Posts

இரண்டாவது ஆப்பிள்

Image
Steve Jobs  பத்தி என்னுள் ஒரு சித்திரம் இருந்தது ! இந்த புத்தக அட்டை படத்தில் உள்ள இந்த உருவமும்,   ஆப்பிள் போனையும்    சேர்த்து என் மனதில் அவர் குணாதிசயங்களைக் கற்பனை செய்தும் கொண்டேன். பொதுவாக இந்த் மாதிரி சாதனையாளர்கள் கதை எல்லா ஒரேமாதிரியாக தான் இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தை முழுசாக படித்தது.

நீ தானே என் பொன்வசந்தம்

Image
என் மனசுக்கு நெருக்கமான (நெருடலான) சில படங்களை மறுமுறை பார்க்ககூடாது என நினைத்து கொள்வேன்  அந்த பட்டியலில் இருந்த   ஒரு படம் தான் நீ தானே என் பொன்வசந்தம்.இந்த படத்தை   பார்க்காமலிருக்க காரணம் ,  நித்தியா கதாபாத்திரம் எனக்குள்  ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியை இன்று வரை என்னால் தாண்டி வரமுடிவில்லை.   கடந்து வந்து பாதையின் சில கருப்பு பக்கங்களை எனக்கு ஞாபக படுத்திவிடும். சரியாக 7 வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கும்   ஆசை வந்தது சில நேரங்களில் நாஸ்டால்ஜியாவும் பிடிக்கும்.   ஏக்கங்களும் ,  பரிதவிப்பும் இல்லாத வாழ்க்கையில் என்னத்தான் சுவையிருந்திடபோகுது. புதுவித அனுபவத்தை பெற   இந்த படத்தில் நித்தியாவின் முகத்தை மட்டும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பாருங்கள் அதுதான் இந்த படமே அந்த கோபம் ,  புன்னகை ,  அன்பு ,  குறும்பு ,  ஏக்கம் ,  என தன் முகபாவங்களினுடாக வருணுக்காக பரிதவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் வார்த்தைகள் இன்றியே மிக அழகாக நம்மனதுக்குள் கடத்தி விடுவாள். கூடவே உங்களுக்கு பிரியமானவளை மனதில் நி...

அளவாய் குடித்து தெளிவாய் இருப்போர்

Image
கடைசியாக ஆசிர்வதிக்கபட்ட சோம்பேறிகள்  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  பதிவிட்டேன்.  அதில் நான் மது அருந்துபவர்கள் எல்லோரையும் சாடவில்லை. குடிப்பவர்களுக்கு, அதிலேயே குளிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.வாரத்திற்கு ஒரு முறை அல்லது விசேஷ தினங்களில், சிலர் தினம்தோறும் குடித்தாலும் அளவாக குடித்து  பொண்டாட்டி, பிள்ளைகளுக்கு எந்தவித தொல்லையும்  இல்லாமல். அவர்களின் தேவையும் பூர்த்தி செய்து தான்  உண்டு, தன் குடியுண்டு இருப்பவர்கள் ஒரு வகை. அவர்களால்  குடும்ப/சமூக அமைப்பிற்கு பாதிப்பு மிககுறைவு இன்னோரு ரகம் உண்டு கை, கால் எல்லாம் நல்லாதான் இருக்கும் ஆனால் சோம்பேறிதனத்துல வேலைக்கு போகாமல், தெருமுனை, பஸ் ஹோல்டு, கடைதெரு என சிலகுறிப்பிட்ட இடங்களில் மலம் கழிக்க போற மாடுலேஷன்ல குத்தவச்சு உக்காந்து ஒரு குரூப் வீண்கதை பேசிட்டு  இருப்பானுக தெரியுமா? முற்று முழுதாக அந்த ஜந்துக்களை பற்றிய பதிவுதான். ஆசிர்வதிக்கபட்டசோம்பேறிகள் சமூக அக்கரையில் நேரம் ஒதுக்கி எழுதிய கட்டுரை. எனக்கு தெரியும்.சிலர் உங்களை சாடியதாக நினைத்து...

