நவரசா (2021)

ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் படி நவரசா எந்தோலோஜியை இன்று தான் பார்த்து முடித்தேன். எல்லோரும் வறுத்து எடுத்து விட்டார்கள். அதனால் நான் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
இந்த தொடரில் வசந்தின் "பாயாசம்" அற்புதம்!, யோகி பாபு நடித்த "Summer of 92"அபத்தத்தின் உச்சம்!, உருவக்கேலி நிரம்பிய, மூன்றாம் தர நகைச்சுவைக் காட்சிகள் குவிந்த நரகம். பீ, குசு, மூத்திரம் போன்றவற்றை திரையில் காட்டினால் நகைச்சுவை என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பைத்தியக்காரக் கதையும், இயக்கமும். இந்த படத்தில் என்ன மயிரை இயக்குநர் சொல்லவருகிறார் என்று புரியவில்லை.
ஒரு முதிர்கன்னியின் துயரத்தை கடைசியில் தன் "பீ" நகைச்சுவை மூலம் அசிங்கப்படுத்தி இருப்பார்.

நக்சலைட், ஈழம் கதையில் வருவது போல போராளிகள் பஞ்சு டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள். "ரௌத்திரம்" கதையில் விதவை தாய் சூழ்நிலைக் காரணமாக தன் சுயவிரும்பம் இல்லாமல் உடலுறவு கொள்கிறாள், அதனால் மகளினால் சாகும் மட்டும் வெறுக்கப்படுவதெல்லாம் சுத்த அபத்தம். சாகும் வரைக்கும் அவள் அப்படியே தியாகச் செம்மலாக இருந்து சாகவேண்டும் என்று சொல்ல வருகிறார்கள் போல....!

இவர்களுக்கு 30 நிமிடத்தில் கதை சொல்லத் தெரியவில்லை. எத்தனை எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்கள் அவர்களை கதை எழுதப் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாம் தானே நொட்டுவேன் என்றால் இப்படி குப்பையாக தான் வரும்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I