Posts

Rome

Image
 2005 / series / drama  No Spoilers  நாம் ரோமின் வரலாற்றை முழுமையாக படித்திருக்காவிட்டாலும். சீஸர், கிளியோபாட்ரா, மார்க் ஆண்டனி போன்ற பெயர்களும். கிளாடியேற்றர்ஸ், ஏரினா, செனட், போன்ற வார்த்தைகளும் நமக்கு பரீட்சயமானவை. சிறுவயது முதல் எதோ ஒருவகையில் இவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது.  "All roads lead to rome" என்ற பிரபலமான சொல்லாடல் கூட அப்படிபட்ட ஒன்றுதான். ரோம் இரண்டு சீசன், 22 எபிசொட்களை கொண்ட தொடராகும். ஒவ்வொரு எபிசொட்டும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது. சுருக்கமாக ரொம் இராச்சியத்தின் வரலாற்றை சிறப்பாக படைத்துள்ளார்கள்.  கி.மு 52 ஆண்டிற்கு நம்மை அழைத்து சென்று, மத்தியகால ரோமில் வாழ்ந்த நகரவாசிகளின் அரசியல், கலாசாரம், வாழ்வினை கண்முன்னே காட்டி நமக்கும்  காலப்பயணம் செய்த உணர்வினை ஏற்படுத்திவிடுகிறது. கி.மு 52 பிறகு ஜூலியஸ் சீஸரின் எழுச்சியும், அவர் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளும்  வீழ்ச்சிக்கு பின்னார் ஆட்சியிலும் அரசியலிலும் நிகழும் திடிர் மாற்றங்களும், குழப்பங்களும் தான் கதைகளம். மொத்தமும் புனைவு ...

முதல் நெருப்பு

Image
இன்று நினைத்த மாத்திரத்தில் நெருப்பை உண்டாக்கி விதவிதமான உணவுகளை சமைத்து ருசித்து உண்கிறோம். முதன் முதலில் சமைத்து உண்ணும் யோசனை ஆதிமனிதனுக்கு எப்படி வந்திருக்கும் என்று சிந்தித்து பார்த்ததுண்டா? எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு  எம் சகோதர மூதாதைய சில மனித  இனத்தினர் நெருப்பை அப்பப்போது  மட்டும் பயன்படுத்தியிருக்க கூடும்.  மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு  முன்புதான் நெருப்பினை அன்றாட தேவைகளுக்காக நம்முன்னோர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.  தொடக்கத்தில் நெருப்பை வெளிச்சத்திற்கும், குளிர்காய்வதற்கும், தங்களை தாக்க வந்த வேட்டை விலங்குகளை விரட்டவும் மட்டுமே  பயன்படுத்தினார்கள்.  இயற்கையின் மாபெரும் சக்தியான நெருப்பை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த முதல் உயிரினம் மனிதனே, எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத மாபெரும் ஆற்றலை தன்வசப்படுத்தினான். ஒரு மனித குரங்கினைவிட உடல்பலம் குறைந்த ஆதிவாசி பெண்ணால் சிறு தீ பொறியை கொண்டு பேரும் காட்டையே சாம்பலாக்க முடிந்தது. நெருப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மனிதனின் வளர்ச்சி பாதையில் பே...

பிணந்தின்னிகள்

Image
என் நிர்வாண உடலை ஊரே கூடி  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது? எதுவும் விளங்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் முடியவில்லை. என் உடல் நிலத்தில் கிடையாக வானம் பார்த்தப்படி கிடக்கிறது. கைகளும் கால்களும் நான்கு திசையிலிருந்த  மரத்துடன் சேர்த்திழுத்து அசைக்க முடியதாப்படி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது.  அவர்கள் ஒரு பக்கம் கயிராக எனது மார்புக்கச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  யோனியிலிருந்து வடிந்த குருதி நிலத்தில் படிந்து சிகப்புத்திட்டுகளாக காய்ந்து போயிருந்தது. அதில் எறும்புகளும், ஈக்களும் தங்களுக்கான    ஆகாரத்தை தேடிக்கொண்டிருந்தன, இத்தனை நடந்தும் நான் எவ்வித வலியையும் உணரவில்லை.  ஒரு நாளுக்கு மேலாக இங்கே கிடக்கிறேன். உடல் உப்பி, அழுக தொடங்கிவிட்டது போல? கூடியிருந்த சனம் மூக்கை மூடிக்கொண்டதை கவனித்தேன். கடுமையான துர்நாற்றம் காற்றில் கலந்திருக்க கூடும். எனக்கு இப்பொழுது எழுந்திருக்க வேண்டும். ஆனால் என் கட்டுக்களை அவிழ்த்துவிடயாரும் முயற்சிக்ககூட இல்லை. வெறுமனே வேட...

நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தம்

Image
நாடுகள் எல்லைகளை மூடுவதும், நகரங்களை முடக்குவதும். சமூகங்கள், தனிநபர்கள் குவாரண்டைன் நிலைக்கு உட்படுத்தபடுவதும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவலை தடுப்பதற்கு குறுகிய காலத்தில் பயனளிக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தொடர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையா பாதிக்கப்படும். உலகமயமாக்களின் பின்பு ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் பொருளாதாரதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கபட்டுள்ளது. உலக நாடுகளை விடுங்கள் நாம் வாழும் நகரங்களையும், கிராமங்களிலும் இன்றைய நிலைமையை கவனித்து பாருங்கள். முதற்கட்டமாக தினக்கூலிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு வேலை சாப்பாட்டிற்கே பேரும் திண்டாட்டமாய் போகும். மிடில் கிளாஸ் மக்களிடத்தில் பணமிருந்தாலும் பொருட்களும், சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கும்  சிக்கலான நிலைமைதான். செல்வந்தர்கள் சில மாதங்கள் தாக்கு பிடிப்பார்கள். பிறகு அவர்களின் பாடும் திண்டாட்டம்தான்.  வரலாற்றில் உலகமயமாக்கலுக்கு முன்பு, 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோயான பிளாக் டெத் (Black death) மூலம், ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், கிழ...

