Posts

Image
கடிகாரத்தை பார்க்கப்  பிடிக்கவில்லை  நாட்காட்டியை வெறுக்க  ஆரம்பித்துவிட்டேன். வருடங்கள் சலிப்பை  ஏற்படுத்துகின்றன. காலம் சுழியமாக உறைந்திருக்கும்  இடத்தில் வாழப்பிடிக்கிறது. நான் ஒரு முட்டாள், அங்கு தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனிதர்கள் தான் உலகத்தின்   இயல்பை மாற்றிவிட்டார்கள். 10-05-2020 நரேஷ்

Memories of Murder (2003)

Image
Memories of Murder   No Spoilers   உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். தென் கொரியாவில் உள்ள  Hwaseong, Gyeonggi என்னும் மாநிலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1991ற்கு  இடைப்பட்ட காலப்பகுதியில் தொடர் மர்மகொலைகள் நிகழ்கின்றன. கொலைக்காரனை கண்டுபிடிக்க மூன்று துப்பறிவாளர்கள் களத்தில் இறங்குகிறார்கள். புலி வேட்டைக்கு குருவி பிடிப்பவர்களை அனுப்பிய கதையாக மாறிப்போகிறது. தேடலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலைகளும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இவர்களும் விடுவதாகயில்லை. நேரம் காலம் பாராது தேடுகிறார்கள். மேலிடத்திலிருந்து அழுத்தமும் அதிகரிக்கின்றது. நாட்கள் நகர, நகர இவர்களின் நிலைமை பரிதாபமாகிறது. அப்பொழுது தான் அவர்களுக்கு புரிகிறது தாங்கள் தேடுவது, சாதாரணமான கொலைகாரனல்ல  கொடூரமான சைக்கோவென்று. நிகழ்ந்த கொலைகளை ஆராய்ந்து பார்த்த பொழுது அனைத்திலும் சில ஒற்றுமைகளை காணமுடிகிறது. கொலையுண்டவர்கள் அனைவரும் பெண்கள். மரணித்த விதமும் ஒன்றே, அவர்களின் உயிரை பறிக்க பயன்படுத்தியது அவர்களின் உள்ளாடையை. ஒவ்வொருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொல்...

The Mountain Between Us (2017)

Image
Genre: Action, Adventure, Drama Imdb 6.4/10 No Spoilers   படத்தின் கதையை முழுதாகச்  சொல்லி பார்க்கும் சுவாரசியத்தை குறைக்க மாட்டேன். அதனால் பயமில்லாமல் முழுதாக வாசிக்கலாம். நான் ஒரு Survival Movie பைத்தியம் இந்த படத்தை பார்க்க தேர்வு செய்தமைக்கும் அதுவே காரணம். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி அழகான காதல் கதையும் கூட படத்தின் தலைப்பே கதையின் கருவென்றும் சொல்லலாம்.  The Mountain Between Us "நாம் இணைச் சேர கடுகளவு சாத்தியங்களும், மலை அளவு  ஆசாத்தியங்களும் "   முன் பின் அறிமுகமில்லாத ஓர்  ஆணும் பெண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக  தனியார் விமானம் ஒன்றில் இணைந்து பயணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் மோசமான வானிலைக் காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி பனிமலைகளுக்கு நடுவே விழுந்து விடுகிறது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் எல்லாம் முழுமையா அற்று நிர்கதிக்கு உள்ளாகும் தருணத்தில், இருவரும் எல்லாத் தேவைகளுக்கும் அறியாத ஒருவரை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. கைவசம் இருக்கும் உணவும், நீரும் சொற்பம். வாழ்வாதாரங்களும் எதுவும் இல...

எழுத்தாளர் ஆவது சுலபம்

Image
எழுத்தாளர் ஆவது சுலபம், ஆனால்  நம் எழுத்தை மற்றவர்களை வாசிக்க செய்வதுதான் சவாலான காரியம்.  எழுதுவது எல்லாமே படைப்பாகிவிட முடியாது. அதனால் தான் சொல்கிறேன் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல!. மலையின் உச்சியை அடையமுயலும் சிறு எறும்பென நான் முயற்சித்து கொண்டிருக்கிறேன்.  நான் சோம்பேறி, தற்போதைய வேகத்தை வைத்து கணித்து பார்க்கும் பொழுதும் ஏறி முடிப்பேனா என்பதே சந்தேகம் தான். நண்பர்கள் எழுத்தாளர் என்று கூப்பிடும் பொழுது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு புத்தகம் கூட எழுதியது இல்லை பிறகு எப்படி எழுத்தாளன் ஆகமுடியும் என்று நானே என்னிடம் கேட்டுக் கொள்வேன்.  முதன் முதலாக #கனலி இலக்கிய இணைய தளத்தில் என் "தவிப்பு" என்ற குறுங்கதை வெளிவந்த பொழுது அதில் "எழுத்தாளர்: நரேஷ்" என்று குறிப்பிட்டிருந்தார்கள். அன்றிலிருந்து எழுத்தாளன் என்ற பட்டத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.  "உனக்கு கதை எழுதவே தெரியவில்லை" என்பவர்களிடம், நான் எழுத்தாளன் அல்லவென்று தன்அடக்கத்துடன் நடந்து கொண்டால் சில அரைவேக்காடுகள்  தலை மேல் ஏறி கக்கா போய்விடுகிறார்கள். அட...

