Posts

சகினா கிழவி

Image
நான் O/L படிக்கும் போது தமிழ் பாடத்தில் சகினானு ஓரு கிழவியை பற்றி சிறுகதையொன்று இருந்தது. இப்போ அநேகமாக அதை பாடதிட்டத்திலிருந்து தூக்கிருபாங்கனு நினைக்கிறேன். கிழவியின் பெயர் சில வேலை கொஞ்சம் வித்தியாசப்படலாம். 2005 படிச்சது பல வருடங்களாகிருச்சி ஆனால் கதையின் நாதத்தை இன்னும் மறக்கல.., வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான கதை! ஒருவேளை இதை சினிமாவாக எடுத்தால் கேன்ஸ் திரைப்படவிழாவுக்கே அனுப்பலாம். மனதில் தாக்கத்தை உண்டாக்கிடுச்சி கிழவியின் வாழ்கை. எனக்கு ரொம்ப பிடித்த ஓரு கதாபாத்திரம் சகினா. வகுப்பில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொண்டிருப்பேன். வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்திறாது முதுமை எய்தி மடிந்து போகும் ஓரு அபலையின் கதை. கதைப்படி அவள் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கைகளின் பிரகாரம் பெண்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது பாவமான செயல். அதனாலேயே தன் முகம் எப்படி இருக்கும் என்பது அவளுக்கு கடைசி மட்டும் தெரியாமலே போனது. ஓரு நாள் கிழவியின் மகன் அவளுடன் வாய்த்தர்க்கம் புரியும் போது "முதலில் உன் முகத்தை நீ பார்த்துறிக்கியானு" கடுந்தொனியில் கேட்பான். ...

என்னவள் இனியில்லை

Image
நேற்று காதலியின் திருமணத்திற்கு அலையா விருந்தாளியாக போயிருந்தேன், முட்டாள்த்தனமான யோசனைதான். அங்கு செல்வதற்கு முன் எனக்கு நானே சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டேன். அதற்கு கட்டுப்பட்டால் தாராளமாக போகலாம் என்பதுதான் நிபந்தனை. ஒன்று கண் கலங்க கூடாது, இரண்டாவது மனம் உடைத்து போக கூடாது, கடைசியாக சோகம் வெளியே தெரியாதபடி முகத்தை வைத்து கொள்ளவேண்டும். முகத்தில்  மெல்லிய புன்னகை தவழ்ந்தால் கூடுதல் தகைமை. முதலில் போவதே கிறுக்குத்தனமான யோசனை, விதிக்கபட்ட நிபந்தனைகள் கர்ணக்கொடூரம்! ம்ம்ம் சரி போவது என்று கடைசியில் முடிவாயிற்று. திருமணநாள், மணமேடையினை பார்த்த வண்ணம் முன் வரிசையில் அமர்ந்து கொண்டேன். என்னை அவள் எதிர்பார்த்திருக்கமாட்டாள். வருகையை தெரியப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஓரு வேலை அதுவாக நிகழ்ந்தால் நிகழட்டும். அவளருகில் என்னுடைய இடத்தில் வேறு ஒருவன் அமர்ந்திருத்தான். பாவம் அவன் மனதில் உள்ளவள் வேறு எங்கு அமர்த்திருந்தாலோ இல்லை இருப்பாளோ!? உலகம் இப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு அசாதாரணமான நம்பிக்கை.நாம் எல்லோரும் மற்றவர்களின் அன்புக்குரியவர்களை தான் நமக்கு சொ...