Arctic (2019)

Image
No Spoilers அது என்னமோ தெரியல சர்வைவல் படங்களின் மீது எனக்கு தீராக்காதல் ! கிட்டதட்ட Imdb ல நல்ல ரேட்டிங் உள்ள சர்வைவல் படம் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இப்போ புதுசா ஒன்னு வந்தாலும் விடுறது இல்லை. ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி ரேட்டிங் பார்த்து படம் பாக்குற பழக்கம் எல்லாம் கிடையாது. இல்லை அப்பிடி ஒன்னு இருக்கதே தெரியாதுனு சொல்லலாம். அந்த நேரத்துல நல்ல உலக சினிமா ரசனையுள்ள ஒரு மலையாளி நண்பன் இருந்தான். (பின் நாட்களில் அவன் மூலமாகதான் Imdb அறிமுகம் கிடைச்சுது) அவன்கிட்ட நல்ல சர்வைவல் படமா சொல்லுடானு கேட்டேன் "அடர்ந்த காட்டுல மாட்டிகிட்டு சாப்பாடு, தண்ணி இல்லாம இயற்கையோட போராடி தப்பி பிழைச்சு வார மாதிரி இருக்கனும்னு விவரணையா சொன்னேன்" சிரிச்சுகிட்டே  "அந்த அளவுக்கு ஒருத்தன் கஷ்டப்படுறத பார்க்கும் அளவுக்கு உனக்கு ஏன்டா இப்படி ஒரு கொலவெறினு விளையாட்ட கேட்டான் !" ஒரு நிமிஷம் இந்த மாதிரி படம் பாக்குறதுக்கு இப்பிடியும் ஒரு காரணம் இருக்குமானு யோசிச்சு பார்த்தேன். எனக்கு அப்பிடி தோணல, மாறாக எனக்கு தன்னம்பிக்கையை தந்துச்சி. கடைசி மூச்சு வரை போராடனும், ...

Badla (2019)

Image
No Spoilers இந்த படத்தை பார்க்க Pink படம் தான் காரணம். அதுல அமிதாப் பச்சனும், டாப்ஸியும் செம்மயா பண்ணிருப்பாங்க. இதுலயும் அதே ஜோடி நிச்சயமா நல்லா இருக்குன்னு நம்பினேன் வீண் போகல. இன்னொரு ஒற்றுமை வேற ரெண்டு படத்துலையும் அமிதாப் வக்கீல், டாப்ஸி அவரோட கிளைன்ட். ஆனால் Pink படம் கோட் ட்ராமா வகை. Badla திரில்லர், மிஸ்ட்ரி வகை. Who is the killer !?  இது தான் படத்தின் ஒரு வரி கதை. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்துல பார்வையாளனை ஊகிக்க விடாம அவனை எந்த அளவுக்கு குழப்பமுடியுமோ அது வரை குழப்பி, படத்தின் கடைசி கட்டம் வரைக்கும் ஒரு முடிவுக்கு வரவிடாம குழப்பத்தில் வைத்து இருப்பதில் தான் இயக்குனரின் திறமை இருக்கு அதை Sujoy Ghosh சிறப்பாக பண்ணிருக்காரு. திரில்லர் விரும்பிகளுக்கு இதை விட பெரிய விருந்து என்ன இருந்திட போகுது! நெய்னா (Taapsee) கல்யாணமான இளம்பெண் தொழிலதிபர். ஒரு நாள் (கள்ள)காதலனுடன் ஓட்டல் அறையில் தனியா இருக்கும் போது திட்டம்மிட்டு கொலைவழக்குல மாட்டிவிடப்படுறா, எப்படின்னா ? அறை உள்பக்கமா பூட்டி இருக்கு. அவளையும் காதலனை தவிர வேறுயாரும் உள்நுழைய வாய்ப்பி...

