Posts

நரகம்

Image
விளக்கிலிருந்த கடைசி சொட்டு   மண்ணெண்ணையும் எரிந்து  தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த  விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது.  அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது.  அணைந்து போன குப்பி விளக்கை  வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக  ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை.  மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால்  இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் உண்டான அத...

ஆதிமனிதனின் புணர்ச்சி

Image
ஆதியில் கற்கால மனிதர்கள் சிறு சிறு கூட்டமாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.  அக்கூட்டத்திலுள்ள ஒரு ஆண் விரும்பிய எந்த பெண்ணுடன் வேண்டுமென்றாலும் உறவுக் கொள்ளலாம். அதே போல  பெண்ணும் அக்கூட்டத்திலுள்ள எந்த ஆணுடனும் உறவுக் கொள்ளமுடியும். அதனால் எது தனக்கு பிறந்த பிள்ளையென்று ஒரு ஆணுக்கு சரியாக தெரியாது. அவன் எல்லா பிள்ளைகளையும் சமமாக பாவித்து உணவு, பாதுகாப்பு அளித்து பார்த்துக் கொண்டான்.  அச்சமூகத்தில் ஓர் ஆதிவாசி பெண் கருவுற்றிருக்கும் தருணத்தில் தான் தீவிரமாக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடனும் புணர்ச்சியில்  ஈடுபடுவாள். அதற்கு காரணம்  காமவேட்கையல்ல, பல ஆண்களின் கவனிப்பும் பாதுகாப்பும் தன் பிள்ளைக்கு கிடைக்கும் என்பதே. அக்காலத்தில்  பல ஆண்களின் விந்துக்கள் பெண்ணின் கருவறையில் உள்ள முட்டையுடன் சேரும் பொழுதுதான் குழந்தை உருவாகுவதாக நம்பினார்கள். அதனால் ஒரு சிறந்த வேட்டைக்காரன், புல்லாங்குழல் வாசிப்பவன், அறிவாளி, நற்குணங்களை உடையவன், பலசாலியேன தேர்ந்தெடுத்து உறவுக் கொள்வாள். தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு இந்த திறன்கள் எல்லாம் வந்துவிடும் என்...

வேளாண்மை புரட்சியும், வேட்டையாடி வாழ்கையும்

Image
 வேளாண்மை புரட்சிக்கு பிறகு  மனித இனம் பல்கி பெருகி சிறப்பாக வளர்ச்சியடைந்தது என்றாலும். வேளாண்மை புரட்சி என்பது உண்மையில் நமக்கு நாமே வைத்து கொண்ட ஒரு ஆப்புதான். காரணம் நாம் காட்டில் வேட்டையாடிகளாக வாழ்ந்த பொழுது அடுத்த நாளை பற்றிய கவலையில்லை. பல வகையான விலங்குகளை வேட்டையாடியும், காய் கனிகளை பறித்துண்டும் வாழ்ந்தோம். ஒரு வேலை அன்று எதுவும் கிடைக்காமல் பட்டினியாக இருந்தாலும் மறுநாள் எதோ ஒன்றை பெற முடிந்தது. வாழ்கை கடுமையா இருந்தாலும் சுகந்திரமாகவும் நிம்மதியாகவும்  உலாவ முடிந்தது.  மனிதன் வேட்டைச் சமூகத்திலிருந்து  விலகி வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு நிலத்தை உழுது பண்படுத்தி,  பயிரை விதைத்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சி, களையகற்றி, பிறவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்து என அறுவடை காலம் மட்டும் இரவு பகல் பாராது மிக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  அத்துடன் முடியவில்லை. அறுவடைக்கு பிறகு தானிய களஞ்சியத்தை பிற  இனக்குழுக்களிடம் இருந்து பாதுகாக்க  கடும் பிரயத்தனபடவேண்டும்.  பலசாலியான ஒரு இனக்குழு திடீரென தாக்கும் போது ...

புது எழுத்தாளரும் புத்தம் புது எழுத்தாளரும்

குறுங்கதை   Autofiction  ஒரு புது எழுத்தாளரிடம் நான் எழுதிய சில கதைளை கொடுத்து  "இந்த பாணியில் ஒரு புத்தகம் எழுதினால் நல்லாயிருக்குமா? வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கனு" கேட்டேன். பல நினைவூட்டலுக்கு பிறகு அவர் வாசித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். நானும் ஆவலுடன் போயிருந்தேன். பு.எழுத்தாளர்:  என்ன தோழர் மயிரு மாதிரி எழுதி வச்சிருக்கிங்க? இதெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுட்டு புதுசா எழுதுங்க என்பதை ரொம்ப நாசூக்கா நாகரிகமா சொன்னார். பிறகு " இன்னும் இந்த காதல் கேசத்தை விட்டால் வேற எதும் இல்லையா? எத்தனையோ பேர் இதை எழுதி, எழுதி கிழிச்சு தொங்க போட்டுட்டாங்க தோழர்?  எனக்கு தெரியும் உங்களுக்கு திறமை இருக்கு இதை அப்பிடியே உங்க தளவாணிக்கு கீழே வச்சிட்டு வேற  எதாச்சும் புதுசா ப்ரஷ் கன்டென்ட் தேடி எழுதுங்க, என்ன சொல்லுறது  புரியுதா?  நான்:  இல்லை...., சார் புதுசா எழுதினாலும் இப்படிதான் எழுதவரும். பு.எழுத்தாளர்:  தோழர் உங்களால முடியும், எனக்கு தெரியும் யோசிங்க, நல்லா யோசிங்க ஒன்னும் அவசரமில்லை  நான்:  ...