காதலடி நீ எனக்கு

Image
இப்பொழுதெல்லாம் நாம் சென்ற பேருந்து பயணம் நினைவுகளில் அடிக்கடி வருகிறது. ஜன்னல் ஓரமாக இருவரும் அமர்ந்திருந்தோம். இளம்காலை பொழுது இதமான காலநிலை, சில்லேன காற்று முகம் தீண்டி சென்று கொண்டிருந்தது. என் தோளில் சாய்ந்தப்படி கண்ணயர்ந்து விட்டிருந்தாய். காற்றில் கலைந்த உன் நெற்றிமுடி என்முகத்தை வருடி கொண்டிருந்த சமயத்தில் ஒருபுறம் மனதில் ஆயிரம் குழப்பங்களும் கேள்விகளும் அலைபாய்ந்து கொண்டிருந்தன நம் இருவருக்குமான உறவு என்ன? நான் எதை நோக்கி உன்னை இழுத்து செல்கிறேன்? என குற்றஉணர்ச்சியில் தடுமாறி கொண்டிருந்தேன். இதற்கு நடுவில் உன் கலைந்த கூந்தலும் நானும் பேசிக்கொண்டிருந்தொம். அது காற்றின் மேல் பழியை போட்டு மென்வருடல்களால் என்னை சீண்டி கொண்டிருந்து. அதனை சரி செய்யும் போது எங்கள் சண்டையை நீ கவனித்து விட்டாய். அத்தருணத்தில் என்னை நீ பார்த்த பார்வை நினைவு இருக்கின்றதா? ம்ம்ம்ம்ம்...., அந்நொடிதான் நான் விழுந்தேன்! ஆடைக்கலைந்த தருணத்தைவிட அக்கணம் தந்த இன்பவலி இப்பொழுது வலியாய் மட்டும் எஞ்சி நிற்கிறது.  நம்பிய இடத்தில் தொலைந்து போனோம் இருவரும். சில நேரம் ஓரு அழைப்பு, ஓரு குறும்செய்தி, ஓ...

பிக்பாஸ் 3

Image
லாஸ்லியா கவினை காதலிச்சது ஒன்னும் மகாபாவம் கிடையாது பிக் பாஸ் ஷோவில் ஷெரின் தர்ஷன் நட்பு அளவுக்கு கூட லாஸ் கவின் காதல் ரசிக்க படாமல் போனதற்கு காரணம் கவின் ஆரம்பத்தில் விளையாட்டை செய்த பல காதல் குளறுபடிகள் தான். சாக்க்ஷி உடனான உறவில் விரிசல் விழுந்த மறுகணம் சிறு இடைவேளை விடாது லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டது ஒப்பவில்லை. ஓரு வேலை ஆரம்பம் தொடக்கம் கவின் லாஸ்லியாவுடன் மட்டும் நேசத்தில் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். நம் கண்களுக்கு அந்த உறவு பேரழகாக தோன்றியிருக்கும். கவினும் மோசமானவன் இல்லை. நேர்மையானவன் தான் பாவம் அவன் நேரம் சரியில்லை. லாஸ்லியாவின் அப்பா அவளின் மேல் கோவப்பட்டது நியாயமே. மிடில் கிளாஸ் கலாச்சாரத்தில் பல கோடி மக்கள் பார்க்கும் ஓரு ரியாலிட்டி ஷோவில் தன்பிள்ளை காதல் வயப்படுவதையும், சமூகம் அதை மொசமாக வசைப்பாடுவதையும்  அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னத்தான் பெண்ணியம், பெண்சுதந்திரம் பற்றி பேசினாலும் நம் பெண் பிள்ளைக்கு தகப்பனாகும் போது அதை அப்படியே பிரயோகிக்க இயலாது. ஊர் வாய்க்கு பயந்தே வாழவேண்டிய நிலைமை. பெண்களின் கால்களுக்கு இடையில்...

தேவதையில்லா உலகு !

