Posts

காடு

Image
நாவல் / ஜெயமோகன்  இந்த வருடத்தில் வாசித்த மிக அற்புதமான நாவல். நல்லப்படியாகதான் இவ்வருடத்தை கடந்து போகிறேன். காரணம் உன்னதமான படைப்பாளியை அடையாளம் கண்டுக்கொண்ட மனநிறைவு. இது வரை ஜெமோவை படித்து இல்லையென்றால் இந்த புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள். பிறகு மனிதரை விடமாட்டீர்கள்! எனக்கு பித்து பிடிக்க செய்து விட்டார். நீலியின் நினைவில் கனத்தமனதுடன் நாவலை வாசித்து முடித்தேன். கிரிக்கும் நீலிக்கும் இடையிலான உறவு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.  புதிதாக வாசிக்க தொடங்குபவர்களுக்கு காடு ஒரு நல்ல ஆரம்பமில்லை. பொறுமையும் உன்னிப்பான அவதானமும் தேவை. எனக்கும் முதல் நூறு பக்கங்களில் சில தடுமாற்றம் இருக்கதான் செய்தது. கடினமான மொழிநடை ஊன்றி வாசித்தால் மட்டும் தான் உள்வாங்க முடியும். ஒருவேளை ஜெமோவின் எழுத்துக்கு நான் புதிது என்பதால்கூட இருக்கலாம். தொடக்கத்தில் இன்னும் சில பக்கங்களை தாண்டும் போது சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.  இன்னொரு முக்கிய சிக்கல் மலையாளம். கதைக்களமும், கதாபாத்திரங்களும் மலையாள பின்னணி கொண்டதால். ஆரம்பத்தில் பாதி புரியவேயில்லை. எ...

ஊரில் ஒருவரும் வாசிப்பதில்லை

Image
ஒரு காலத்தில் பந்தி பந்தியா எழுதிய நீண்ட பதிவுகளை கண்டால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன். கொஞ்சநேரம் ரிலேக்ஸ்சா பேஸ்புக் பார்க்கலாமுன்னு வந்தா இவனுங்க வேற இவ்வளவு நீளமா எழுதி சாகடிக்கிறானுகனு மனசுல தோணும். அதிலும் குறிப்பாக சினிமா, நூல் அறிமுகம் என தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பதிவுகள் வரும்போது பிடிப்பதேயில்லை. இவனுகளுக்கு வேற வேலையேயில்லையா? எப்பபார்த்தாலும் இதுமட்டுமானு மனதில் எண்ணிக்கொள்வேன். இது மூன்று வருடங்களுக்கு முன்னரான என் மனநிலை. இப்போ பாருங்க எதை வெறுத்தேனொ அதுவாகவே மாறிவிட்டேன். இப்பொழுதெல்லாம் நான் இடும் நீண்ட பதிவுகளை கண்டு என் நண்பர்கள் தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டுவது எனக்கு தெளிவா கேட்கும். பெருசு பெருசா எழுதி படுத்துறான். நிம்மதியா முகப்புத்தகத்துல உலாத்த  கூட  முடியலன்னு.  ஏழு வருடங்களுக்கு முன்பு கண்டி சிட்டி சென்டரில் ஒரு புத்தக கண்காட்சி நடந்தது. நான் மிகுந்த ஆவலுடன் போயிருந்தேன். எங்கு தேடியும் தமிழ் புத்தகங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை. சிங்கள, ஆங்கில புத்தகங்கள் மட்டும் நிறைந்து கிடந்தது. பெருத்த ஏமாற்றத்த...

