Posts

Bad Guy - 2001(Kim ki-duk) கிம் கி டுக்

Image
Bad Guy - 2001 (Kim ki-duk) எனக்கு கிம் கி டுக் சினிமா வாரம் அதன் தொடர்ச்சியாக இன்று Bad Guy படத்தை பார்த்தேன். நீ எழுதித்தான் பாரேன்! என்பது போல் இருந்தது கதை. சிறு குறிப்பு மட்டும் கீழே இவர் படங்களை எல்லாம் பார்த்து முடித்த பின்பு என்னாவேனோ? தெரியவில்லை!  என்ன மனிதர் இவர், உலகத்தை கிம் பார்வையில் இருந்து பார்க்கும் போது புனிதங்கள் கட்டுடைகின்றன. படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கதாநாயகன் வாய் திறந்து பேசுகிறான். அதுவரை அவன் ஊமையாக இருக்க கூடும் என்றெண்ணிக் கொண்டிருந்தேன். கிம்மின் படத்தில் இது ஒன்றும் புதிதல்ல. முழு படத்திற்கும் இரண்டு பக்கத்திற்கு மட்டும்தான் ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருப்பார் போல, இருப்பினும் 3 Iron, The Isle போன்ற படங்களை விட இதில் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார்கள். கிம் படத்தில் காட்சி மொழிதான் வார்த்தைக்கு அங்கு வேலையில்லை. *படத்தின் முதல் காட்சியும், இறுதி காட்சியும் என் மூக்கை உடைத்து விட்டது. சற்றும் எதிர்பார்க்கவில்லை. *பிறகு இதில் நாயகன், நீங்கள் வெறுக்கும் ஆனால் விரும்பும் ஒருவனாக இருப்பான். *பாவம் அந்த பெண் ஒரு பாவமும் ...

எனக்கென ஒரு கனவிருந்தது...

Image
எனக்கென ஒரு கனவிருந்தது.. எனக்கென்றே ஒரு காதல் இருந்தது.. எனக்கென்றே ஒரு வாழ்விருந்தது.. எனக்கென்றே எல்லாமும் இருந்தது.. அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்.. எல்லாமும் யார்கையிலோ போகும் வரை. அவ்வளவு இலகுவாய் எனக்கென்று எதையும் அபகரிக்கத் தெரிந்திருக்கவே இல்லை எனக்கு. அன்பே ! நீ கூட எனக்கென்று இல்லாமல் போன பிறகு தான் உலகம் அத்தனை கொடூரமாய் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் முட்பாதைகளில் வலிச் சுமந்து நடக்கும்போது என் கால்களுக்கு பலம் கிடைத்தது. இப்போதெல்லாம் எனக்காக என்று ஒரு வாழ்விருக்கிறது. எனக்காக என்று ஒரு புன்னகை இருக்கிறது. என்னிடம் மொத்தமாய் ஒரு காதல் இருக்கிறது. என் அளவுக்கு மிஞ்சியதாய் பேரன்பும் இருக்கிறது. ஆனாலும்.. எங்கோ ஒரு இடத்தில் அவற்றை கொட்டிவிடப்பயத்தில் அப்படியே மூட்டைச் சுமந்து பயணிக்கிறேன். இப்போதெல்லாம சுமைகள் வலிகள் என ஏதுமிருப்பதில்லை. எதையும் தேடி எனக்கென ஏங்காத போது எல்லாமும் நிறைந்திருக்கிறது என்னிடம். அன்பென்ற பூட்டுக்கொண்டு பூட்டிவைத்திருக்கிறேன் மொத்தமாய். நான் வாழ்ந்து விடுகிறேன் இப்படியே.! எனக்காக ஒரு அன்பை பார்த்து காத்திருக்க இப்போதெல்லாம் முடியவே ...

த்ரிஷ்யம் 2 (Drishyam 2) 2021,மலையாளம்

Image
படம் சிறப்பாக வந்துள்ளது. ஏமாற்றவில்லை. ஜொர்ஜு குட்டி முதலாம் பாகத்தில் எப்படி போலீசாரை போக்கு காட்டி சுற்ற விட்டாரோ அதையே இதிலும் செய்திருக்கிறார் ஆனால் இதில் நாயகன் கையாண்டிருக்கும் வழிமுறை நாடகத்தனமாக இருக்கிறது. பலரை அவர்களுக்கு தெரியாமலேயே தன் குற்றத்தை மறைக்க உதவவைக்கிறார். ஒரே நேரத்தில் திட்டமிட்டப்படியே அனைவரும் ஒத்துழைப்பது அத்தனை சுலபமில்லை. இருந்தாலும் இரண்டு  மணிநேரம் இருபது நிமிடம் ஓடும் படத்தில் கடைசி இருபது நிமிடம் மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதால் நமக்கு குறைக் கண்டு பிடிக்க நேரம் போதாது. இதையும் சேர்த்தே ஜொர்ஜு குட்டி திட்டமிட்டாரோ தெரியவில்லை. மோகன்லாலின் இயல்பான நடிப்பு படத்தின் பெரும் பலம். கதையில் பலர் இருந்தாலும் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்! இயக்குனர் சிறப்பாக உருவாக்கியுள்ளார். எங்கும் தொய்வு இல்லை! நம்பி பாருங்கள். ஏமாற்றாது.

