Posts

எங்கே உன் கடவுள் ?

Image
நான் இந்து மதத்தை நேசிப்பவன்,  தமிழ் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் மிகுந்த  பற்றும் மரியாதையும் உடையவன். கவனிக்க, ஆனால் இவை எதன் மீதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவன் அல்ல.,  என் நம்பிக்கையும், மரபையும், பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான சுகந்திரத்தை இந்து மதம் எனக்கு அளித்தது. அதனால் அறிவையும் புரிதலையும் வளர்த்து கொள்ள முடிந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் என் கடவுளுக்கு மதமில்லை. மொழி பற்றுண்டு இனவெறியில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா  ஊரும் என் ஊர், எல்லா  மொழியும் என் மொழி.  எல்லோரும் ஹோமோசெபியன்  என்ற கொள்கையில் வாழ்பவன்.  விடலை பருவத்தில் திடீர் என உதிக்கும் ஞானத்தில் இந்து மதத்தில் உள்ள புராணங்களையும், நம்பிக்கைகளையும் கேலிக்கு உள்ளாக்கி விமர்சிப்பவர்களை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.  நானும் " பிக் பேங்க் தியரியை " ,  "டார்வினின் கூர்ப்பு கொள்கையையும்" , அறிந்து கொண்ட புதிதில் திமிறியபடி பாட்டியுடன் "எங்கே உன் கடவுள்? காட்டுனு" விதண்டாவாதம் செய்தவன் தான். அவள் என்னை பார்த்து புன்னக...

வாசிப்பு

Image
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அடிபட்டு அந்த அனுபவங்கள் என்னை பண்படுத்திவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தேன். புதிதாய் வேறு ஒரு சூழலில் நுழையும் போது அங்கு எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை  புரட்டி போட்டு மிதிக்க ஆரம்பிக்கும்.  " என்ன மயிறு வாழ்க்கைடா? "  இதுவென்று வெறுத்துபோய் திக்கற்று நிற்கும் போதுதான் உணர்ந்தேன் மரணம் மட்டும் நீ ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்  நின்று புலம்பி கொண்டிருப்பதால் இங்கு ஒன்றும் மாறிவிட போவதில்லை என்பதை.  அப்படிபட்ட கையறு நிலையில்தான்  என்னை வழிநடத்தும் குருவாக புத்தகங்கள் அமைந்தன   இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன் பிறகுதான் புரிந்தது வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்க கூடாது,  அதன் போக்கில் நாம் நகர்ந்து விடவேண்டும் என்பதை.  புத்தகம் என் உற்ற நண்பன்  அவன் மட்டும் தான் என்னுடன் கடைசி மட்டும் வருவான்.  சோர்ந்து துவண்டு  விழும் போதெல்லாம் கை  கொடுத்து எழுப்பிவிடுகிறான். ஹாடோனிஸ்டாக வாழ கற்றுக் கொடுத்தான். இப்பொழுதெல்லாம் வாழ்க்கையை நேசிக்கவும் கொண்டாடவும் ஆரம்ப...

நரகம்

Image
விளக்கிலிருந்த கடைசி சொட்டு   மண்ணெண்ணையும் எரிந்து  தீர்ந்து கொண்டிருந்தது. காற்றின் போக்கில் ஆடியப்படியிருந்த  விளக்கின் சுவாலை மெதுமெதுவாக சிறுத்து ஒளியிழந்து கடைசியில் முழுதாக அணைந்து போனது.  அந்த கணம் திரியின் செந்தணலில் இருந்து நீண்டு எழுந்த கரும்புகை ஓர் நேர்க் கோடாக மேல் நோக்கி சென்று மறைந்தவுடன் திரியின் தணலும் அணைந்து வெளிச்சம் முழுதாக நீங்கி, வீடு முழுவதும் கும்மிருட்டானது.  அணைந்து போன குப்பி விளக்கை  வெறித்து பார்த்தபடி வீட்டுத் திண்ணையிலிருந்த மண்திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் இருபுறமும் பிள்ளைகளும் இருந்தார்கள். கூடவே பல நாட்கள் அடிப்பட்டு நெளிந்து போயிருந்த வடுவுடன், அவர்களின் துயர வாழ்க்கையின் அடையாளமாக  ஒரு பழைய அலுமினிய சோற்றுப் பானையும் இருந்தது. அன்றிரவு நேரம் கடந்து போயிருந்தும் மூவரும் சாப்பிட்டிருக்கவில்லை.  மிச்சமிகுதியிருந்த அரிசியும் பகலுடன் தீர்ந்து போயிருந்தபடியால்  இரவுணவு சமைக்கவென எதுவும் மீந்திருக்கவில்லை. பிள்ளைகள் அன்று வீட்டில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் உண்டான அத...

