Posts

ப்ரஷர் குக்கர்

Image
(குறுங்கதை - 11) அந்த ப்ரஷர் குக்கரில் தான்  அவர்கள் தினமும் அவிந்துக்  கொண்டிருந்தார்கள். காலை எட்டுக்கு ஆரம்பித்தால் அன்றைய நாள் வேலை நேரம் முடியும் வரைக்கும், ஊசி நிலத்தில் விழும் ஒலியைக் கூட துல்லியமாகக்  கேட்கலாம். அவ்வளவு நிசப்தம். காற்றில் அபிநயம் பிடித்துதான் பேசிக்கொள்வார்கள்.  வார்த்தைகள் கூட ஒலியின்றி வெறும் காற்றாய் தான் வெளிவரும்.  புதிதாய் அங்கு வந்து சேருபவர்கள் அதே வேகத்திலேயே காணாமல் போய்விடுவதுமுண்டு.  சில சமயங்களில் மீறி சிக்கியவர்கள்  அழுத்தம் தாங்காது  இருக்கையிலேயே வெடித்து சிதறிக்கிடப்பார்கள். அவர்களை அப்படியே அள்ளி குப்பைத்  தொட்டியில் போட்டுவிட்டு வேலை சிறிதும் தடையுறாமல் கம்பனி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். குடும்பத்திற்காகத் தங்களை நேந்துவிட்ட ஒரு சில பலிக்கடாக்கள் மட்டும் அங்கே மீந்திருக்கும். ரெஸ்ட் ரூமில் உள்ள முகம்  பார்க்கும் கண்ணாடிதான்  எச். ஆர். சில சமயங்களில் சைக்கார்டிஸ்ட் என எல்லாமே, மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்...

ராமர் கோயில் அரசியல்

ஹோமோ செபியன்ஸ் இருக்கும் மட்டும், மதம், நாடு, ஜாதி, சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை கதைகளும் இருக்கும். அவற்றால் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத பெரும் மனிதக் கூட்டத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியும். எதிர்காலத்தில் கூர்ப்பின் மூலம் எம்மைவிடவும் மேம்பட்ட அதிமனிதர்கள் உருவாகும் போது இன் நிலைமை மாறிவிடும். அதற்கு பிறகு தோன்றும் புதிய மதத்தில் புராதான கிரேக்க கடவுள்களை போல இப்போதைய கடவுள்கள் சக்தியை இழந்து இருப்பார்கள்.  அங்கு வேறு ஒரு கடவுள் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அவருக்கு இப்போதைக்கு பெயர் வைப்பதும், வல்லமைகளை வரையறை செய்வதும் கடினம்.  காரணம் அப்பொழுது நாம் அழிந்து இருப்போம் அல்லது அழிந்து கொண்டிருப்போம்.  அதிமனிதர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் நியாண்டதால் மனிதர்களுக்கும் ஹோமோ செபியன்ஸ்க்கும் இருக்கும் வேற்றுமையை விட சிக்கலானது.

The invisible man (2020)

Image
மிஸ்டரி, திரில்லர் வகையரா படம். படத்தின் தலைப்பை பார்த்தவுடனே கதையை அனுமானித்து விடலாம். கண்ணுக்கு புலப்படாத ஒரு மனிதன்  தான் வில்லன் அல்லது ஹீரோவாக இருக்கப் போகிறான் என்பது நிரூபணமாகிவிடும். இவ்வகை   சினிமாக்கள் திரைக்கு புதிதும் அல்ல Hollow Man படங்களில் எல்லாம் முன்பே நமக்கு காட்டி விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி நம்மை இருத்தி பார்க்கவைக்க  இயக்குனர் எதாவது மாயம்தான் செய்தாக வேண்டும். அதை தான் 'Leigh Whannell' இதில் நிகழ்த்தி காட்டிக்கிருக்கிறார். படம் தொடங்கிய முதல் நிமிடம் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் மட்டும் இருக்கும். அதுவும் இரண்டு மணிநேரதிற்கு ஒரு சொட்டும் குறையாது. ஆரம்பத்திலேயே முழுக் கதையையும் யூகிக்க முடிந்தாலும் அதிலும் சுவாரஸ்யத்திற்கு குறைவிருக்காது.  முடிவில் நம் யூகிப்பையும் பொய்யாக்கி அடுத்தடுத்து அதிர்ச்சிகளை இயக்குனர் தந்து கொண்டிருப்பார். பொதுவாக திரைக்கதையில் கதை ஆரம்பிக்கும் பொழுது Protagonist பாத்திரம் அறிமுகம் செய்யப்படும். பிறகு அவர் எதிர் நோக்கும் பிரச்சனை அல்லது சவால் எதுவென்று காட்டுவார்கள். பிறகு அவர் எதிர்க...

