கனவு திரை: சினிமா கட்டுரைகள் (kindle நூல்)

நான் கடந்த மூன்றரை வருடங்களாக இணையத்தில் எழுதிய சினிமா அறிமுகங்களிலிருந்து தேர்ந்தெடுத்த முப்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் இந்நூல். 
தமிழ் சினிமா, உலக சினிமா,
வெப்சீரிஸ், ஆவணப்படம் என கலவையாக எழுதியுள்ளேன்.

எனது முதல் புத்தகம் வெளியாகி சரியாக மூன்று மாதம் கழித்து
"கனவு திரை" வெளிவந்துள்ளது. இந்த சொற்ப காலத்தில் நூறு பக்கம் எழுதுவது எல்லாம் சாத்தியமே கிடையாது. ஒரு கட்டுரை எழுதி முடிக்க எனக்கு குறைந்தது ஒரு வாரம் சரி தேவைப்படும். அதிலும் சினிமா திரையனுபவத்தை எழுத முதலில் சில மணிநேரங்களை
சிலவு செய்து அந்த படைப்பை பார்க்க வேண்டும். அதிலும் வெப்சீரிஸ் என்றால் பார்த்து முடிக்கவே மாதக் கணக்காகும்.
உதாரணமாக; 'பிரேக்கிங் பேட்' சீரிஸை பற்றிய கட்டுரையை எழுத 5 சீசனையும் பார்த்திருக்க வேண்டும். அதில் மொத்தமாக 62 எபிசொட்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் அளவுக்கு ஓடக் கூடியது.
ஆகவே கடந்த மூன்று மாதங்களும் நூலை செப்பனிடுவதற்கே போதுமானதாக இருந்தது.
அல்புனைவாக இருந்தாலும் புனைவிற்கு உரிய சுவாரஸ்யத்தில் கனவு திரையை எழுதியுள்ளேன். அதனால் வெறும் சினிமா புத்தகமாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி சிறந்த வாசிப்பனுவத்தை கொடுக்கும். அதே போல சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், இந்நூல் உங்கள் படைப்புத் திறனை மேம்படுத்தும்.

அமேசான் கிண்டிலில் கிடைக்கும்,
மிக குறைந்த விலையை தான் நிர்ணயித்துள்ளேன். Kindle Unlimited லும் இலவசமா படிக்க முடியும். " மஜ்னூன் குறுங்கதை புத்தகத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு மிக்க நன்றி!
"கனவு திரையும்" நிச்சயம் ஏமாற்றது, வாசித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே!

புத்தகத்தை வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கை தொடரவும்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I