நான்காவது நாள்

சென் பாலன் எழுதிய 
கார்த்திக் ஆல்டோ துப்பறியும் "நான்காவது நாள்" என்ற க்ரைம் த்ரில்லர் குறுநாவலை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சோர்வடைய செய்யாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஆர்மினியா,
சோராஸ்டர், அஹூரா மஸ்டா
போன்று பல புதிய தகவல்கள்.
தொய்வில்லாமல் கதையை நகர்த்துகிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஆல்டோவை அலைய விட்டிருக்கலாம், பெரிய இடையூறுகள் எதுவும் இல்லாமல் துப்பறியும் படலத்தை விரைவாக முடித்து விட்டார்.

ஒரு இடத்தை, பொருளை அல்லது நபரை, பார்த்த நொடியில் யார் அவர்? என்ன மனநிலையில் இருக்கிறார்? காலையில் எங்கு போனார்? என்ன சாப்பிட்டார்? என சில நொடிகளில் அனுமானித்து விடும் ஷேர்லக் ஹாம்ஸ் போல நம் கார்த்திக் ஆல்டோவும் செய்கிறார். இதை வாசித்த உடன் ஷேர்லக் கண்முன்னே வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தவறோ அல்லது குறையோ கிடையாது. இருப்பினும் நம் ஆளுக்கு எதாவது புதிதான திறன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அது போல இதில் வரும் ஹாக்கர்
கவின் அறிமுகம் ஆகும் தருணம், பல ஹாலிவுட் படங்களில் பார்த்து பார்த்து சலித்து போன காட்சியை கண்முன்னே வரச் செய்தது. 

இவை தவிர்த்து வேறு குறைகள் இல்லை. எழுத்தாளர் நிறைய உழைத்து இருக்கிறார். இந்திய அரசியல், சோராஸ்டர் போன்ற உலக விஷயங்கள் என பலவற்றை கதையுடன் கலந்து சிறப்பாக எழுதியுள்ளார். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் படித்தால் சுவாரசியமாக இருக்கும்.

அமேசான் கிண்டிலில் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I