ஆதிமனிதனின் புணர்ச்சி

Image
ஆதியில் கற்கால மனிதர்கள் சிறு சிறு கூட்டமாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.  அக்கூட்டத்திலுள்ள ஒரு ஆண் விரும்பிய எந்த பெண்ணுடன் வேண்டுமென்றாலும் உறவுக் கொள்ளலாம். அதே போல  பெண்ணும் அக்கூட்டத்திலுள்ள எந்த ஆணுடனும் உறவுக் கொள்ளமுடியும். அதனால் எது தனக்கு பிறந்த பிள்ளையென்று ஒரு ஆணுக்கு சரியாக தெரியாது. அவன் எல்லா பிள்ளைகளையும் சமமாக பாவித்து உணவு, பாதுகாப்பு அளித்து பார்த்துக் கொண்டான்.  அச்சமூகத்தில் ஓர் ஆதிவாசி பெண் கருவுற்றிருக்கும் தருணத்தில் தான் தீவிரமாக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடனும் புணர்ச்சியில்  ஈடுபடுவாள். அதற்கு காரணம்  காமவேட்கையல்ல, பல ஆண்களின் கவனிப்பும் பாதுகாப்பும் தன் பிள்ளைக்கு கிடைக்கும் என்பதே. அக்காலத்தில்  பல ஆண்களின் விந்துக்கள் பெண்ணின் கருவறையில் உள்ள முட்டையுடன் சேரும் பொழுதுதான் குழந்தை உருவாகுவதாக நம்பினார்கள். அதனால் ஒரு சிறந்த வேட்டைக்காரன், புல்லாங்குழல் வாசிப்பவன், அறிவாளி, நற்குணங்களை உடையவன், பலசாலியேன தேர்ந்தெடுத்து உறவுக் கொள்வாள். தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு இந்த திறன்கள் எல்லாம் வந்துவிடும் என்...

வேளாண்மை புரட்சியும், வேட்டையாடி வாழ்கையும்

Image
 வேளாண்மை புரட்சிக்கு பிறகு  மனித இனம் பல்கி பெருகி சிறப்பாக வளர்ச்சியடைந்தது என்றாலும். வேளாண்மை புரட்சி என்பது உண்மையில் நமக்கு நாமே வைத்து கொண்ட ஒரு ஆப்புதான். காரணம் நாம் காட்டில் வேட்டையாடிகளாக வாழ்ந்த பொழுது அடுத்த நாளை பற்றிய கவலையில்லை. பல வகையான விலங்குகளை வேட்டையாடியும், காய் கனிகளை பறித்துண்டும் வாழ்ந்தோம். ஒரு வேலை அன்று எதுவும் கிடைக்காமல் பட்டினியாக இருந்தாலும் மறுநாள் எதோ ஒன்றை பெற முடிந்தது. வாழ்கை கடுமையா இருந்தாலும் சுகந்திரமாகவும் நிம்மதியாகவும்  உலாவ முடிந்தது.  மனிதன் வேட்டைச் சமூகத்திலிருந்து  விலகி வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு நிலத்தை உழுது பண்படுத்தி,  பயிரை விதைத்து, தினமும் அதற்கு நீர் பாய்ச்சி, களையகற்றி, பிறவிலங்குகளிடம் இருந்து பாதுகாத்து என அறுவடை காலம் மட்டும் இரவு பகல் பாராது மிக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  அத்துடன் முடியவில்லை. அறுவடைக்கு பிறகு தானிய களஞ்சியத்தை பிற  இனக்குழுக்களிடம் இருந்து பாதுகாக்க  கடும் பிரயத்தனபடவேண்டும்.  பலசாலியான ஒரு இனக்குழு திடீரென தாக்கும் போது ...

