Posts

நான்காவது நாள்

Image
சென் பாலன் எழுதிய  கார்த்திக் ஆல்டோ துப்பறியும் "நான்காவது நாள்" என்ற க்ரைம் த்ரில்லர் குறுநாவலை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சோர்வடைய செய்யாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஆர்மினியா, சோராஸ்டர், அஹூரா மஸ்டா போன்று பல புதிய தகவல்கள். தொய்வில்லாமல் கதையை நகர்த்துகிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஆல்டோவை அலைய விட்டிருக்கலாம், பெரிய இடையூறுகள் எதுவும் இல்லாமல் துப்பறியும் படலத்தை விரைவாக முடித்து விட்டார். ஒரு இடத்தை, பொருளை அல்லது நபரை, பார்த்த நொடியில் யார் அவர்? என்ன மனநிலையில் இருக்கிறார்? காலையில் எங்கு போனார்? என்ன சாப்பிட்டார்? என சில நொடிகளில் அனுமானித்து விடும் ஷேர்லக் ஹாம்ஸ் போல நம் கார்த்திக் ஆல்டோவும் செய்கிறார். இதை வாசித்த உடன் ஷேர்லக் கண்முன்னே வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தவறோ அல்லது குறையோ கிடையாது. இருப்பினும் நம் ஆளுக்கு எதாவது புதிதான திறன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது போல இதில் வரும் ஹாக்கர் கவின் அறிமுகம் ஆகும் தருணம், பல ஹாலிவுட் படங்களில் பார்த்து பார்த்து சலித்து போன காட்சியை கண்முன்னே வரச் செய்தது.  இவை ...

மஜ்னூன் குறுங்கதைகள் - மற்றும் ஒரு எதிர்வினை

Image
First thing first, நரேஷ் ஒரு Contemporary Writer. மஜ்னூனில்,  சிறுகதைகளின் இலக்கணங்களில் இருந்து மாறுபட்டு பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார். இப்படைப்பின் "முன்னுரையை" யாரும் Skip செய்யாதீர்கள். நரேஷ் அவர்கள், இது எப்படிப்பட்ட படைப்பு, நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்?  சிறுகதைகளுக்கும், குறுங்கதைகளுக்கும் இடையேயான  வேற்றுமை என்ன? என்பது போன்ற அனைத்து detailingகும் கொடுத்துள்ளார்.  ஹைக்கூ கவிதைகள் படித்திருப்பீர்கள், இதில் ஹைக்கூ கதைகள் உள்ளன. 4 பக்க கதைகள் முதல், 4 வரி கதைகள் வரை, பல கதைகள் உள்ளன. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. எழுத்து நடை அற்புதம்! பல கதைகள் 'அட' போட வைத்தன. இவரின் அடுத்த படைப்பை நிச்சயமாக எதிர்பார்பேன். இது ஒரு #amazonkindle  புத்தகம். கிண்டிலில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். படித்து பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்  மஜ்னூன் குறுங்கதைகள்   Yuvaraajhan Swarnarajan

Them (வெப்சீரிஸ்) 2021

Image
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான "Them" வெப் சீரிஸை பார்த்தேன். அற்புதம்!, நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல தொடரைப் பார்க்கக் கிடைத்தது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! நாம் கற்பனை செய்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையானது. இன்று வரைக்கும் அதை சார்ந்து பல திரைப்படங்கள், தொடர்கள், புத்தகங்கள் வெளிவந்தும், வந்த வண்ணமும் உள்ளது. அந்த வகையில் இந்த தொடர் மாறுப்பட்ட அனுபவத்தை தரும். அமானுஷயமும், நிஜ வரலாறும் கலந்து உருவாக்கி உள்ளார்கள். பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.

வைரஸ்களாகிய நாம்

Image
(கொரோனா வைரஸ்களின் கதை) நண்பர் Thandapani Thendral  தண்டபாணி தென்றல் எழுதிய "வைரஸ்களாகிய நாம்: கொரோனா வைரஸ்களின் கதை" என்னும் அறிவியல் புத்தகத்தை படித்தேன். இவ்வருட kindle pen to publish போட்டிக்கு எழுதியுள்ளார். புத்தகத்தை படிக்கும் போது வியந்து போனேன். சாதாரண ஒருவரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியாது. காரணம் ஒரு எழுத்தாளனாக இதற்கு பின்னால் உள்ள உழைப்பை என்னால் கற்பனை செய்துப் பார்க்க முடிகிறது. அறிவியல் தகவல்களை பிழையில்லாமல் கொடுக்க வேண்டும். இதற்கு உசாத்துணையாக இவர் வாசித்த புத்தகங்கள், கட்டுரைகள், இணையதளங்கள் பற்றிய விபரங்களை எல்லாம் நூலின் கடைசி பக்கத்தில் இணைத்துள்ளார். யாரும் எளிதில் சீண்ட மாட்டார்கள் என்று தெரிந்தும் அறிவியலை மையமாக வைத்து ஒரு வருட உழைப்பில் புத்தகத்தை கொண்டு வருவதற்கு மனதில் உத்வேகம் இல்லாமல் முடியவே முடியாது. இப் புத்தகம் ஒரு நாள் தனக்கான அங்கீகாரத்தை பெரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நுண்ணுயிரிகளை பற்றிய இவரது கற்கை தான் வைரஸ்களை பற்றி விரிவாகவும், அனைவருக்கும் புரியும்படி எளிமையாகவும் எழுதுவதற்கு உதவியாக இருந்துள்ளது. சு...

