Posts

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

Image
பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் The Richest Man in Babylon நீண்ட நாட்களாக மனதில் கேட்கப்பட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு தெளிவான பதிலை  தந்த புத்தகமிது. பொதுவாக நான் வாசிக்கும் எல்லா நூல்களை பற்றியும் சிறுகுறிப்பு எழுதவேண்டுமென்று  நினைப்பேன். பிறகு  நேரப்பற்றாக்குறை காரணமாக எழுத முடிவதில்லை. (கொஞ்சம் சோம்பேறித்தனமும்) ஆனால் இதை பற்றி எழுதியே ஆகவேண்டும்.  நிதி நிர்வாகம் பற்றிய அடிப்படை அறிவை பெறுவதற்கு எளிய மொழியில் புனையப்பட்ட  மிக சிறப்பான நூல். பணத்தை எப்படி சிறப்பாக நிர்வாகம் செய்வது? எவ்வாறு லாபமிட்டும் முறையில் முதலீடுவது? என்னும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு  இன்றைய உலகில் யூ டுயூப் சேனல்கள், புத்தகங்கள்,  இணையதளங்கள் என ஆயிரம் வழிகள் உண்டு. அவை அனைத்தும் லட்சங்களை மில்லியனாக மாற்றுவது எப்படியென்று கற்றுத்தரும். ஆனால் இங்கு  நம் நிலைமையோ வேறு, சில ஆயிரங்களே மாதவருவாய்.  வரவும் சிலவும் சமமாகயிருக்கும். இதில் எப்படி சேமிப்பது? பிறகு  எப்படி முதலீடு செய்வது? எந்த காலத்தில் செல்வந்தன் ஆவது? இவை எல்லாவற்றுக்கும் தெளிவான ...

தேகம்

Image
தேகம் இந்த நாவலை பற்றி எங்கு ஆரம்பித்து எப்படி எழுதுறதுனு தெரியல!? முதலே சொல்லிடுறேன் என் பதிவு முழுமையாக நூலின் சாரத்தை உள்ளடக்கி இருக்காது. இது மற்றைய சமகால தமிழ்  எழுத்தாளர்களின் தோரணையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணம். பொதுவாக நீங்கள் வாசித்து பழகிய நாவலுக்கு உண்டான வடிவத்தை இதில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். ஆரம்பம் முடிவு பற்றியெல்லாம் ஆராயாமல் வாசித்தால் கதை சுவைப்படலாம்! நீங்கள் இது வரை சாருவை படித்து இல்லையென்றால், தயவுசெய்து இந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம். "தேகம்" நல்ல ஆரம்பமாகயிருக்காது. இதன் செறிவு அதிகம் சில இடங்களில் ரொம்ப பச்சையாயிருக்கும். எங்கே உன் கடவுள் ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி கோணல் பக்கங்கள் கடவுளும் சாத்தானும் (இன்னும் கொஞ்சம் இருக்கு உடனே  நினைவில் வருதுயில்லை!) போன்ற புத்தகங்களை வாசித்து உங்களை தயார்படுத்தி கொண்டு  இதுக்கு வாங்க இல்லாவிட்டால் ஓவர் லோடு ஆகவாய்ப்புகள் அதிகம். சாருட தீவிர ரசிகனான எனக்கே நாவலின் சில இடங்களில் முகம் அஷ்ட கோணலாக மாறிடுச்சு! நான் இன்னும் முழுசா சாருவை படிச்சு முடிக்கல, இது வரை நான...

கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

Image
கும்பலாங்கி_நைட்ஸ் 2019 / மலையாளம் Kumbalangi Nights என் ப்ளே லிஸ்ட்ல எப்பவுமே ஒரு முப்பது, நாற்பது படங்கள் கிடப்புல கிடக்கும். சில சமயங்களில் ஒரு பிடிப்பு இல்லாமல் எதை பாக்குறதுனு முடிவு எடுக்க கஷ்டமா சோம்பலா இருக்கும் ஒரு தருணத்துல தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன். சும்மா ப்ளே பண்ணுது மட்டும் தான் முடிவு மட்டும் அதுவா கூட்டிட்டு போயிடுச்சு கொஞ்சம் கூட சலிப்பு தட்டல செம்ம பீல் குட் மூவி! மலையாளத்துல மட்டும் எப்பிடி இந்த மாதிரி அழகான படங்களை எடுக்குறாங்கனு தெரியல! கும்பலாங்கி கேரளாவில் உள்ள நீரால் சூழப்பட்ட அழகான (ஒரு குட்டி தீவு) கிராமம். அங்கு வசிப்பவர்களுக்கு மீன் பிடி தான் பிரதான தொழில். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலுனு பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இதமாக இருக்கும் இயற்கை வனப்பு மிகுந்த நிலம், படத்தோட அழகே இந்த ஊரும் அங்கு வாழும் மனிதர்களும் தான். படம் தொடங்கி சில நிமிடங்களில் சஜிக்கும் பொபிக்கும் ஒரு சண்டை காட்சி வரும் இந்த இடத்தில் கொஞ்சம் மனச தேர்த்திக்கிருங்க விசேஷமா ஆண்களுக்கு இந்த எச்சரிக்கை.  பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும் சும்மா பிடிச்சு நசுக...

கடலும் கிழவனும் (The old man and the sea)

Image
கடலும் கிழவனும் (குறுநாவல்) The old man and the sea எர்னெஸ்ட்  ஹெமிங்வே எழுதிய நோபல் பரிசு வென்ற இலக்கிய படைப்பான "The old man and the sea" குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான "கடலும் கிழவனும்" படித்தேன். அருமையான அனுபவம். தமிழ் மொழிபெயர்ப்பில் 130 பக்கங்கள், ஆங்கிலத்தில் வேறும் 34 பக்கங்கள் மட்டுமே (Ebooks). பிறகு ஆங்கில மூலத்தையும் வாசித்தேன். முதல் முதலில் நான் ஆங்கிலத்தில் படித்த நாவல். ம்ம்ம்.... மொசமில்லை நமக்கும் புரியுது. இது நல்ல ஒரு ஆரம்பம் தான்.  இவ் அற்புதமான படைப்பை பற்றி ஒரு நாலு வரி நல்லதா எழுதிட்டு போகலாம்னு தோணுது. ஒருநாள் இந்த புத்தகம் உங்கள் கைகளுக்கு வரும் போது என்னுடைய பதிவை வாசித்த ஞாபகம் வந்து ஒரு வேலை வாசிக்ககூடும். தமிழிலே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கு, ஆங்கிலத்திலும் பிற உலக மொழிகளிலும் சேர்த்து கோடிகளை தொட்டுவிடும். இன்றைய திகதியில் ஆரம்பித்தாலும் படித்து முடிக்க நம் ஆயுள் காலமே போதாது! யாராச்சும் நாலு பேர் தொடர்ந்து ஒரு புத்தகத்தை பற்றி எழுதும் பொழுதுதான் நமக்கு படிக்க தோணும். எனக்கு இந்த புத்தகம் சில வருடங்களு...

இஃக்லூ | 2019 | தமிழ் படம்

Image
இஃக்லூ 2019 / தமிழ் படம் ஸ்பாய்லர்ஸ் இல்லை ஆனால் எச்சரிக்கை பண்ணுறேன் மனச கல்லாக்கிட்டு இந்த படத்தை பாக்குறதுனா பாருங்க இல்லாட்டி தவிர்த்துருங்க. நான் பார்த்துட்டு ஒரு நாள் முழுவதும் படத்தோட தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியாம தவிச்சேன்! சில சமயங்களில் என்னத்த மெச்சூர்ட் ஆகிட்டோம்? இன்னும் சின்னபுள்ளையாட்டம் படம் பார்த்து அழுதுட்டு இருக்கமேனு வெட்டகமாயிருக்கு! சமீப காலத்துல வந்த தமிழ் படங்களில் அருவி படத்துக்கு பிறகு என்னை  ரொம்ப அழுகவச்சபடம் இதுதான். கண்ணு கலங்குறதுக்கும், அழுறதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு ஒரு கணம் கண்ணீர் துளி எட்டிப்பார்த்துட்டு போறதுக்கும். தொடர்ச்சியாக வழியிறதுக்கும் உள்ள வேறுபாட்டதான் சொல்லுறேன். நிறைய படங்கள் கண்ணை கலங்க வச்சிருக்கு ஆனால் இந்த படம் அழுகவச்சிருச்சி! இத்தனைக்கும் பிற மொழிகளில் அழுவாச்சி படமுன்னு கேள்விப்பட்டால் தவிர்த்துருவேன். ஆனால் தமிழ் படமுன்னு வரும் போது அதை பண்ணமுடியாதே, இங்கு எப்பயாச்சும் ஒரு நாள் தான் இந்த மாதிரி நடக்கும். இவ் வகையான சில படங்களை பார்க்கும் போது கற்பனை கதை என்பதையும் மறந்து கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளை...

