்" என்று வாழ்ந்தால், கடைசியில் நம் வாழ்க்கையும் நாசமாகப் போய்விடும் என்பது தான். 

"பல வருட கூர்ப்பில் உருவான அற்புதமான உயிரினங்களை அழியவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "ஐயோ பாவம்! யாரோ ஒருவர் இவற்றைக் காப்பாற்ற மாட்டார்களா" என்று சொல்லிக் கொண்டிருக்காமல், நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இது நம் பூமி, நாம் தான் பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த ஆவணப்படம் சொல்லும் செய்தி.

காதல், பாசம், வலி, வன்மம், திகில், சைக்கோ  மனநிலை, கிரைம் என ஒவ்வொரு படமும்  ஒவ்வொரு விதமான  உணர்வுகளை  பிரதிப்பலிக்கும். சினிமா ஆர்வம் உள்ளவர்கள்/ அல்லதோர் என்ற பாகுப்பாடு இல்லாமல் நல்ல ரசனை உள்ளோர் அனைவரும் தவற விடக்கூடாத புத்தகம் கனவு திரை 

Naresh பேரன்பும் & வாழ்த்துக்களும்

✍️கவிதா சுந்தர் ❤ Kavitha Sundar

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I