த்ரிஷ்யம் 2 (Drishyam 2) 2021,மலையாளம்

படம் சிறப்பாக வந்துள்ளது. ஏமாற்றவில்லை. ஜொர்ஜு குட்டி முதலாம் பாகத்தில் எப்படி போலீசாரை போக்கு காட்டி சுற்ற விட்டாரோ அதையே இதிலும் செய்திருக்கிறார் ஆனால் இதில் நாயகன் கையாண்டிருக்கும் வழிமுறை நாடகத்தனமாக இருக்கிறது. பலரை அவர்களுக்கு தெரியாமலேயே தன் குற்றத்தை மறைக்க உதவவைக்கிறார். ஒரே நேரத்தில் திட்டமிட்டப்படியே அனைவரும் ஒத்துழைப்பது அத்தனை சுலபமில்லை. இருந்தாலும் இரண்டு  மணிநேரம் இருபது நிமிடம் ஓடும் படத்தில் கடைசி இருபது நிமிடம் மர்மத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதால் நமக்கு குறைக் கண்டு பிடிக்க நேரம் போதாது. இதையும் சேர்த்தே ஜொர்ஜு குட்டி திட்டமிட்டாரோ தெரியவில்லை.

மோகன்லாலின் இயல்பான நடிப்பு படத்தின் பெரும் பலம். கதையில் பலர் இருந்தாலும் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்! இயக்குனர் சிறப்பாக உருவாக்கியுள்ளார். எங்கும் தொய்வு இல்லை! நம்பி பாருங்கள். ஏமாற்றாது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I