பாலைவன குறிப்புகள்

Image
இந்த பாலை நிலம் பலவிஷயங்களை கற்று தந்தது. அதில் ஒன்றுதான் மரங்களையும், புல்நிலங்களையும், பட்சிகளையும் நேசிப்பது. பாலைவன பசுந்தரையேன்ற ஒன்றை பற்றி கேள்விபட்டுருக்கீங்களா? கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் வெறும் மணல் குன்றுகளால் நிரம்பியிருக்கும் பாலைவனத்தில் கொடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில். வேறும் வார்த்தை ஜாலம் அல்ல கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மோசமான தட்ப வெப்பநிலை. (இதே பாலைநிலம் வருடத்தில் பாதிநாட்களில்  குளிர்காலத்தையும் சந்திக்கும்) அப்படிபட்ட இடத்தில் இயற்கையாக நீரூற்று தோன்றி அதை சுற்றி மட்டும் மரங்களும், சிறு செடி கொடிகளும், புற்தரைகளும், பட்சிகளும் நிறைந்து பச்சைப்பசேலாக காட்சிதரும். வழித்தவறியவர்களுக்கும், பாலைநில ஜீவராசிகளுக்கும் அதுதான் பூலோகசொர்க்கம். அதன் எழிலை வார்த்தை கொண்டு விவரிக்க முடியாது. நிஜத்தில் நான் பார்த்தது இல்லை. ஆனால் ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்தது உண்டு. நான் வசிக்கும் அல்-கோபார்  நகரத்தில் பிரமாண்டமான கட்டிடங்களும், நிலமே தெரியாதபடி எங்கும் தார் அல்லது கான்க்ரீட் கொண்டு அமைக்கபட்ட வீதிகளும். நொடிக்கு ஒரு தடவை நம்...

கடந்து வந்த பாதை - 2

Image
பொதுவாக ஆண்களின் பதினெட்டு  வயது தொடக்கம் முப்பது வயது வரையான காலக்கட்டம் ரொம்ப போராட்டம் மிகுந்ததாகயிருக்கும். வாழ்க்கையே போராட்டம்தான் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில்தான் ஒரு ஆண் வெளி உலகத்தை தனியா எதிர்கொள்ள ஆரம்பிக்குறான். இவ் பனிரெண்டு வருடங்களே அவன் வாழப்போகும் மிகுதி நாட்களை தீர்மானிக்க போகுது.  இக்காலப்பகுதியில் நல்ல வேலையை தேடி அலைஞ்சுட்டுயிருப்போம். கூடவே காதல் தோல்வி, குடும்ப சுமை. இப்படி ஒன்னு விட்டா ஒன்னுன்னு வந்து புரட்டி எடுத்துட்டுயிருக்கும். நானும் இதுக்கு விதிவிலக்கல்ல. கடந்து வந்த பாதை முதல் பகுதியில் ஸ்ரீ பாதகல்லுரிக்கு இன்டெர்வியூ போனது பற்றி சொல்லியிருந்தேன். அதற்கு பிறகு (நல்ல) வேலை தேடும் படலத்தை  ரொம்ப தீவிரமா நடத்திட்டுயிருக்கும் போது நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி சொல்ல போறேன். வாங்க கதைக்குள்ள போகலாம். சண்டே ஒப்சவேர், டெய்லி மிரர் மாதிரியான ஆங்கில பத்திரிகைகளில் நல்ல வேலை வாய்ப்புக்கு விளம்பரங்கள் வரும் தேடிப்பார்த்து விண்ணப்பிச்சுபாருன்னு நலன்விரும்பிகள் சொல்லக்கேட்டு நானும் என்தகைமைக்கு ஏற்றமாதிரி ஒரு வ...