எனக்கு இந்த தமிழ் படங்களில் காட்டுவாங்களே ஐடி ஆபீஸ் அதுல மாதிரி சுற்றி வர அழகான பொண்ணுங்களுக்கு மத்தியில வேர்க் பண்ணனும்முனு தான் ஆசை! என்ன பாவம் பண்ணுனேனு தெரியல கடவுள் சவூதி அரேபியாவில் கொண்டு வந்து விட்டுட்டான். இப்போ வேலை பண்ற இடத்துல என்னை சுற்றி எப்பவும் தாடியும் மீசையுமாவே இருக்கும்.  காலையிலேயே இந்த மூச்சிகளை பார்க்க கடுப்பா இருக்கும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு போறது ஒன்னாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூல் போக எப்படி கஷ்டமா இருக்குமோ அதே பீலிங்!  இதுல இருக்க ஓரு நல்ல விஷயம் என்னனா டிரஸ் வாங்குற காசு, சோப்பு, கிரீம், முடி வெட்டுற காசு என எல்லாம் மிச்சம். பொதுவா  அழகுபடுத்திக்கவே தோணாது. கிழிஞ்ச சட்டையை போட்டுக்கிட்டு ஆபீஸ்ல போய்ட்டு உக்காந்து இருப்பேன். அழகா உடுத்திட்டு வந்து யாரு பாக்கபோறாணு தோணும். பெண்கள் இல்லாத இடம் நரகம்! சவூதியில ஹாஸ்பிடல், ஸ்கூல் தவிர வேறு எங்கும் வெளிநாட்டு பெண்கள்   வேலைப்பார்க்க அனுமதியில்லை. இப்போ அங்கங்கே சில நிறுவனங்களின் அக்கௌன்ட் சேக்சன்ல சிலர பார்க்க முடியுது. ஆனால் இந்நாட்டு பெண்களுக்கு அந்த கட்டுப்பாடுயில்லை வேற...

சொல்லாததும் உண்மை

Image
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் என் நண்பர்  "நரேஷ் எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் இது, படிச்சிட்டு ரிவியூ போடுங்கனு" சொன்னதும் தமிழில் மட்டுமே படித்து முடிக்க எத்தனையோ இலக்கிய ஆளுமைகள் இருக்கும் பொழுது இதை இப்போ வாசிக்கணுமா? ஓரு நடிகன் பெருசா எண்ணத்தை எழுதிட முடியுமுன்னு? நினைச்சுக்கிட்டேன். சரி வாசித்து பார்ப்போம். காரணம் இதை பரிந்துரை செய்த நண்பர் என்னை விட இலக்கிய பரீட்சயம் உள்ளவர். எதோ விஷயம் இருக்குமுன்னு மனசுல தோணுச்சி வாசிக்க முடிவு பண்ணினேன். படிக்க ஆரம்பிச்சு ஒவ்வொரு பக்கமாக புரட்டும் போதும் என்னோட தவறான முன் கணிப்பை நினைத்து வெட்கி தலை குனிந்தேன். இலகுவான மொழிநடையில் கருத்து செறிவு நிறைந்த முத்தான ஐம்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இன் நூல். எந்த ஓரு கட்டுரையும் சும்மா எழுதணும் என்பதற்காக சப்பை கட்டு கட்டியதாக தெரியவில்லை. மாறாக; உறவுகள், சினிமா, காதல், காமம், இயற்கை, ஹாடோனிசம், மொழி, கலாசாரம். என எல்லாம் அம்சங்களையும் அடக்கி லாவகமாகவும் சுவையாகவும்  சொல்ல வந்த விஷயத்தை தெள்ளத்தெளிவாக பதிவு செஞ்சிருக்காரு. கன்னடத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரின் தமிழ் பு...

ஊரிலே மிக அழகான பெண்!

ஊரிலே மிக அழகான பெண்ணொருத்தி தனக்கு ஆண் துணை தேவையில்லை என்றும். தனிமையை நேசிப்பதாகவும் இப்படியே மிகுதிநாட்களையும் வாழ்ந்து விடபோகவதாகும் புலம்பிகொண்டு இருந்தால். ஒருவேளை அவள் சொல்லுவது நிஜமாகயிருக்கும் பட்சத்தில் அதை விட ஓரு கொடும் செயல் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது! கைதேர்ந்த சமையல் வல்லுனரினால் தயாரிக்கபட்ட ஓரு அரும்சுவை உணவு பண்டம் ருசிபார்க்கப்படாமலே வீணடிக்கப்படுவது மகாபாவம்! எனக்கு தெரிந்து அவள் உரைப்பது பொய். தனிமை தந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அந்த உளறல்கள். அவளின் தேகம் பசலை கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது தேவையேல்லாம் இறுக்கி பற்றி கொள்ள அவனின் கைகளும், முகம் சாய்த்து புதைந்து தொலைய அவன்  நெஞ்சும் மட்டுமே! இதில் முரண்நகை என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் அந்த உணவு ருசிக்க தெரியாதவனின் தட்டிலேயே பரிமாறபடுகின்றது.