கை குலுக்கும் பழக்கத்தின் வரலாறு

Image
கொரோனாவின் தீவிர பரம்பலை தொடர்ந்து பல உலக நாடுகள் கை குலுக்குவதை தவிர்த்து கொள்ளும்படி மக்களை அறிவுறுத்தியுள்ளன, சீன அரசாங்கம் கை குலுக்குவதை தவிர்க்கும் சமிஞ்சகைகள் அடங்கிய பதாதைகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளது. நகரங்களில் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ள ஆர்ட்டிபிஸல் இன்டலிஜெண்ட் ட்ரோன்களும் வானத்தில் வட்டமிட்டபடி கை குலுக்குவதை தவிர்க்கும் படி  குரல்வழி ஏச்சரிக்கை செய்கிறது.  95% கை குலுக்குவதன் மூலம் வைரஸ் பரவல் சாத்தியமாகிறது என்பதே  இதற்கு காரணம்.  கை குலுக்குவதற்கு பதிலாக தமிழரின் கை கூப்பி கும்பிடும் முறையை சொல்லி சிலர்  பெருமைபட்டுக்கொள்ள, ஒரு சாரார்  முன்னோர்களின் தீண்டாமையின் ஒரு அங்கம் தான் அது வேறு எந்த  காரணமும் இல்லை. எல்லாம் சாதிவெறி பிடிச்ச பயலுங்கனு திட்டிக்கொண்டு திரிகிறார்கள்.  இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் கை கூப்பி வணங்கும் முறை தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆசிய நாடுகளில் பலவற்றில் பழக்கத்தில் உள்ளது.  இதெல்லாம் ஒரு பக்கமிருக்க கை குலுக்கும் பழக்கத்தின் வரலாற்றை தேட...

T-வைரஸ் vs கோவிட்-19

Image
Resident evil என்றொரு பிரபலமான அறிவியல் பாண்டஸி வகையை சார்ந்த ஹாலிவுட் திரைப்படதை பார்த்து உள்ளீர்களா ? அதில் அம்ரெல்லா கார்பொரேஷன் என்னும் நிறுவனம் T-வைரஸ் என்னும் படுஆபத்தான  உயிரியல் ஆயுதத்தை இரகசியமாக உருவாக்கும். ஒரு விபத்தில் அந்த வைரஸ் அடங்கிய பரிசோதனை குழாய் கீழே விழுந்து வெடித்து சிதற T-வைரஸ் பரவஆரம்பித்து ஒரு கட்டத்தில் கட்டுப்பாடின்றி அந்த நிறுவனம் அமைந்திருந்த ரக்கூன் நகரம் முழுவதும் பரவதொடங்கிவிடும். T-வைரஸால் பாதிக்கபட்ட மனிதர்கள், விலங்குகள் என எல்லோரும்  ஸோம்பியாக உருமாறி மனிதர்களை கடித்து இரத்ததை உறிஞ்சு குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடிப்படும் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் பிறகு அவர்களும் ஸோம்பிதான். அம்ரெல்லா நிறுவனம் தங்கள் தவறு உலகத்துக்கு தெரியக் கூடாதென்று  அந்த நகரத்தை தனிமைப்படுத்தி கூண்டோடு எல்லோரையும் அழித்து விடமுயற்சிப்பார்கள். இப்படி கதை பாகம் ஆறு வரைக்கும் நீண்டு போகும். நல்ல சுவாரசியமான திரைப்படதொடர். கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான சம்பவங்கள் தான் இப்பொழுது உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன ஒரு குறை? ஸோம்பிய...

கொரோனாவிற்கு எப்பொழுதுமருந்து கண்டுப்பிடிக்கபடும் ?

வைரஸை மருந்தின் மூலம் அழிக்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால்  கொரோனாவிற்கு காரணமான கோவிட்-19 (COVID-19) வைரஸை எந்த மருந்தை கொண்டு குணப்படுத்தமுடியும்? என்ற ஐயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். பொதுவாக வைரஸ் தனது மூலக்கூற்று கட்டமைப்பை மாற்றி அமைந்துக் கொள்ளக்கூடியது. உதாரணமாக வைரஸ் ஒன்றை நாம் அடையாளம் கண்டு அதனை அழிக்க ஒரு மருந்தை (என்டிபயொட்டிக்கை)  உட்கொள்ளும் போது முதலில் அது தாக்கப்பட்டாலும் பிறகு அம்மருந்தினை  அடையலாம் கண்டு தன்வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும். அடுத்த முறை நாம் அதே மருந்தை எடுத்து கொள்ளும் போது அதனால் குறிப்பிட்ட வைரஸை இனங்கண்டு அழிக்க முடியாமல் போய்விடும்.  ஆனால் நம் உடலில் இயற்கையாக அமைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான நிர்பீடன தொகுதிக்கு வைரஸ் உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை இனங்கண்டு அழிக்கும் வல்லமையுண்டு. ஒரு தடவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடையலாம் கண்டுக் கொண்டால் அந்த தகவலை பதிவு செய்து வைத்து கொண்டு அவை மீண்டும்  நம் உடலில் புகும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தில் உள்ள வெண்குருதி சிறு துணிக்கைகளை...