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Image
No Spoilers எதிர்பாரா சந்திப்பு - ஊடல் - கூடல் - ஊடல் - கூடல் - பிரிவு - கூடல் = ? காதலை மட்டும் எத்தனை தடவை படமா எடுத்தாலும் புதுசா பார்க்குற மாதிரியே இருக்கும்,சலிப்பே தட்டாது. மனுசனா   பிறந்து காதலிக்காம சாகுறது எல்லாம் பேரும் கொடுமை. அந்த சுகத்தை ஒரு முறையேனும் வாழ்க்கையில் அனுபவிச்சிடனும். சண்டை, பொறாமை, கோபம், தவிப்பு, காத்திருப்பு, பரிதவிப்பு, வெறுப்பு, பிரிவு, ஏக்கம், இப்படி எதுவுமே இல்லாம ஓரு காதல் இருக்க முடியாது. அப்பிடி இருந்தா அது காதலே இல்லை. இதை படிக்கற யாராச்சும் No எங்க love matured ரொம்ப smooth தா போய்ட்டு இருக்குனு சொன்னா தயவு செஞ்சு நீங்க பண்ணுறது காதலானு சரி பார்த்துக்கிருங்க ! ஊடலும், கூடலும் இல்லாத காதல் சுகப்படாது. ஒரு நல்ல காதல் படத்திற்கான எல்லா அம்சங்களும் கூடிவந்து கைநழுவிப்போகிறது ! கௌதம், தரா இந்த ரெண்டு கதாபாத்திரம் தான் படத்தினை கடைசிவரை தாங்கி பிடிக்கும் தூண்கள். ரொம்ப கச்சிதமா, நேர்த்தியா உருவாங்கப்பட்டிருக்கு. ஹரிஷ்கல்யாண சொக்லெட் பையனா பார்த்துட்டு இதுல முரட்டு காதலனா பார்க்கும் போது ஆரம்பத்துல இது இவருக்கு சரியா...

Photograph (2019)

Image
No Spoilers இந்த படத்தை பார்க்கும் பொழுது  ஏக்கத்துடன் கவிதை படிக்கும் உணர்வு. அதில் சோகமுமில்லை, இன்பமுமில்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்ட ஒரு சாமானிய விளிம்பு நிலை மனிதனை பார்க்கலாம். தன் நிலை குறித்து யாரையும் குறை சொல்லவில்லை, பெரிதாக வருத்தப்பட்டவனாகும் தெரியவில்லை. பொருளாதார சுமைக்கு மத்தியில் திருமண வாழ்க்கை வாழும் ஆசை இருந்தாலும் இதுவும் சேர்ந்து வாழ்கை மேலும் சிக்கலாகி போய்விடக்கூடாது என்ற பயம் அவனை சூழ்ந்து இருந்தது. பணப்பிரச்சனையும் அது சார்ந்த பொறுப்புகளையும் முடித்து விட்டு பிறகு பார்த்து கொள்ளலாம் என வாழும் நாயகன் !  வசதிவாய்ப்பு இருந்தும் எதிலும் பிடிப்பு அற்று படிப்பு, வீடு, தூக்கம் இதுவே தினசரி வாழ்க்கை என வாழும் நாயகி, சக வயது யுவதிகளிடம் இருக்கும் விடலை பருவத்திற்கே உண்டான குறும்போ, குதூகலமோ எதுவுமில்லை. முற்றும் துறந்த முனியின் சாந்தம் படர்ந்த முகம் அவளுக்கு ! 50, 30 ரூபாய்க்கு புகைப்படம் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்ட தெரு புகைப்படக்கலைஞன். அந்த தெருவில் தான் அவளை, அவன் காண்கிறான். "மேடம் ஒரு போட்டோ எடுத்துகிருங்க" இது தான் அவர்களின...