Posts

இரண்டு கிழவர்கள் (லியோ டால்ஸ்டாய்)

Image
மொழிபெயர்ப்பு கதை தமிழில்: ரேவதி கேசவமணி  இரண்டு கிழவர்கள் டால்ஸ்டாயின் மிக பிரபலமான கதைகளில் ஒன்று. சிறிய கதை தான். வேறும் 48 பக்கங்கள் மட்டுமே, ஒரே அமர்வில் படித்து முடித்து விடலாம். இந்த கதையை அனைத்து வயதினரும் படிக்கலாம். முக்கியமா  உங்கள் பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தினை வாங்கி கொடுத்து வாசிக்க சொல்லுங்கள். இல்லாவிட்டால் நீங்களே படித்துகாட்டுங்கள். இதன் சாரத்தினை உள்வாங்கிவிட்டால் அந்த பிள்ளை எதிர்காலத்தில் இனவாதியாகவோ, மதவெறி பிடித்தவனாகவோ, தீவிரவாதியாகவோ மாறமாட்டான் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். மொத்தத்தில் அவனால் இந்த சமுதாயத்திற்கு எவ்வித கெடுதலும் நேராது.  சகமனிதன் பசித்திருக்கும் போது அதைக் கண்டுகொள்ளாது கடவுளுக்கு  கோடிக் கோடியா கொட்டி கொடுத்தும். வழிபாடுகள் செய்தும் எவ்வித பலனும் இல்லை. அன்புதான் சிவம். கடமைக்காக இறைவனை தொழுவதை காட்டிலும். சக உயிர்களிடத்தில் நீ காட்டும் கருணைதான் உன் கடவுளை திருப்தி படுத்தும். உன் கடவுள் எந்த மதமாகயிருந்தாலும் சரி, அல்லது நீ எந்த கடவுளை வணங்குபவனாக இருந்தாலும் சரி இது பொருந்தும். நானும் டால்ஸ்டா...

காதல்காரி

Image
பைத்தியக்காரத்தனமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் மீண்டும் அவனை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. என் முன்னால் இரண்டடி தூரத்தில்  தான் அமர்ந்திருக்கின்றான். அவன் முகத்தில் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லை. அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.  காதலித்த நாட்களில் நான் அவனுடன் பேசியதை விட அவன் கண்ணுடன்  பேசியது தான் அதிகம். இன்றும் அதைத்தான் தொடர்ந்து கொண்டிருந்தேன்.  எனக்கு அது சுலபமாகயிருந்தது. உண்மையாகவும் தைரியமாகவும் பேசிக்கொள்வோம். அவனை விட அவன் கண்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். ஒருவேளை அது அவனிடம் நான் பேசியதையெல்லாம் பகிர்ந்திருக்கலாம். நான் ஒரு முட்டாள் அவன் கண்கள் அவனுக்கு நேர்மையாக இருக்காதென்று எப்படி நம்பலாம். ஸஹர் கலிஃபா  சொல்வது போல காதல் விஷயத்தில் என் அறிவு துணை நிற்பதில்லை.  ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருக்கின்றேன். நான் என்னத்தான் வாய் கிழிய பேசினாலும். மண்டை வெடித்து போகும் அளவுக்கு வாசித்தாலும். காதல்வயப்படும் பொழுது எதுவுமே எனக்கு உதவியதில்லை. அத்தருணங்களில் அவனை போன்று என் அறிவும் என்னை கைவிட்டு...

நடுநிசி

எனக்கு அப்பொழுது எட்டு வயது. தொண்ணூறுகளின் ஆரம்பக்காலம். வவுனியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சிதம்பரபுரம் அகதி முகாமில் வசித்த நாட்கள். ஒரு பக்கம் புலிகளுக்கும். இலங்கை அரசாங்கத்திற்கும் உக்கிரமாக சண்டை நடந்த காலக்கட்டம். எங்கள் முகாமுக்கு வருடம் முழுவதும் அகதிகள் வருவதும். போவதுமாக இருப்பார்கள். பெரும்பாலும் சொந்த இடத்துக்கு திரும்பி போகமுடியாமால் அங்கேயே வருடக்கணக்கில் தங்கி விடுபவர்கள் அதிகம். அகதி முகாம் என்றாலும் பரப்பளவிலும் அமைப்பிலும் ஓர் கிராமத்தை ஒத்தது. நூலகம், கிராமசேவகர் அலுவலகம், காவல் நிலையம், கோயில், மைதானம் எல்லாமுண்டு. ஆனால் சொந்தமாக நிலம் வாங்கவோ, விற்கவோ  முடியாது. முதலில் அங்கு நிலம் வாங்கும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் யாருக்கும் இருக்கவில்லை. பெரும்பாலும் எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள். மூன்று வேலை சாப்பாட்டுக்கே படு திண்டாட்டமாகதானிருக்கும். அரசாங்கத்தின் ரேஷன் அரிசியில் தான் பலர் உயிர்காத்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தில்   வீடு வாசல், வாழ்வாதாரத்தை விட்டு, உடுத்திய உடுப்புடன் கையில் அகப்பட்டதை காவிக்கொண்டு இரவோடு இரவாக வந்த ச...