மிகைல் A . I

Image
(குறுங்கதை - 10) மிகைல் நா கார்த்திக்க வெடிங் பண்ணலான்னு நினைக்கிறேன். எட் த சேம் டைம்..., ராஜ் உம் என்  மேல இன்ட்ரெஸ்டா இருக்கான். இவங்க ரெண்டு பேரும் எனக்கு  பிடிச்ச மாதிரிதான் இருக்காங்க..., கார்த்தியோட செட்டில்லாகத்தான்  மனசு சொல்லுது, பட் ராஜ்கிட்ட  இருக்க கேரிங் எனக்கு பிடிக்கும்.  ஒரே கன்பியுஸ்ட்டாயிருக்கு, இந்த விசயத்துல எனக்கு உன் அட்வைஸ் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ ! தாராளமாக ரியா...., என்னிடம் நீ அனுமதி கேட்கத் தேவையில்லை. சில தனிப்பட்ட தகவல்களை எல்லாம் ஆராய்ந்துப் பார்க்கவேண்டும் அதனால் கூடுதல் அதிகாரம் தேவை.  டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ன ரீட் பண்ணிட்டு அக்செப்ட் பண்ணு. மிகுதியை நான் பார்த்து கொள்கிறேன்.  "ஓகே, இந்த விஷயம் ரகசியமா இருக்கட்டும்..., முக்கியமா கார்த்திக்கு தெரியக் கூடாது, அவனுக்கு எல்லாத்துக்கும் மெஷின்ச நம்பிட்டு இருக்கது பிடிக்காது"  என்று சொல்லியப்படி ரியா தன் ஆர்ட்டிப்பிசல் இன்டலிஜெண்ட்டுக்கு தேடுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் வழங்கினாள்.  மிகைல் இணையவெளியில்  தனக்கு தேவையான தகவல்களை  அ...

தயக்கம்

Image
(குறுங்கதை) மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே தன் அறைக்கு வரும்படிச் சொன்னாள். இளம் வயது, மாநிறம், பேரழகி கிடையாது. ஆனால் அழகி! ஏற்ற இறக்கங்கள் இரக்கமே இல்லாமல் வஞ்சிக்கக் கூடியது. தெரியாமல் சைட் அடிப்பான். இப்பொழுது  நிறைமாதக் கர்ப்பிணி, அவள் தாயாக மாறிக்கொண்டிருக்கும் போது ஏனோ அந்த எண்ணம் தோன்றுவதில்லை. மேல் மாடிக்கு ஓட்டமும் நடையுமாக  குதித்து சென்றான். அவளுக்கும்  இவனைப் பிடிக்கும். பெரிய திறமைசாலியோ, பட்டப்படிப்பு  முடித்தவனோ கிடையாது ஆனால்  கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்துவிடுவான். சமவயது உடைவளாக இருந்தாலும் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்துக் கொள்வான். அதனால் இவன் மீது தனிப்பிரியமுண்டு.   அறைக்குள் நுழைந்து முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தான். அவளும் இயல்பாக வேலைத் தொடர்பான உரையாடலை ஆரம்பித்தாள். அன்று அவள் பிங்க் நிற உடையில் இருந்தாள். அவளை பார்த்த அடுத்த நொடி வசியம் செய்யப்பட்டவன் போல சொக்கிப்போய் நின்றான்! எதோ ஓர் தாய்மையுடன் கூடிய  பேரழகு அவள் தோற்றத்தில், நொடிக்கு நொடி அவ் அழகு கூடிக்கொண்டிருந்தது. அவள் முகத்தை...