மோசமானவன் மனிதன்

Image
தப்பிப்பிழைத்தல் வரமா, சாபமா ? பரிணாமத்தில் ஒரு உயிரினத்தின் வெற்றி அதன் மரபஅலகின் எண்ணிக்கையை கொண்டு அளக்கபடுகிறது. அதாவது  அதிகப்படியான எண்ணிக்கையை  கொண்ட இனம் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஆனால் அந்த வெற்றி தனிப்பட்ட ரீதியாக ஒரு உயிரி அடைந்த துன்பத்தை பற்றி கணக்கில் கொள்ளாது.  டயனோசர்கள் இன்று பூமியிலிருந்து  முற்று முழுதாக அழித்து போய்விட்ட  ஓர் உயிரினம். அதன் உயிர்ப்பான மரபு அலகுகள் எதுவும் இப்பொழுது  மிச்சமில்லை. இயற்கையையுடன்  போராட திராணியற்று அழிந்து போய்விட்டது. ஆனால் வாழ்ந்த  வரைக்கும் சுகந்திரமாக காட்டில் சுற்றி திரிந்து தனக்கு பிடித்த இணையுடன்  சேர்ந்து வாழமுடிந்தது. அதே நேரம் இன்று பண்ணை விலங்காக உலகில் அதிகமா இருக்கும் மாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பாருங்கள். இன்றைய திகதியில் காட்டிலிருக்கும் எந்த ஒரு பாலுட்டியை விடவும் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். அதன் வாழ்வுதான் எத்தனை துன்பகரமாக மாறிவிட்டது.  ஆதியில் தன் இனத்துடன் சேர்ந்து பசுமையான காட்டில் சுற்றி திரிந்தது  போல அதனால் இப்பொழுது ...

கோதுமையை நாம் வளர்க்கவில்லை அதுதான் நம்மை வளர்க்க வைத்தது.

Image
மரபு அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால். கோதுமை சிறப்பாக வெற்றியடையந்த ஒரு தாவர இனமாகும். இன்று பூமியின் மேற்பரப்பில் இதன் அளவுக்கு வேறு எந்த தாவரமும் பல்கிபெருகியதில்லை. மனிதனால் பல லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு பயிரிடபடுகிறது.  கரடுமுரடான நிலத்தை கோதுமையின் வளர்ச்சிக்கு உகந்தவாறு தயார்படுத்தும் போது அந்த நிலத்தில் பூர்விகமாகயிருந்த மற்றைய மரங்களையும், தாவரங்களையும் அழித்து. நிலத்தை உழுது பண்படுத்தி, விதைத்து, நீர்ப்பாய்ச்சி, களையகற்றி, மருந்து தெளித்து, பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாத்து என  அறுவடைக்காலம் மட்டும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம்.  அதன் தேவையும் நாள்பட நாள்பட அதிகரித்துதான் செல்கிறது. நாம் கோதுமையிடம் இருந்து உணவை பெற்று கொள்கிறோம். அதேநேரம் கோதுமையும் நம்மை சிறப்பாக பயன்படுத்தி  பல்கிபெருகி கொண்டிருக்கிறது.  பூமியில் இன்றைய திகதியில் மிகவும் வெற்றியடைந்த தாவரம் கோதுமைதான். தன் வழியில் குறுக்கிட்ட எல்லா எதிரிகளையும், போட்டியாளர்களையும் மனிதனை கொண்டு அழித்து பெருகி கொண்டிருக்கிறது. நாம் அதற்கு சேவ...

பிரேக் அப் குறுங்கதைகள்

Image
ஆசிரியர்: அராத்து அராத்து எனக்கு "நீயா நானாவின்"  மூலமாக தான் அறிமுகமானார். அவர் எழுத்தாளார் என்பதும் சாருவின்  நெருங்கிய நண்பர் என்பதும் சமீபத்தில் தான் தெரியவந்தது. அவரின் பேச்சு, சிந்தனை எனக்கு பிடிக்கும். சில  நேரங்களில் உளறுவது சுத்தமாக  பிடிக்காது. தொடர்ந்து தீவிர இலக்கியத்தை படித்தபடியால், கொஞ்சம் கணம் குறைந்ததாக ஏதாவது வாசிப்போம்  என்று தேடிய பொழுது இந்த புத்தகம் கண்ணில்பட்டது. அட்டைபடம் வேறு  அதை உறுதிப்படுத்திற்று. தலைப்பிலேயே எதை பற்றிய புத்தகம் என்பதை அனுமானித்துக் கொண்டேன். படிக்க ஆரம்பித்தால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. அராத்தின் எழுத்தில் உள்ள டார்க் ஹியூமர் எனக்கு பிடிக்கும். அத்துடன் இதில் காமமும் கை கோர்த்துள்ளது ! விடலை பருவத்தில் மறைத்து வைத்து  படித்த "பிரியா"  பத்திரிகையின் நினைவு வந்து போனது.  ஆண், பெண் உறவுசிக்கல் பிறகு  பிரேக் அப் இதுதான் ஒவ்வொரு கதையும். சில உண்மை மாந்தர்களின் கதைகளை தான் புனைந்து உள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். புத்தகம் முழுவதும்  ...