Posts

ஓருடல்

நேற்று இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத்  தாக்கிக்கொண்டோம். சோர்ந்து, காயத்துடன் வெறுத்து ஒதுங்கிச் சென்றோம். அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். பிறகு மறந்து விட்டோம். நான் உன்னை இப்பொழுது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். 07-24-2021

பசி

அன்று முழு நாள் பட்டினி நீரை மண்டி விட்டு படுத்திருந்தோம். சாமத்தில் அப்பா வந்தார், கையிலிருந்த கால் கிலோ  மாவை அம்மாவிடம் நீட்டினார். அவள் விறகடுப்பில் புகைந்து கொண்டே ரொட்டிச் சுட்டாள். சம்பல் செய்யத் தேங்காயில்லை. வெங்காயம், புளி, மீந்து போயிருந்த இரண்டு காய்ந்த மிளகாய் வைத்து ஏதோ அம்மியில் மாயம் செய்தாள். அதற்கு பிறகு, நான் அது போன்ற ஒரு சுவையான உணவை எங்குமே சாப்பிட்டதில்லை. 23-07-2021

சபிக்கப்பட்டவன்

காதலை நான் போகிக்க நினைக்கும் போதெல்லாம் என்னை வன்புணர்ந்து தூக்கியெறிந்து விடுகிறது. சபிக்கப்பட்ட காதலின் தொடர்ச்சியாக...., உன் முன்னால் நான் உருக்குலைந்துக் கொண்டிருக்கிறேன். 22-07-2021

சார்பட்டா (2021)

Image
  Rocky Series முதல் Cinderella Man வரைக்கும் புகழ் பெற்ற அத்தனை குத்துச் சண்டை படங்களையும் பார்த்து விட்டேன். ட்ரைலர் பார்த்து ஏமாந்து போன சமீபத்திய இந்தி படமான Toofaan (2021) முதற்கொண்டு. பாக்ஸிங்கில் செண்டிமெண்டை சேர்ப்பதற்கு பதில், செண்டிமெண்டில் பாக்ஸிங்கை மூழ்கடித்து, ஏமாற்றி விட்டார்கள். பொதுவாக குத்துச் சண்டைப் படங்களுக்கு ஒரு பாணி உண்டு. நாயகன் எப்படிப்பட்ட பலசாலியையும் அடித்து வீழ்த்தி விடும் அளவுக்கு திறமையானவனாக இருப்பான். ஆனால் மாஸ்டர் அவனை உடனே சேர்த்துக் கொள்ளாமல் அலைய விடுவார். பின்பு அவன் திறமையைக் கண்டு நம்பிக்கை கொண்டு, சேர்த்துக் கொள்வார். கடுமையாகப் பயிற்சி அளிப்பார். முடிவில் எப்படியும் ஹீரோ வில்லனை வீழ்த்தி விடுவான் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் ஒரு தடங்கல் அல்லது பெரும் பிரச்சனை ஹீரோவுக்கு வரும். அதை தாண்டி வரவே முடியாது. அப்படியே நாமும் நம்புவோம். அந்த இடரை எப்படி ஹீரோ எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் உச்சக்கட்டம். இந்த இடத்தில் தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. இங்கு சறுக்கினால் மொத்த படமும்  'ச...

Van Diemen's Land (2009) நரகப்பயணம்

Image
(Van diemen's land இன்றைய Tasmania  Sarah Island இல் உள்ள ஓர் இடம்) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், 1822ஆம் ஆண்டில், Van diemen's land என்னும் ஒரு தீவில் உள்ள சிறையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். அலெக்சாண்டர் பியேர்ஸ் என்பவனும் அவனுடன் சேர்ந்து ஏழு குற்றவாளிகளும், அந்த கொடுமையான சிறைச்சாலையில் இருந்து தப்பிப் போகிறார்கள். டாஸ்மானியாவின் அடர்ந்த வனாந்திரத்தின் ஊடாக கிழக்கு பக்கம் உள்ள மனிதக் குடியிருப்புக்கு போய்ச் சேருவது தான் திட்டம். "Survaival is not an easy game to play" என்ற கூற்றிற்கு இணங்க  ஆரம்பத்திலிருந்த உற்சாகமும், தையிரியமும் பயணப்பட ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. அடை மழை, பனி, மேடு பள்ளம், மலை, கடுங்குளிர் என்று அந்த அடர்ந்த வனாந்திரம் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் துவங்குகிறது.  போகப்...., போகப்... முடிவே இல்லாமல் விரிந்துக் கொண்டு போகிறது. கைவசமிருந்த சொற்ப உணவும் தீர்ந்துப் போக பசி, மயக்கம், கலைப்பு எல்லாம் ஒன்றாச் சேர்ந்து வாட்டி வதைக்கிறது. கால்களை தூக்கி ஓரு அடி முன் வைக்க முடியாத அளவுக்கு சோர்ந்து துவண்டுப் போக...