நறுமுகை

Image
(குறுங்கதை) குளிர்காலத்தின் ரம்மியமான மாலைநேரம், வெளியில் சில்லென்ற வாடைக் காற்று வீசிக்கொண்டிருந்தது.  விடுதியின் மேல் மாடி அறையின் ஆளுயர கண்ணாடி ஜன்னல்களின்  விலக்கப்பட்ட திரைச்சீலை வழியே  அறையினுள் புகுந்த நிலவொளி போதுமான மட்டும் வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தபடியால்  அங்கு மின்விளக்குகளுக்கு  தேவையிருக்கவில்லை. மேசையில் பாதி முடிக்கப்பட்ட ஒயின் போத்தலும் கரைந்து கொண்டிருந்த ஓர் மெழுகுவர்த்தியும் மட்டும் அவர்களுக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தன... கட்டிலில் அவள் மேல் கிடந்து  மார்பைத் தன் நெஞ்சால் அழுத்தி கொண்டிருந்தவனைத்  தள்ளிவிட்டாள். விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து அவள் கழுத்திற்கும் மார்பிற்கும் இடையில் தன் முகத்தை புதைத்து ஸ்பரிசிக்கத்  தொடங்கினான். மூச்சு திணறியபடி முழுதாய் எதிர்ப்பைக் காட்டாமல், அவனது முரட்டுத்தனத்தை விருப்பியவளாய் அதேநேரம் மேலும் கீழ்நோக்கி நகர ஒத்துழைக்க மறுத்தவளாகவும் இருந்தாள்.  அவள் கண்களை உற்றுப் பார்த்தான். "இப்ப என்ன விட போறியா இல்லையா? " என்று மிரட்டுவதைப்    போலிருந்தத...

சூஃபியும் சுஜாதேயும்

Image
மொழி: மலையாளம்  "என் உயிரை உன்னுடன் எடுத்து  சென்றால், நான் என்ன செய்வேன்?" சூஃபியிசத்தை பற்றி வாசித்து உணர்த்திருக்கிறேன். ரூமியின் கவிதைகளை படிக்கும் போதும்  அனுபவித்து இருக்கிறேன். அதையே படமாக இரண்டு  மணிநேரம் திரையில் பார்த்த  அனுபவம் மாறுப்பட்ட உவகையை அளித்தது. ஓர் இந்து பெண்ணுக்கும்,  சூஃபி துறவிக்கும் இடையிலான  காதலே இந்த படம். ஆனால் இது  வெறும் கதையாக இல்லாமல் அமரகாவியமாகி போனது துயரம்தான். இதில் சூஃபி பள்ளியில் பாங்கு ஓதும்  போது " அல்லாஹ் கூ அஃபர்  அல்லாஹ்...! " என்ற அந்த கணீர் குரல் காதில் விழும் தருணத்தில் உணர்ந்த பேரின்பத்தை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. பாடல்களும் பின்னணி இசையும் தான் படமே, ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் பேரழகு! ஓர் இடத்தில் சூஃபி நடனத்தை டாப் அங்கிள் ஷாட்டில் படமாக்கியது அற்புதம்!அதுமட்டுமல்ல சுஜாதேயும்,  சூஃபியும் வரும் இடங்கள் எல்லாமே ஓவியம்தான். Aditi Rao ஒரு  வார்த்தை கூட பேசாமல் படம்  முழுவதும் முகபாவனைகளிலே உணர்வுகளை சிறப்பாக வெளிக...