காதலிக்கு சொல்லக்கூடாத கதை

நான் பத்தாம் அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும் போது இந்து சமயப்பாடத்தில் இளையான்குடிமாற நாயனாரின் கதையொன்று இருந்தது. எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கதையை சொல்லிடுறேன். இளையான்குடிமாறநாயனார் மிகத்தீவிரமான சிவபக்தர். எம்பெருமான் மீது மிகுந்த அன்புடையவர். பசியென்றுவரும் சிவனடியார்களுக்கு இல்லன்னு சொல்லாம வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார். எந்த சூழ்நிலையிலும் தவறாமல் அப்பணியினை மேற்கொண்டு வருகிறார். கடவுளின் அருளால் அவருக்கு மேலும், மேலும் செல்வமும் வளமும் பெருகுது. இப்படியெல்லாம் சுமூகமாக போய்ட்டு இருக்கும் போது சிவபெருமான் அவரின் பக்தியை சோதிச்சு பார்க்க முடிவுபண்ணுறாரு. சிவனுக்கு இதுதான் வேலையே! தன்னுடைய தீவிர பக்தர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரு.  இவர் கொடுக்குற கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர்கள் வேறு மதத்துக்கு மாறிப்போகாமல் இருந்தது பெரிய விஷயம். அந்த அளவுக்கு டார்ச்சர் லெவல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்லி நாயன்மார்கள் போகமாட்டாங்க. சிவன் மேல்  தீராக்காதல் அவர்களுக்கு. (ஆனால் குடியானவர்கள் யாரும் அப்படி போகவும் முடி...

தன்னம்பிக்கையும் அதிர்ஷ்டமும்

Image
சைபர் செக்யூரிட்டி தொடர்பான செமினார் ஓன்றுக்கு வேலை பார்க்கும் கம்பெனி சார்பாக நானும் இன்னொரு நண்பரும் உயர்தர நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றிய அனுபவபதிவுதான் இது.  மிக பிரமாண்டமான கட்டிடம் என் கைத்தொலைபேசியின் கேமராவாள் முழுவதையும் ஒரே படத்தில் உள்ளடக்க முடியாத அளவில் இருந்தது.  (இப்பொழுது பரப்பளவை கற்பனை செய்து கொள்ளுங்கள்) அரண்மனையின் வடிவில் வடிவமைக்கபட்ட கட்டிடம். பிரதான மண்டபத்தின் கதவு ஒவ்வொன்றும் ராட்சஸ அளவில் காணப்பட்டன. யானை ஒன்று இலகுவாக புகுந்து போகும் அளவு அகலமும். ஒட்டக சிவிங்கியொன்று எவ்வித சிரமமும் இல்லாமல் நிமிர்ந்து போகும் அளவுக்கு உயரமாகவும் காணப்பட்டது. சுவர்களில் நூதனமாக தீட்டப்பட்டு மாட்டப்பட்டிருந்த கிறுக்கல்  ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நா வருவேன்னு நினைச்சு கூட பார்க்கல!? இவ் அனுபவம் என் வாழ்நாள் அதிர்ஷ்டம். ஆனால் எதுவும் இலகுவாக கிடைத்து விடாது. அதற்கு உண்டான விலையை கொடுத்தாகணும். இந்த செமினார்ல நான் பார்த்து வியந்த விஷயம் சில வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு கடுமைய...

ராஸலீலா

Image
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ராஸலீலா நாவலை ஒருவாறு படித்து முடித்தாயிற்று. இப்பொழுது நூலை பற்றி சிறுகுறிப்பு எழுதியாகவேண்டும். எதை பற்றி எழுதுவதென்று தான் தெரியவில்லை. ஏனென்றால் சாருவின் நாவல்களில் கதையிருக்காது. கதைகள் தான் இருக்கும். எதை தொட? எதை விட? எனச்சிறுகுழப்பம். இதுவரை 'புதிய எக்ஸ்ஸைல்' , 'ஸிரோ டிகிரி' , 'ராஸலீலா' போன்ற பிரதான நாவல்கள் உட்பட சாருவின் பத்து புத்தகங்களை படித்து முடித்து விட்டதில் அவரின் எழுத்தை எப்படி அணுகவேண்டும் எனப்புரிதல் வந்துள்ளது.  தீவிர இலக்கிய நூல்களை மட்டும் படிப்பவர்களாக இருந்தால் அதன் பாங்கையே சாருவின் படைப்புகளில் தேடி ஏமாந்து போவீர்கள். இது வேறு ஒரு உலகம். அற்புதமான உன்னத அனுபவம். உங்களை புதிய தேடலுக்கு  உற்படுத்தி கொள்ளத்தயார் என்றால் பேரின்பம் காத்திருக்கின்றது. எழுத்துக்கு ஒரு சுவையுண்டு ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்கள் பாணியில் படைத்து தருவார்கள். சுவைத்து பார்த்து பிடித்ததை நுகர்வது தான் நம்வேலை. அந்த வகையில் சாருவின் எழுத்து தனிப்பட்ட வகையறா எல்லோருக்கும் லாவகமாக வந்து விடாது. ஆனால் வாசிப்பில் தீவிரமாக இலக்கி...

