மேதகு (2021)

மேதகு படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவில் பணியாற்றிய ஒருவர் என் முகநூல் நண்பர் பட்டியலில் இருந்தார். கடந்த வருடம் இது தொடர்பான அறிவிப்பும், காட்சி படங்களும் அவர் பதிவில் வந்ததைக் கண்ட போது எதற்கு இவர்களுக்கு வேண்டாத வேலை, தலைவரின் வரலாற்றை படமாக எடுக்கிறேன் என்று சொல்லி எதாவது சொதப்பி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
படத்தின் இயக்குநர் (தி. கிட்டு)
பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டது கூட கிடையாது. நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, என எல்லோருமே புதிய முகங்கள். கொஞ்சம் கூட நம்பவில்லை.
ஆனால் இன்று என் கணிப்பை பொய்த்துப் போகச் செய்து விட்டார்கள். சில குறைகள் இருந்தாலும், படம் மிகவும் விறுவிறுப்பாகாவும், முடியும் மட்டும் அதனுடனே ஒன்றி இருக்கவும் வைத்திருந்தது.

படத்தின் பலமே தலைவரின்
இளவயது பாத்திரத்தில் நடித்த நடிகர் குட்டி மணி தான். திரையில் அவரை பார்க்கும் பொழுது அன்பும் மதிப்பும் பொங்கி வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு கொடுத்தப் பாத்திரத்தை செம்மை செய்து விட்டார். கதை வசனம், பின்னனி இசை, ஒளிப்பதிவு என எல்லாம் தரம்.
கலவரம், வன்முறை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம்
செலுத்தி இருக்கலாம்.

படத்திற்கு கிடைத்த சொற்ப வளத்தை கொண்டு மிகவும் சிறப்பாக செய்து விட்டீர்கள். இருப்பினும் எனக்கு குறையாகப்பட்ட சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். படத்தின் இரண்டாம் பாகம் வரும் பொழுது இந்த குறைகளை கலைந்து விட்டால் இன்னும் சிறப்பான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தரலாம். படத்தில் சிங்கள மொழி பேசுவது மோசமாக உள்ளது. மிகவும் பிழையாக பேசுகிறார்கள்.
சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற தமிழர்கள் பலர் உள்ளார்கள், அவர்களின் உதவியுடன் இனி இது போன்ற காட்சிகளை அமையுங்கள். இலங்கை தமிழனாக இந்த காட்சியில் உள்ள போதாமையை தெளிவாக உணரமுடிகிறது.

அது போல யாழ்ப்பாணத்து தமிழ் படத்தின் நாயகன், மற்றும் அவரின் அப்பா பாத்திரம் பேசுவது சிறப்பாக உள்ளது. ஒரு சில இடங்களில் வரும் மற்றைய கதாபாத்திரங்கள் பேசுவது பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக; இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும் என்று மேதகு அவர்களின் அப்பாவிடம் நண்பர்கள் பேசிக்கொள்ளும் காட்சி.

மேற்கொண்டு குறைச் சொல்ல மாட்டேன். உங்களுக்கு கிடைத்த
சொற்ப பணத்தில் இந்த அளவுக்கு செய்திருப்பதே பாராட்டுக்கு உரியது. புகழ், பணம் எல்லாவற்றையும் தாண்டி இது போன்ற ஒரு படத்தை எடுப்பதற்கு நிஜமாகவே தமிழ் உணர்வும் மேதகு மேல் உள்ள மரியாதையும் தான் காரணமா இருக்க முடியும். இந்த படத்தை எடுத்து வெளியிடும் போதும், பின்னரும் எழும் சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பது எல்லாம் அத்தனை இலகு கிடையாது. அதற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்து பாகம் வரும் பொழுது
அதிகமாக ஈழ யுத்த இலக்கியங்களை எல்லாம் தேடிப் படித்து இன்னும் அதிகமாக களஆய்வு செய்து, சிறப்பான ஒரு படைப்பை எங்களுக்கு தாருங்கள்.
90% தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. படக் குழுவினருக்கு என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேதகு படத்தை வெளியிட்ட 
BS Value Ott தளத்திற்கும் என் நன்றி.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I