Posts

"மஜ்னூன் குறுங்கதைகள்" தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்

Image
"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை பற்றிய நண்பர் மற்றும் தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்  Dhashna Moorthy   *** எழுத்தாளர் நரேஷ் அவர்களின் முதல் புத்தகம் "தவிப்பு" எனும் கதையைப் படித்தேன். எழுத்தாளனுக்கும் அவன் பிரதிக்குமான உறையாடல் தான் கதை (அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளில் சாந்தியும் எழுத்தாளனும் பேசுவார்களே ஞாபகம் உள்ளதா) கதையென்று சொல்லலாகாது, கதைகளையே கேட்டுக் கேட்டு போரடித்துப் போய் கடுப்பில் இருப்பவர்களுக்கான ஓர் குறுங்கதைகள் தொகுப்பு. Kindle Unlimited இல் வாசிக்கவும் கிடைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் புண்ணிவான்களுக்காக வெறும் 49 ரூபாவுக்கும் கிடைக்கிறது. படித்து விட்டு ரிவ்யூ எழுதுங்கள், பாராட்டுங்கள், திட்டுங்கள். இனி கதைகளை பற்றிய என் பார்வை. 4. கயா புவி மீது நாம் கொள்ளும் அக்கறையை புவியே கேலி செய்யும்படியான கதை. கயா கிரேக்க புவிக்கடவுளின் பெயரென்பது உப தகவல். 5. நரகத்தில் ஒரு நாள் பேஸ்புக் வாட்சப் ஷேரிங் குரூப்புகளை கலாய்த்து ஒரு கதை. 6. பழைய எழுத்தாளரும்  புதிய எழுத்தாளரும். செம பகடியானதொரு கதை சிரித்துக் கொண்டே படித்தேன். பு...

"மஜ்னூன் குறுங்கதைகள்" மற்றும் ஒரு பார்வை

Image
நரேஷின் "மஜ்னூன்" குறுங்கதை தொகுப்பை கிண்டிலில் வாசித்தேன். ஓரிரண்டு சிறுகதைகளும், மசாலாப்பொடி தூவினது போல கொஞ்சுண்டு மைக்ரோ கதைகளும் இருக்கின்றன. குறுங்கதைகளுக்கு குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் பிரபல்யம். வாத்தியார் சுஜாதா ஆரம்பித்து வைத்தது அந்த ஒரு பக்க கதைகளை என்று நினைக்கிறேன்.  என்னை பொறுத்தவரை குறுங்கதைகள் எழுத சிறந்த மொழி வளமும் புத்திசாலித்தனமும் தேவை (வாசகர்களை அலறி அடித்து ஓட வைக்காமல் எழுத மாத்திரமே இவை தேவை) நரேஷிற்கு இரண்டும் நன்கு கைவரப்பெற்றுள்ளது. எனக்கு இருந்த ஒரே ஒரு சிக்கல் இந்த kindle தான். எனக்கு ஏனோ இந்த kindle அவ்வளவாக உவப்பதில்லை. இந்த மாதிரி வேறு வழியே இல்லாத புத்தகங்களுக்கு kindle ஐ நாட வேண்டி இருக்கிறது.  வெறுமனே ஒரு சுழிக்குள் சுற்றி சுற்றி கதைகள் எழுதாமல் காதல் காமம் என்று தொடக்கி கேயாஸ் தியரி வரை எல்லைகளை விரித்து எழுதி இருக்கிறார். நிறைய புதிய முயற்சிகளை பரீட்சித்துப் பார்த்தது போல தெரிகிறது. அவைகள் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். "அங்கு யாரும் புலப்படவில்லை" ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட். ஒரு ஹாரர் திரில்லர் சோர்ட் பிலிம...