மாஸ்டர்

Image
மூன்று மணிநேரப் படத்தை ஒருவாறு நான்கு மணிநேரத்தில் பார்த்து முடித்தேன். இடைக்கிடையில் கண்ணயர்ந்து விட்டேன். படம் மொக்கை இல்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் என்பதால் அதிகமாக எதிர்பார்த்து விட்டதுதான் ஏமாற்றத்திற்கு  காரணம். எதையோ எடுக்க வந்து வேறு எதோ எடுத்து தொலைத்து வைத்திருக்கிறார். இதற்கு இன்னும் இரண்டு டூயட் பாடல், கொஞ்சம் நகைச்சுவை எல்லாம் சேர்ந்து முழுமையான மசாலா படமாக சரி எடுத்து தொலைத்து இருக்கலாம். இது எதிலும் சேராமல் எதோ அரை அவியலாக வந்து சேர்ந்து இருக்கிறது. பாவம் அந்த ஹீரோயின்! நல்ல அழகி  ஆனால் எதற்கு படத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை! இதில் அன்ரியா வேறு ஒரு பக்கம். விஜய்யும், விஜய் சேதுபதியும் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்கள். இருவரும் படத்தில் இருப்பதே மறந்து போய் விடுகிறது. ஆனால் படம் மூன்று மணிநேரம். அரை மணிநேரம் ஓடும் அளவை சரி குறைத்து இருக்கலாம். கவலையாக இருக்கிறது. போகும் போக்கை பார்த்தால் இனி ஆசையாக ஒரு விஜய் படம் கூட பார்க்க கிடைக்காது போல!! மாஸ் ஹீரோக்களின் மசாலா படங்களில் லாஜிக் பார்க்க கூடாது தான் அதற்கு என்று இப்படி அநியாயம் செய்யக் கூடாது! ...

Scam1992: The Harshad Mehta Story (2020)

Image
1992 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நிகழ்ந்த பெரும் பணமோசடி வெளிச்சத்திற்கு வருகிறது. அதனை 'scam' என்ற ஆங்கிலப் பதத்தில் சொன்னால் இன்னும் பொருத்தமாகயிருக்கும். இந்த ஸ்கெமின் மதிப்பு கிட்டத்தட்ட நூறு பில்லியன் இந்திய ரூபாய்கள் ஆகும். ஹர்ஷத் மேத்தா என்ற பெயரை நம்மில் பலர் இந்த வெப்சீரிஸ் வெளியாகியிருக்கும் வரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். தொண்ணுறுகளில் மும்பை பங்குச்  சந்தையின் முடிச்சூடா மன்னன்.  இத்தொடரை பார்த்து முடித்த பிறகு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இவரை மறக்காது.  இந்தியாவில் வெளியான "Paatal Lok, Sacred Games" போன்ற சீரிஸ்களுக்கு பிறகு நான் மிகவும் ரசித்து பார்த்த தொடர்  'Scam 1992' பங்குச் சந்தை வியாபாரம் சார்ந்த கதைக்களம். அதில் இடம் பெற்ற மோசடியை பற்றியக் கதை. வணிகம் சார்ந்தது, சிக்கலான மோசடி இதை எல்லோருக்கும் புரியும் படியாக எடுத்துள்ளதுதான் தொடரின் சிறப்பே. யார் இந்த ஹர்ஷத் சாந்தி லால் மேத்தா?  நிஜமாகவே அவர் கிரிமினலா? இல்லை, பலிக்கடாவாக்கப்பட்டவரா? அப்படி அவர் செய்த மோசடித்தான் என்ன என்பதை மிகச் சுருக்கமாக சொல்கிறேன். குஜராத்தை பூர்...

The Great Indian Kitchen (2021) Malayalam movie

Image
  நல்ல படம், ஆனால் குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பதை ஆண்கள் தவிர்த்து கொள்ளவும். காரணம் மனைவியோ அல்லது அம்மாவோ சோற்றுப் பானையை தூக்கி உங்கள் தலையில் அடிக்கும் வாய்ப்புள்ளது. நல்ல வேளையாக தமிழ் படங்களில் வருவது போல இந்த படத்தில்  "சிங்க பெண்ணே" போன்ற வெறியேற்றும் உணர்ச்சி மிகு பாடல் எதுவும் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் பல சமயலறைகள் பற்றி எரிந்திருக்கும். எனக்கு படம் பிடித்திருந்தது, பேசிய அடிப்படைக்  கரு மறுக்க முடியாத உண்மைதான். இப்பொழுது எல்லாம் வெகுவாக மாறிவிட்டது. பெண்கள் கற்கிறார்கள். உயர் வேலைகளில் இருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள். ஆனால் நம் அம்மாக்களின் தலைமுறையில் இந்த பிரச்சனை அதிகமாக இருந்தது. படத்தில் பெண்கள் சமைப்பதும், சுத்தம் செய்வதும். ஆண்கள் தின்பதும், புணருவதும் மட்டும் தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் காட்டப்படுவதால் இதில் வரும் ஆண்களை பார்க்கும் பொழுது ஆண்களே கடுப்பாக கூடும். நாம் எதோ ஜாலியாக வேலைக்கு போய்வருவது போல காட்டியுள்ளார்கள். வெளியிடத்தில் நாங்கள் புடுங்குபடுவது நமக்குத்தான் தெரியும். பெண்களுக்கு சமையலிலும் வீட்...
Image
கடிகாரத்தை பார்க்கப்  பிடிக்கவில்லை  நாட்காட்டியை வெறுக்க  ஆரம்பித்துவிட்டேன். வருடங்கள் சலிப்பை  ஏற்படுத்துகின்றன. காலம் சுழியமாக உறைந்திருக்கும்  இடத்தில் வாழப்பிடிக்கிறது. நான் ஒரு முட்டாள், அங்கு தான்  வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனிதர்கள் தான் உலகத்தின்   இயல்பை மாற்றிவிட்டார்கள். 10-05-2020 நரேஷ்