Kuruthi (2021)

Kuruthi (2021)
(மலையாளம்)

நமக்கு மதப்பற்று, இனப்பற்று இருக்கலாம். அது இயல்பானது தான், அதுவே ஓவர் டோஸாகி வெறியாக மாறிவிடக்கூடாது. பின்பு நீங்கள்
எதனை காப்பாற்றுவதற்கு புறப்பட்டிர்களோ அதற்கு இழுக்கை 
தேடி வைத்து விடுவீர்கள். நீங்கள்
சும்மா இருந்திருந்தாலே அது
இவ்வளவு காலம் இருந்தது போல
தன் பாதையில் அமைதியாக
பயணித்து கொண்டிருக்கும்.
ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உங்களை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைகள் எல்லாம் சோடிக்கப்பட்ட கற்பனை கதைகள். மனித இனமே
இந்த கதைகளை சுற்றித்தான்
இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதன் பயணத்திற்கு இது போன்ற கதைகள் தேவைப்பட்டன. மனித குலத்தின் நிலைத்திருத்தலுக்கு அவனின் இந்த கற்பனைத் திறனே காரணம். பணத்தை பாருங்கள் அது வெறும் காகிதம் தான் அதற்கு ஆயிரம், நூறு, பத்து என்று பெறுமதி இருப்பதாக அரசாங்கம் சொல்வதால் நம்புகிறோம்.
அதே அரசாங்கம் நாளைக்கே இது பெறுமதி இழக்கிறது என்றால் அது மீண்டும் வெறும் காகிதம் ஆகிவிடும். ஒரு கதையை நம்பும் வரைக்கும்
மட்டும் தான் அதன் மேல் புனையப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம்
உயிர்த்திருக்கும் 

மனிதனின் இன்னொரு அதிமுக்கிய கற்பனை கதை சொர்க்கம், நரகம், இம்மை, மறுமை இதை நீங்கள் நம்பலாம். அடுத்தவரை பாதிக்காத வரையில் தவறில்லை. ஆனால் வெறித்தனமாகப் பற்றுக்கொண்டு உங்கள் வாழ்நாள் முழுவதையும் தொலைத்து, பாவம் உங்கள் உயிர் பிரிந்த பிறகு நீங்கள் இவ்வளவு
காலம் மோசமாக ஏமாற்றப்பட்டதை உணரக்கூட முடியாது.
அதே போல உங்கள் பாவப்பட்ட செய்கைக்கு எல்லாம் புனித
நூல்களில் மேற்கோள்களை தேடாதீர்கள். இன்னும் நூறு வருடங்களில் தகவல் (data) தான்
கடவுள். சகமனிதனை நேசியுங்கள், அவன் மோசமானவனாக இருந்து உங்களை தாக்கினால் திருப்பி தாக்குங்கள். ஆனால் உலகில் எங்கோ ஒரு மூலையில் உங்கள் மத,இன குழு மோசமாக வஞ்சிக்கப்படுகிறது என்று உங்கள் பக்கத்து வீட்டை கொளுத்தி விடாதீர்கள்! இதனால் ஒரு மயிரும் மாறாது! வெறுப்பு வளர்ந்து குட்டி போட்டு உங்கள் சந்ததியை தான் வதைக்கும்.

என்னுடைய "கனவு திரை" Kindle புத்தகத்தில் மத அரசியல் சார்ந்து அதிகம் எழுதிவிட்டேன். அதனால் இது போதும். இனி நேராக விஷயத்திற்கு வருவோம். இதுவரை படத்தின்
கதையை சொல்லவில்லை.
மதத்துவேசம் தான் கதையின்
அடிநாதம். சினிமாவில் இதுவரை பலவாறு சொல்லப்பட்ட கதை தான். இங்கு புதிய வடிவத்தில் வந்து அசத்தி உள்ளது. பக்கச் சார்பற்று இருபக்கமும் சமமாகப் பயணித்துள்ளது. இது காலத்தின் தேவை. குறைகள் என்று சொல்ல எதுவும் கிடையாது. ஒரு தலைப்பு செய்தியை இரண்டு மணிநேரம் திரைக்கதையாக்கி உள்ளார்கள். ஒரு விறுவிறுப்பான நாவல் படித்த உணர்வு. எல்லோரும் கட்டாயம் இந்த படத்தை பாருங்கள்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I