புது எழுத்தாளரும் புத்தம் புது எழுத்தாளரும்

குறுங்கதை   Autofiction  ஒரு புது எழுத்தாளரிடம் நான் எழுதிய சில கதைளை கொடுத்து  "இந்த பாணியில் ஒரு புத்தகம் எழுதினால் நல்லாயிருக்குமா? வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்கனு" கேட்டேன். பல நினைவூட்டலுக்கு பிறகு அவர் வாசித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். நானும் ஆவலுடன் போயிருந்தேன். பு.எழுத்தாளர்:  என்ன தோழர் மயிரு மாதிரி எழுதி வச்சிருக்கிங்க? இதெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுட்டு புதுசா எழுதுங்க என்பதை ரொம்ப நாசூக்கா நாகரிகமா சொன்னார். பிறகு " இன்னும் இந்த காதல் கேசத்தை விட்டால் வேற எதும் இல்லையா? எத்தனையோ பேர் இதை எழுதி, எழுதி கிழிச்சு தொங்க போட்டுட்டாங்க தோழர்?  எனக்கு தெரியும் உங்களுக்கு திறமை இருக்கு இதை அப்பிடியே உங்க தளவாணிக்கு கீழே வச்சிட்டு வேற  எதாச்சும் புதுசா ப்ரஷ் கன்டென்ட் தேடி எழுதுங்க, என்ன சொல்லுறது  புரியுதா?  நான்:  இல்லை...., சார் புதுசா எழுதினாலும் இப்படிதான் எழுதவரும். பு.எழுத்தாளர்:  தோழர் உங்களால முடியும், எனக்கு தெரியும் யோசிங்க, நல்லா யோசிங்க ஒன்னும் அவசரமில்லை  நான்:  ...

மோசமானவன் மனிதன்

Image
தப்பிப்பிழைத்தல் வரமா, சாபமா ? பரிணாமத்தில் ஒரு உயிரினத்தின் வெற்றி அதன் மரபஅலகின் எண்ணிக்கையை கொண்டு அளக்கபடுகிறது. அதாவது  அதிகப்படியான எண்ணிக்கையை  கொண்ட இனம் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஆனால் அந்த வெற்றி தனிப்பட்ட ரீதியாக ஒரு உயிரி அடைந்த துன்பத்தை பற்றி கணக்கில் கொள்ளாது.  டயனோசர்கள் இன்று பூமியிலிருந்து  முற்று முழுதாக அழித்து போய்விட்ட  ஓர் உயிரினம். அதன் உயிர்ப்பான மரபு அலகுகள் எதுவும் இப்பொழுது  மிச்சமில்லை. இயற்கையையுடன்  போராட திராணியற்று அழிந்து போய்விட்டது. ஆனால் வாழ்ந்த  வரைக்கும் சுகந்திரமாக காட்டில் சுற்றி திரிந்து தனக்கு பிடித்த இணையுடன்  சேர்ந்து வாழமுடிந்தது. அதே நேரம் இன்று பண்ணை விலங்காக உலகில் அதிகமா இருக்கும் மாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பாருங்கள். இன்றைய திகதியில் காட்டிலிருக்கும் எந்த ஒரு பாலுட்டியை விடவும் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகம். அதன் வாழ்வுதான் எத்தனை துன்பகரமாக மாறிவிட்டது.  ஆதியில் தன் இனத்துடன் சேர்ந்து பசுமையான காட்டில் சுற்றி திரிந்தது  போல அதனால் இப்பொழுது ...