தீராக்காதலி

Image
ஹாய்... எப்படி இருக்கீங்க?  நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டாச்சா? என் மேல கோவமா? பரவால்ல கோவிச்சிக்கிறுக்குங்க ஆனா சந்தோசமா இருங்க. ஹாய்... நா நல்லா இருக்கேன்.  நீ எப்படி இருக்க? ஓஹோ... தேங்க்யு சார் !  நா எதோ இருக்கேன். என் மேல நீங்க கோவமில்லையா? எந்த காரணமும் சொல்லாம  உங்களை விட்டு போனதுக்கு? பரவால்ல. பேசுனத்துக்கு தேங்க்ஸ் நீங்க நல்லாயிருந்தா எனக்கு அது போதும். போறது தான் போனே, ஒரேடியா விட்டு போக வேண்டியது தானேடி?  பிறந்த நாளைக்கு கேக்குக்கு பதிலா  என்னை வெட்டிட்டு போகலாமுன்னு வந்தியா? அது எப்படி டீ? நீயே கொன்னு போட்டுட்டு சாக துடிச்சிகிட்டுயிருக்கவன் கிட்ட வந்து நீ இன்னும் உயிரோடதான் இருக்கிறியான்னு கேக்குற மாதிரி கேசுவலா சார் போட்டு பேசுற? கொஞ்சம் கூடவா உனக்கு வலிக்கல? கல்நெஞ்சுகாரிடி நீ! நீ பண்ணுனது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு பாவமும் அறியாத அப்பாவியை தூக்கு மேடையில் ஏற்றிய உடன் கேட்டானாம். எதற்கு ஐயா எனக்கு இந்த  தண்டனை? என்ன தவறு செய்தேனு சரி சொல்லுங்க. காரணம் தெரியாமல் எனக்கு உயிரை விட ஆசையில்லை என்றத...

Chat with கிறுக்கி

Image
   என்னை பற்றியெல்லாம் எழுதமாட்டியா? எழுதலாம். அதுக்கு நீ என்னிடம் இன்னும் நெருங்கி வரணும் ஐயே.... தேவல்லயே  இல்லடி..., நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல. தப்பா புரிஞ்சிக்காத. நாம இப்பே தானே பேச ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் நெருக்கமா பழகணும். அப்போ தான் எழுத முடியுமுன்னு சொல்லவந்தேன். (இந்த உரையாடலின் இடையே சில நேனோ செக்கன்கள் குறுக்கிட்ட என் மனது "டேய் நீ அவளை வேணும்னா ஏமாத்தலாம் என்கிட்ட முடியாது. உண்மையை சொல்லு, நீ இரட்டை அர்த்தத்தில் தானே சொன்ன? " ஆமா சும்மா பேச்சின்  சுவாரசியக்காக சொன்னேன். அதுக்கு ஏன்டா என்னை வில்லனாக்க பாக்குற?)  இப்படி அரட்டையின் வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பு வளர்த்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு  நான்  குட் மோர்னிங் டியர்  பதில் இல்லை மறுநாளும் நான்  குட் மோர்னிங்  பதில் இல்லை   கிறுக்கி, லூசு, நாய்.. மூன்றாம் நாள் அவளிடம் இருந்து பதில் வந்தது. ஹாய்...  எதுக்கு இப்படி திட்டுற...? ஒரு மெசேஜ் இல்லை....