மஜ்னூன் - சுகந்தியின் வாசிப்பனுவம்

Image
புத்தகம் : மஜ்னூன் (மின்னூல்) ஆசிரியர்: நரேஷ் மாட்டு பொங்கலுக்கு மொத்தமா வடை பாயாசம் பழம் விதவிதமான காய்கறிகள் சோறு குழம்பு பூசணிக்காய்  எல்லாத்தையும் பிசைந்து உருண்டையாக குடுப்பாங்க. ஒரு வாய்க்கு ஒரு மாதிரியான ருசியில் இருக்கும் . அது மாதிரி இருக்கு  இந்த புத்தகம் . விரக்தி 'அமானுஷ்யம்' சுற்று சூழல்' நகைச்சுவை,கோபம் ,இயலாமை, அறிவியல், தத்துவம் ,காதல் ,காமம், பழி ,கொலை, ஏலியன், மறுபிறவி ,வறுமை. ஏமாற்றம், வன்கொடுமை என அத்தனையும் கலந்து‌ கட்டியிருக்கார். அதிலும் ஒன்று, இரண்டு,மூன்று  வரிகள், மூன்று வார்த்தைகளில் வரும் கதைகள் எல்லாம் செம! புதிய எழுத்தாளரும்‌ பழைய எழுத்தாளரும் உரையாடல் சரியான காமெடி!      பிரசர்‌ குக்கர் கதையில்  கார்ப்பரேட் கம்பெனிகளில் முழி பிதுங்குபவர்களின் நிலையை சொல்லியிருப்பது  மன அழுத்தத்தின்‌ வெளிப்பாடு "மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்டு, தன் பிம்பம் கரைவதைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தபடியே வெளிவருவார்கள்....

மஜ்னூன் குறுங்கதைகள் - வாசிப்பனுபவம் - சே.தண்டபாணி

Image
மஜ்னூன் குறுங்கதைகள்   (கிண்டில் பதிப்பு) பக்கங்கள்-117 நம் குழுவில் இருக்கிற வாசிப்பு புலிகளில் ஒருவர் நரேஷ். இந்நூலின் லிங்க்கை வில்லு பட வடிவேலு கிணற்றில் வாளியைத் தொங்கவிடும்போது எட்டிப் பார்ப்பது போலப் பதிவிட்டார். அப்போதுதான் இவரை எனக்கு முதன்முதலாகத் தெரியும். படிக்கலாம் என்று குறித்துக் கொண்டேன். ஆனாலும் நிறைய புத்தகங்கள் அடுத்தடுத்த கிடாய் வெட்டுக்குத் தயாராக துளுக்கு போட்டு வைத்திருந்ததால் இந்நூலை ஓரமாக கிண்டிலில் கட்டி வைத்தேன். பிறகு இப்போட்டிக்குள் உலகமே அழிந்தாலும் வாசித்துவிட வேண்டும் என்ற சங்கல்பத்துடன் நேற்று வானம் கடமுடவென்று அறற்றியபோதும் வாசித்து முடித்துவிட்டேன். பதிவு எழுதுவதற்குள் மின்னல் பளீரென்றதால் எங்கேபோன் புகைந்துவிடுமோ என்று ஆப் செய்துவிட்டேன். பொறுமை காத்த வாழும் புத்தர் நரேஷ்க்கு நன்றி. கவிதை,சிறுகதைகள்,கட்டுரைகள்,நாவல் இதைத்தாண்டிய குறுங்கதைகள்தான் இத்தொகுப்பு. சில வரிகளிலேயே கதை எழுத வாய்பிருக்கு ராஜா என நரேஷ் நிரூபித்துள்ளார்.  இதில் வரும் பேய் பற்றிய கதை சற்றே பஷீரையும் போகன் சங்கரையும் அங்கிட்டு போய் வெளாடுங்கப்பா என்று சொல்கிற...

மஜ்னூன் - இந்துவின் வாசிப்பனுவம்

Image
தலைப்பு: மஜ்னூன்   ஆசிரியர்: நரேஷ்  நம் குழுவின் நண்பர் நரேஷின் முதல் குறுங்கதை தொகுப்பு. ப்ரியதர்ஷினியின் அறிமுகத்தால் நானும் வாசித்தேன். சலிப்பில்லாத வாசிப்பிற்கு உத்தரவாதம் தரும் அற்புதமான கதைகள் உள்ளன. தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை என்றால் தயக்கம் என்கிற கதையை சொல்வேன். சம வயதுடைய பெண் மேலதிகாரியாக இருக்கும் போது அவளிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்கிற விஷயத்தை சுலபமாய் சொல்ல முடியாமல் மனதில் எழும் தயக்கத்தை அப்பட்டமாய் சொல்லி இருக்கும் விதம் அருமை. அங்கு  யாரும் புலப்பட வில்லை கதையில் யாரு பேயாக இருப்பார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. மஜனூன் என்கிற தலைப்பிற்குரிய கதையும் வெகு வித்யாசமான கதைக்களம் கொண்டது. நறுமுகை என்கிற கதையில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு காதலாக இருப்பதும் ஒரு ஆணின் எதிர்பார்ப்பு எவ்வளவு காதலாக இருப்பினும் காமமே அங்கு போட்டியில் ஜெயிக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டியதாக எனக்கு தோன்றுகிறது. காதல் கதைகள் ஒன்றை தவிர பெரும்பாலும் சோகத்தையே வெளிப்படுத்த்துவது எனக்குள் சிறு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏழு நிமிடங்கள் மற்றும் மிகைல் எ ஐ என்கிற க...