எழுத்தாளர் நர்மியின் "மஜ்னூன் குறுங்கதைகள்" நூல் விமர்சனம்

Image
ஒரு படைப்பு என்னச்செய்ய வேண்டும் என்று என்னை கேட்டால், அது ஏதோ ஒரு உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்த வேண்டும். நரேஷின் மஜ்னூன் குறுங்கதையை படித்த பின்னர் குறுங்கதை தொகுப்புகளை தேடித்தேடி வாசிக்க தொடங்கியிருக்கிறேன். புனைவை கையில் எடுப்பதற்கு  தைரியம் வேண்டும்.  குறுங்கதைகளை கையாள இன்னும் அதிகமாகவே தேவையென கருதுகிறேன். அது ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது. இந்த குறுங்கதை தொகுப்பை வாசித்து முடித்தபோது தெரிந்ததெல்லாம் இதை எழுதியவர் ஒரு தேர்ந்த வாசகன் என்பது மட்டுமே. எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தலைப்பும் பரந்துபட்டதாக இருந்தது. எனக்கு பிடித்த குறுங்கதைகள் பற்றி கூறுவதற்கு முன்னர் எழுத்தாளரின் காதல் வகையறா கதைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. 😜 "அங்கு யாரும் புலப்படவில்லை" என்ற குறுங்கதையில் கடைசிவரை ஒரு சுவாரஸ்யமான திகில் ஒன்று இருந்துக்கொண்டே இருந்தது. இதில் உண்மையில் பேய் யாரென்ற வினா தொடர்ந்துக்கொண்டே இருந்தது. "கயா" என்ற கதையில் புவியை உருவாக்கிய கிரேக்க தெய்வம் பற்றிய அறிமுகம்,  "பழைய எழுத்தாளரும், புதிய எழுத்தாளரும்" என்ற கதையில் வெளிப்படுகிற நகைச்சுவைய...

‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வை

Image
விமர்சனம் தளத்தில் வெளியாகி உள்ள, நரேஷின் முதல் நூல்மஜ்னூன்மஜ்னூன் ‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வையைக் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.  ——————- ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ தொகுப்பு வெளிவந்த போது, வாழ்த்திய ஒவ்வொருவரையும் நூல் குறித்த கருத்தைப் பகிரும்படி கேட்டிருந்தேன். ‘அருமை’ சொல்லிக் கடந்து போகாமல், வாசகர் கருத்துகளைப் பகிர்ந்தவர்களுள் சகோதரர் நரேஷும் ஒருவர்.  தங்கள் எழுத்துப் பயணம் நெடிது நீளவும், சிகரங்கள் தொடவும் வாழ்த்துகிறேன் சகோதரா! ————— நன்றி : சந்தோஷ் குமார் அவர்கள்                www.vimarsanam.in விமர்சனத்தை படிக்க

மஜ்னூன் குறுங்கதைகள்

Image
நண்பர்களுக்கு வணக்கம்! இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள், கிண்டிலில் "மஜ்னூன்" என்னும் என் குறுங்கதை புத்தகத்தை வெளியிட்டு உள்ளேன். இது என் முதல் புத்தகம். கிட்டத்தட்ட ஒரு வருடக் கால இடைவெளியில் நான் எழுதிய குறுங்கதைகளை இதில் தொகுத்துள்ளேன். வெறும் கிண்டில் புத்தகம் தானே என்று எண்ணி ஒப்பேற்றாமல் அட்டைப்படம் தொடங்கி உள்ளடக்கம் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக வடிவமைத்துள்ளேன். எதைச் செய்தாலும் முழுமையாக குறைகள் இன்றி நிறைவாக செய்வது என் பழக்கம். புத்தகம் என்று வரும் பொழுது ஒரு படி மேலேயே! மஜ்னூனை படித்து முடிந்தவுடன் அதில் ஏதோ ஒரு படைப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். "Pleasure of Text" என்று சொல்வார்களே அந்த இன்பத்தை என்னால் உங்களுக்குத் தரமுடியும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஒர் எழுத்தாளனாக இதை விட வேறு சிறப்பான ஒன்றை வாசகனுக்கு கொடுக்க முடியாது. பரந்துபட்ட வாசிப்பு பழக்கம், எனக்கு இந்நூலை மனதிருப்தியுடன் எழுதி முடிப்பதில் உதவியது. என் ரசனை கலவையானது. அராத்துவையும் வாசிப்பேன், தல்ஸ்தோயையும் வாசிப்பேன். இருவரின் எழுத்தையும் என்னா...

