Posts

அரை பிச்சைக்காரன்

ஊருக்கு சென்று வேலையில்லாமல் தெருத்தெருவாக சுற்றி அலைவது போல ஒரு கனவுக் கண்டேன். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. ஊருக்கு சென்றால் நண்பர்களுடன் சேர்ந்து சோமபானம் அருந்தலாம். முகத்தை மறைக்காத  தேவதைகளை பார்க்கலாம். பிறகு கிரகஸ்தனாக மாறி லெளகிக வாழ்க்கையில் உழலலாம். இப்படி சில சந்தோசங்கள் இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் போதே அரை பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஊருக்கு சென்றதும் முழு பிச்சைக்காரனாக மாற வேண்டியிருப்பதை நினைத்து பார்த்தால் தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது. நண்பன் வேறு "மச்சா புத்தகம் எதும் எழுதும் ஆசை இருந்தா, அங்க இருக்கும் போதே எழுதி விடு. இங்கு வந்த பிறகு லோல் படுவதற்கே நேரம் சரியாக இருக்கும்" என்று பயமுறுத்துகிறான். உண்மை தான்  எந்நேரமும் அரிசி வாங்குவதை பற்றிய யோசனை மண்டையில் இருக்கும் போது இலக்கியம் எப்படி வரும். எழுத்தாளனாக வாழ்வது கூட ஆடம்பரம் தான்.

Joji / 2021 மலையாளம்

Image
 Spoiler Alert  நேற்று ஜோஜி பார்த்தேன். எல்லோரும் அதிகம் புகழ்ந்து எதிர்பார்ப்பை எகிற விட்டபடியால், நானும் "என்னால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை" என்று அடித்து விட விருப்பம் இல்லை. ஆனால் தரமான படம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. என் ஏமாற்றத்திற்கு காரணம்  "ஒரு சாமானியன் குடும்ப சமூக, புறக்கணிப்பு காரணமாக இரண்டு கொலைகள் செய்கிறான்" என்று கதையின் அடிநாதத்தையே சொல்லி ஸ்பாய்லர் செய்து விட்டார்கள். இது தெரியாமல் படம் பார்க்கும் ஒருவனுக்கு ஜோஜி அற்புத திரை அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. வளமை போலவே பகத் பாசில் தன் பங்கை நிறைவாக செய்து விட்டார். சேட்டன்கள் ஒரே வீட்டையே சுற்றி சுற்றி ஒளிப்பதிவு செய்து நிறைவான கதையை சொல்லி அசத்தி விட்டார்கள். தமிழ் சினிமா இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதே பழைய புராணத்தை பாட மாட்டேன். எல்லோரும் இப்படியே எடுக்க தொடங்கிவிட்டால் நிச்சயம் வெறுத்து விடும். ஆனால் இது போன்று சில படங்களும் வருடத்திற்கு மூன்று, நான்கு சரி வரவேண்டும். நம்மவர்கள் இதை விட சிறப்பாக செய்ய கூடியவர்கள் தான்.

மண்டேலா

Image
எல்லோரும் மண்டேலா படத்தை பார்த்துவிட்டு நெஞ்சுருகி பதிவிட்டிருந்தார்கள். நானும் பார்த்தேன். முதல் நாள் ஒரு மணிநேரம், பிறகு தூக்கம் வந்து விட்டது. மறுநாள் மிகுதியை பார்த்து முடித்தேன். நல்ல படம் தான் சூரை மொக்கை கிடையாது. ஆனால் பொறுமையை சோதிக்கிறது. அரசியல் நையாண்டி கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள், ஆனால் முழுதாக கைகூடவில்லை. கதாபாத்திரங்கள் எல்லாம் பேசிய வசனங்களையே மீண்டும் பேசிக்கொண்டும், செய்தவற்றையே மீண்டும் செய்து கொண்டும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மணித்தியாலமும் இருபது நிமிடமும் ஓடுகிறது. அதில் இருபது நிமிடத்தை வெட்டி அகற்றி இன்னும் கொஞ்சம் திரைக்கதையை சீர்படுத்தி இருக்கலாம். படத்தில் வரும் பெரிய ஐயா கதாபாத்திரம் குழப்பமாக இருக்கிறது. அவருடைய நிலைபாடு என்ன என்பது அவருக்கே தெரியவில்லை. பிறகு அவரின் குடும்பம்; அம்மாவும், மகனும், அப்பாவும் கிட்ட தட்ட சமவயது உடையவர்களாக தெரிகிறார்கள். ஜோக்கர் படம் மாதிரி வந்திருக்க வேண்டியது. பலவீனமான திரைக்கதை முழு படத்தையும் மளுங்கச் செய்துவிட்டது. படத்தில் இருக்கும் ஒரே ஆசுவாசம் யோகி பாபு தான். அழகாக நடித்து இருக்கிற...