அங்கு யாரும் புலப்படவில்லை

Image
(குறுங்கதை 12) ஆளரவமே இல்லாத மலைக்காடு. பாதையின் இருபுறமும் செழித்து உயர்ந்த பைன் மரங்கள்.  பனிமூட்டம், குளிர்க் காற்று, நிலவொளி என ரம்மியமான  இயற்கை அழகு ஆனால் நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ஒற்றையாகப்  பயணிக்கும் போது  இவையெல்லாம் பூரிப்படைய செய்வதற்கு பதிலாக பீதியைக்  கிளப்பும்படியிருந்தன. தனியாகக் காரை வேகமாக  செலுத்திக் கொண்டிருந்தான்.  முடிந்த மட்டும் விரைவாக இந்த காட்டைக் கடந்து சென்று விடவேண்டும் என்பதே அவனின் முதல் நோக்கமாக இருந்தது. அமானுஷ்யம், ஆவிகள், இவற்றில் கொஞ்சம் நம்பிக்கையுண்டு.  இந்த பாதையில் ஆவிகளின் நடமாட்டம் தொடர்பான கட்டுக் கதைகள் உலாவுவதால் மனதில் எழுந்த பயத்தை அடக்க முடியவில்லை. இம் மாதிரியான நேரங் கெட்ட நேரத்தில் தான் துர்ஆத்மாக்களின் இருப்பை பற்றிய ஆராய்ச்சியில் மனது ஈடுபட ஆரம்பித்தது. இடையிடையே சடசடத்து தாழ்வாகப்  பறந்துச் சென்ற வெளவால்கள் வேறு  அதற்கு ஒத்து ஓதின! இந்த எண்ணத்தை உடனே  திசைத்  திருப்பி மனதை வேறு சிந்தனைகளில் மாற்ற எண்ணியப்படி காரிலிருந்த  மியூசிக் பிளேயரை ஒலிக்க விட்டான்...

ப்ரஷர் குக்கர்

Image
(குறுங்கதை - 11) அந்த ப்ரஷர் குக்கரில் தான்  அவர்கள் தினமும் அவிந்துக்  கொண்டிருந்தார்கள். காலை எட்டுக்கு ஆரம்பித்தால் அன்றைய நாள் வேலை நேரம் முடியும் வரைக்கும், ஊசி நிலத்தில் விழும் ஒலியைக் கூட துல்லியமாகக்  கேட்கலாம். அவ்வளவு நிசப்தம். காற்றில் அபிநயம் பிடித்துதான் பேசிக்கொள்வார்கள்.  வார்த்தைகள் கூட ஒலியின்றி வெறும் காற்றாய் தான் வெளிவரும்.  புதிதாய் அங்கு வந்து சேருபவர்கள் அதே வேகத்திலேயே காணாமல் போய்விடுவதுமுண்டு.  சில சமயங்களில் மீறி சிக்கியவர்கள்  அழுத்தம் தாங்காது  இருக்கையிலேயே வெடித்து சிதறிக்கிடப்பார்கள். அவர்களை அப்படியே அள்ளி குப்பைத்  தொட்டியில் போட்டுவிட்டு வேலை சிறிதும் தடையுறாமல் கம்பனி நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். குடும்பத்திற்காகத் தங்களை நேந்துவிட்ட ஒரு சில பலிக்கடாக்கள் மட்டும் அங்கே மீந்திருக்கும். ரெஸ்ட் ரூமில் உள்ள முகம்  பார்க்கும் கண்ணாடிதான்  எச். ஆர். சில சமயங்களில் சைக்கார்டிஸ்ட் என எல்லாமே, மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்...

ராமர் கோயில் அரசியல்

ஹோமோ செபியன்ஸ் இருக்கும் மட்டும், மதம், நாடு, ஜாதி, சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை கதைகளும் இருக்கும். அவற்றால் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத பெரும் மனிதக் கூட்டத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியும். எதிர்காலத்தில் கூர்ப்பின் மூலம் எம்மைவிடவும் மேம்பட்ட அதிமனிதர்கள் உருவாகும் போது இன் நிலைமை மாறிவிடும். அதற்கு பிறகு தோன்றும் புதிய மதத்தில் புராதான கிரேக்க கடவுள்களை போல இப்போதைய கடவுள்கள் சக்தியை இழந்து இருப்பார்கள்.  அங்கு வேறு ஒரு கடவுள் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அவருக்கு இப்போதைக்கு பெயர் வைப்பதும், வல்லமைகளை வரையறை செய்வதும் கடினம்.  காரணம் அப்பொழுது நாம் அழிந்து இருப்போம் அல்லது அழிந்து கொண்டிருப்போம்.  அதிமனிதர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் நியாண்டதால் மனிதர்களுக்கும் ஹோமோ செபியன்ஸ்க்கும் இருக்கும் வேற்றுமையை விட சிக்கலானது.