மேதகு (2021)

Image
மேதகு படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவில் பணியாற்றிய ஒருவர் என் முகநூல் நண்பர் பட்டியலில் இருந்தார். கடந்த வருடம் இது தொடர்பான அறிவிப்பும், காட்சி படங்களும் அவர் பதிவில் வந்ததைக் கண்ட போது எதற்கு இவர்களுக்கு வேண்டாத வேலை, தலைவரின் வரலாற்றை படமாக எடுக்கிறேன் என்று சொல்லி எதாவது சொதப்பி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். படத்தின் இயக்குநர் (தி. கிட்டு) பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டது கூட கிடையாது. நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, என எல்லோருமே புதிய முகங்கள். கொஞ்சம் கூட நம்பவில்லை. ஆனால் இன்று என் கணிப்பை பொய்த்துப் போகச் செய்து விட்டார்கள். சில குறைகள் இருந்தாலும், படம் மிகவும் விறுவிறுப்பாகாவும், முடியும் மட்டும் அதனுடனே ஒன்றி இருக்கவும் வைத்திருந்தது. படத்தின் பலமே தலைவரின் இளவயது பாத்திரத்தில் நடித்த நடிகர் குட்டி மணி தான். திரையில் அவரை பார்க்கும் பொழுது அன்பும் மதிப்பும் பொங்கி வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு கொடுத்தப் பாத்திரத்தை செம்மை செய்து விட்டார். கதை வசனம், பின்னனி இசை, ஒளிப்பதிவு என எல்லாம் தரம். கலவரம், வன்முறை காட்சி...

கனவு திரை: சினிமா கட்டுரைகள் (kindle நூல்)

Image
கனவு திரை நான் கடந்த மூன்றரை வருடங்களாக இணையத்தில் எழுதிய சினிமா அறிமுகங்களிலிருந்து தேர்ந்தெடுத்த முப்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் இந்நூல்.  தமிழ் சினிமா, உலக சினிமா, வெப்சீரிஸ், ஆவணப்படம் என கலவையாக எழுதியுள்ளேன். எனது முதல் புத்தகம் வெளியாகி சரியாக மூன்று மாதம் கழித்து "கனவு திரை" வெளிவந்துள்ளது. இந்த சொற்ப காலத்தில் நூறு பக்கம் எழுதுவது எல்லாம் சாத்தியமே கிடையாது. ஒரு கட்டுரை எழுதி முடிக்க எனக்கு குறைந்தது ஒரு வாரம் சரி தேவைப்படும். அதிலும் சினிமா திரையனுபவத்தை எழுத முதலில் சில மணிநேரங்களை சிலவு செய்து அந்த படைப்பை பார்க்க வேண்டும். அதிலும் வெப்சீரிஸ் என்றால் பார்த்து முடிக்கவே மாதக் கணக்காகும். உதாரணமாக; ' பிரேக்கிங் பேட் ' சீரிஸை பற்றிய கட்டுரையை எழுத 5 சீசனையும் பார்த்திருக்க வேண்டும். அதில் மொத்தமாக 62 எபிசொட்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் அளவுக்கு ஓடக் கூடியது. ஆகவே கடந்த மூன்று மாதங்களும் நூலை செப்பனிடுவதற்கே போதுமானதாக இருந்தது. அல்புனைவாக இருந்தாலும் புனைவிற்கு உரிய சுவாரஸ்யத்தில் கனவு திரையை எழுதியுள்ளேன். அதனால் வெறும் சினிமா...