நான்காவது நாள்

Image
சென் பாலன் எழுதிய  கார்த்திக் ஆல்டோ துப்பறியும் "நான்காவது நாள்" என்ற க்ரைம் த்ரில்லர் குறுநாவலை படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சோர்வடைய செய்யாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஆர்மினியா, சோராஸ்டர், அஹூரா மஸ்டா போன்று பல புதிய தகவல்கள். தொய்வில்லாமல் கதையை நகர்த்துகிறது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஆல்டோவை அலைய விட்டிருக்கலாம், பெரிய இடையூறுகள் எதுவும் இல்லாமல் துப்பறியும் படலத்தை விரைவாக முடித்து விட்டார். ஒரு இடத்தை, பொருளை அல்லது நபரை, பார்த்த நொடியில் யார் அவர்? என்ன மனநிலையில் இருக்கிறார்? காலையில் எங்கு போனார்? என்ன சாப்பிட்டார்? என சில நொடிகளில் அனுமானித்து விடும் ஷேர்லக் ஹாம்ஸ் போல நம் கார்த்திக் ஆல்டோவும் செய்கிறார். இதை வாசித்த உடன் ஷேர்லக் கண்முன்னே வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தவறோ அல்லது குறையோ கிடையாது. இருப்பினும் நம் ஆளுக்கு எதாவது புதிதான திறன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது போல இதில் வரும் ஹாக்கர் கவின் அறிமுகம் ஆகும் தருணம், பல ஹாலிவுட் படங்களில் பார்த்து பார்த்து சலித்து போன காட்சியை கண்முன்னே வரச் செய்தது.  இவை ...

மஜ்னூன் குறுங்கதைகள் - மற்றும் ஒரு எதிர்வினை

Image
First thing first, நரேஷ் ஒரு Contemporary Writer. மஜ்னூனில்,  சிறுகதைகளின் இலக்கணங்களில் இருந்து மாறுபட்டு பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார். இப்படைப்பின் "முன்னுரையை" யாரும் Skip செய்யாதீர்கள். நரேஷ் அவர்கள், இது எப்படிப்பட்ட படைப்பு, நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்?  சிறுகதைகளுக்கும், குறுங்கதைகளுக்கும் இடையேயான  வேற்றுமை என்ன? என்பது போன்ற அனைத்து detailingகும் கொடுத்துள்ளார்.  ஹைக்கூ கவிதைகள் படித்திருப்பீர்கள், இதில் ஹைக்கூ கதைகள் உள்ளன. 4 பக்க கதைகள் முதல், 4 வரி கதைகள் வரை, பல கதைகள் உள்ளன. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. எழுத்து நடை அற்புதம்! பல கதைகள் 'அட' போட வைத்தன. இவரின் அடுத்த படைப்பை நிச்சயமாக எதிர்பார்பேன். இது ஒரு #amazonkindle  புத்தகம். கிண்டிலில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். படித்து பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்  மஜ்னூன் குறுங்கதைகள்   Yuvaraajhan Swarnarajan

Them (வெப்சீரிஸ்) 2021

Image
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான "Them" வெப் சீரிஸை பார்த்தேன். அற்புதம்!, நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல தொடரைப் பார்க்கக் கிடைத்தது. அமெரிக்க வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! நாம் கற்பனை செய்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையானது. இன்று வரைக்கும் அதை சார்ந்து பல திரைப்படங்கள், தொடர்கள், புத்தகங்கள் வெளிவந்தும், வந்த வண்ணமும் உள்ளது. அந்த வகையில் இந்த தொடர் மாறுப்பட்ட அனுபவத்தை தரும். அமானுஷயமும், நிஜ வரலாறும் கலந்து உருவாக்கி உள்ளார்கள். பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.

வைரஸ்களாகிய நாம்

Image
(கொரோனா வைரஸ்களின் கதை) நண்பர் Thandapani Thendral  தண்டபாணி தென்றல் எழுதிய "வைரஸ்களாகிய நாம்: கொரோனா வைரஸ்களின் கதை" என்னும் அறிவியல் புத்தகத்தை படித்தேன். இவ்வருட kindle pen to publish போட்டிக்கு எழுதியுள்ளார். புத்தகத்தை படிக்கும் போது வியந்து போனேன். சாதாரண ஒருவரால் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியாது. காரணம் ஒரு எழுத்தாளனாக இதற்கு பின்னால் உள்ள உழைப்பை என்னால் கற்பனை செய்துப் பார்க்க முடிகிறது. அறிவியல் தகவல்களை பிழையில்லாமல் கொடுக்க வேண்டும். இதற்கு உசாத்துணையாக இவர் வாசித்த புத்தகங்கள், கட்டுரைகள், இணையதளங்கள் பற்றிய விபரங்களை எல்லாம் நூலின் கடைசி பக்கத்தில் இணைத்துள்ளார். யாரும் எளிதில் சீண்ட மாட்டார்கள் என்று தெரிந்தும் அறிவியலை மையமாக வைத்து ஒரு வருட உழைப்பில் புத்தகத்தை கொண்டு வருவதற்கு மனதில் உத்வேகம் இல்லாமல் முடியவே முடியாது. இப் புத்தகம் ஒரு நாள் தனக்கான அங்கீகாரத்தை பெரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நுண்ணுயிரிகளை பற்றிய இவரது கற்கை தான் வைரஸ்களை பற்றி விரிவாகவும், அனைவருக்கும் புரியும்படி எளிமையாகவும் எழுதுவதற்கு உதவியாக இருந்துள்ளது. சு...