Bad Guy - 2001(Kim ki-duk) கிம் கி டுக்

Image
Bad Guy - 2001 (Kim ki-duk) எனக்கு கிம் கி டுக் சினிமா வாரம் அதன் தொடர்ச்சியாக இன்று Bad Guy படத்தை பார்த்தேன். நீ எழுதித்தான் பாரேன்! என்பது போல் இருந்தது கதை. சிறு குறிப்பு மட்டும் கீழே இவர் படங்களை எல்லாம் பார்த்து முடித்த பின்பு என்னாவேனோ? தெரியவில்லை!  என்ன மனிதர் இவர், உலகத்தை கிம் பார்வையில் இருந்து பார்க்கும் போது புனிதங்கள் கட்டுடைகின்றன. படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கதாநாயகன் வாய் திறந்து பேசுகிறான். அதுவரை அவன் ஊமையாக இருக்க கூடும் என்றெண்ணிக் கொண்டிருந்தேன். கிம்மின் படத்தில் இது ஒன்றும் புதிதல்ல. முழு படத்திற்கும் இரண்டு பக்கத்திற்கு மட்டும்தான் ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருப்பார் போல, இருப்பினும் 3 Iron, The Isle போன்ற படங்களை விட இதில் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார்கள். கிம் படத்தில் காட்சி மொழிதான் வார்த்தைக்கு அங்கு வேலையில்லை. *படத்தின் முதல் காட்சியும், இறுதி காட்சியும் என் மூக்கை உடைத்து விட்டது. சற்றும் எதிர்பார்க்கவில்லை. *பிறகு இதில் நாயகன், நீங்கள் வெறுக்கும் ஆனால் விரும்பும் ஒருவனாக இருப்பான். *பாவம் அந்த பெண் ஒரு பாவமும் ...

எனக்கென ஒரு கனவிருந்தது...

Image
எனக்கென ஒரு கனவிருந்தது.. எனக்கென்றே ஒரு காதல் இருந்தது.. எனக்கென்றே ஒரு வாழ்விருந்தது.. எனக்கென்றே எல்லாமும் இருந்தது.. அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன்.. எல்லாமும் யார்கையிலோ போகும் வரை. அவ்வளவு இலகுவாய் எனக்கென்று எதையும் அபகரிக்கத் தெரிந்திருக்கவே இல்லை எனக்கு. அன்பே ! நீ கூட எனக்கென்று இல்லாமல் போன பிறகு தான் உலகம் அத்தனை கொடூரமாய் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் முட்பாதைகளில் வலிச் சுமந்து நடக்கும்போது என் கால்களுக்கு பலம் கிடைத்தது. இப்போதெல்லாம் எனக்காக என்று ஒரு வாழ்விருக்கிறது. எனக்காக என்று ஒரு புன்னகை இருக்கிறது. என்னிடம் மொத்தமாய் ஒரு காதல் இருக்கிறது. என் அளவுக்கு மிஞ்சியதாய் பேரன்பும் இருக்கிறது. ஆனாலும்.. எங்கோ ஒரு இடத்தில் அவற்றை கொட்டிவிடப்பயத்தில் அப்படியே மூட்டைச் சுமந்து பயணிக்கிறேன். இப்போதெல்லாம சுமைகள் வலிகள் என ஏதுமிருப்பதில்லை. எதையும் தேடி எனக்கென ஏங்காத போது எல்லாமும் நிறைந்திருக்கிறது என்னிடம். அன்பென்ற பூட்டுக்கொண்டு பூட்டிவைத்திருக்கிறேன் மொத்தமாய். நான் வாழ்ந்து விடுகிறேன் இப்படியே.! எனக்காக ஒரு அன்பை பார்த்து காத்திருக்க இப்போதெல்லாம் முடியவே ...