ஊரின் மிக அழகான பெண்

Image
ஃப்ரன்ஸ் காஃப்காவின் " உருமாற்றம் " நாவலை பற்றி சிறு பதிவு எழுதலாமென்று ஆரம்பித்தேன். எழுத முடியவில்லை இத்தனைக்கும் முன்கூட்டியே மனதில் எப்படி எழுத வேண்டும் என்ற சித்திரத்தை வரைந்தாயிற்று. சில சமயம் இப்படி நிகழ்வதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கொஞ்சம் முயற்சித்து பார்க்கலாம். முடியாவிட்டால்  கட்டாயப்படுத்த கூடாது. எழுத்து அதுவாக நிகழவேண்டும். அதனால்  அப்பிடியே அதை நிறுத்திவிட்டேன். இன்றைய விடுமுறை நாளில் எதையாவது எழுதாவிட்டால் எனக்கு இந்த நாள் முழுமை பெறாது. எதோ குறையாக மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நான் ஏற்படுத்தி  கொண்ட பழக்கம் மீது. சரி வேறு எதாவது உருப்படியாக செய்தாக வேண்டுமென்று நினைத்து கொண்டேன். உடனே சாருவின் " ஊரின் மிக அழகான பெண் "  என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு இடைச்சொருகலாக ஒன்றை குறிப்பிடவேண்டும். புத்தகத்துக்கு தலைப்பிடுவதிலும். முன் அட்டையை  தெரிவு செய்வதிலும் சாருவை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது!  முதல் குழந்தைக்கு உண்டான பரிவிலும் நேசத்திலும் ப...

உருமாற்றம்

Image
உருமாற்றம் (The Metamorphosis) ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924) மொழிப்பெயர்ப்பு நாவல்  "கனவுத்தன்மையை கொண்ட என் அகவாழ்க்கையைச் சித்தரிக்கும் உணர்வு பிற எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டது."  1914 ஆம் ஆண்டு காஃப்கா எழுதிய நாட்குறிப்பிலிருந்து.  *** இது ஒரு வித்தியாசமான நாவல்; ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும் க்ரகர் செம்சா  (கதையின் நாயகன்) தான் ஒரு ராட்சத பூச்சியாக உருமாறியிருப்பதை கண்டுணர்ந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், குழப்பத்துக்கும் உள்ளாகின்றான்.   இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் அவனுக்கு புலப்படவில்லை. ஒருவேளை கனவாகயிருக்க கூடும் அல்லது தற்காலிக மாற்றம் தான். நான் எழுந்து கொண்டால் பழைய நிலைக்கு என் உடல் மீண்டும் வந்து விடும். எனப்பலவாறு சிந்தனைகள் அலைபாய வயிற்று பகுதி கூரையை பார்க்க கட்டிலில் கிடந்தவன். உடலை திருப்பி எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறி கொண்டிருந்தான். புதிய பூச்சி உடல் அக்கணம் வரைக்கும் முழுதாக க்ரகர் செம்சாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை. கடிகாரமுட்கள் சுழன்று நேரம் கடந...

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

Image
சிறுகதைகள் / போகன் சங்கர்  நான் முழுமையாக வாசித்து முடித்த சிறுகதை தொகுப்பு. அருமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நண்பர் Govinda Raj க்கு நன்றி! எவராவது சொன்னால் தான் சில நல்ல படைப்புகளை கண்டடைய முடிகின்றது. நம்மை பாதித்துவிட்ட படைப்பை பற்றி எதுவும் பேசாமலிருப்பது மாகாபாவமென  உணருகிறேன். முதலில் இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் எதோ புராணக் கட்டுரை தொகுப்பாகயிருக்க கூடுமென நினைத்து கொண்டேன். இந்த கணம் வரை உங்களில் பலருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும். இது முற்றிலும் வேறு மாதிரியான அனுபவம். போகன் சங்கர் தன்னை பாதித்த ஜெ மோவிற்கு நன்றி சொல்லித்தான் கதைகளை சொல்லத் துவங்குகிறார்.  " பூ ",  " படுதா ",   " யாமினி அம்மா ", " நடிகன் "  போன்ற கதைகளில் அவரின் தாக்கத்தை உணரமுடிந்தது.  போகனுக்கு நன்றாக கதை சொல்ல வருகின்றது. எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கதை பிறகு கதைக்குள் இன்னோரு கதை. பிறகு இரண்டும் சந்திக்கும் தளம். அபாரம்! சிறந்த வாசிப்பனுபவம். இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு சிறுகதை எழுதும் ஆசையே போய்விடுகிறது. இன்னும் ...

காடு

Image
நாவல் / ஜெயமோகன்  இந்த வருடத்தில் வாசித்த மிக அற்புதமான நாவல். நல்லப்படியாகதான் இவ்வருடத்தை கடந்து போகிறேன். காரணம் உன்னதமான படைப்பாளியை அடையாளம் கண்டுக்கொண்ட மனநிறைவு. இது வரை ஜெமோவை படித்து இல்லையென்றால் இந்த புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள். பிறகு மனிதரை விடமாட்டீர்கள்! எனக்கு பித்து பிடிக்க செய்து விட்டார். நீலியின் நினைவில் கனத்தமனதுடன் நாவலை வாசித்து முடித்தேன். கிரிக்கும் நீலிக்கும் இடையிலான உறவு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.  புதிதாக வாசிக்க தொடங்குபவர்களுக்கு காடு ஒரு நல்ல ஆரம்பமில்லை. பொறுமையும் உன்னிப்பான அவதானமும் தேவை. எனக்கும் முதல் நூறு பக்கங்களில் சில தடுமாற்றம் இருக்கதான் செய்தது. கடினமான மொழிநடை ஊன்றி வாசித்தால் மட்டும் தான் உள்வாங்க முடியும். ஒருவேளை ஜெமோவின் எழுத்துக்கு நான் புதிது என்பதால்கூட இருக்கலாம். தொடக்கத்தில் இன்னும் சில பக்கங்களை தாண்டும் போது சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.  இன்னொரு முக்கிய சிக்கல் மலையாளம். கதைக்களமும், கதாபாத்திரங்களும் மலையாள பின்னணி கொண்டதால். ஆரம்பத்தில் பாதி புரியவேயில்லை. எ...