கரமாஸவ் சகோதர்கள்

ஆசிரியர்: தஸ்தயேவ்ஸ்க்கி

தமிழ் மொழியாக்கம்
அரும்பு சுப்பிரமணியன் 

No Spoilers 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உலக பிரசித்தி பெற்ற கிளாசிக் நாவலான "கரமாஸவ் சகோதர்கள்"  , 1879 - 1880 வரையில் The Russian Messenger என்ற ரஷ்ய வாரப்பத்திரிகையில் தொடராக வெளிவந்து கடைசியில் புத்தகமாக பதிப்பிக்கபட்டது. இதை எழுதி முடிக்க இரண்டு வருட காலத்தை எடுத்துக்கொண்டுள்ளார். 
"கரமாஸவ் சகோதர்கள்"  நூலாக வெளிவந்து நான்கு மாதங்களின் 
பின்னர் தஸ்தயேவ்ஸ்க்கி 
நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். 
அவரின் கடைசி நாவலும் இதுவே.

கதைச்சுருக்கம்
சிறுவயதில் தாயை இழக்கும் 
நான்கு சகோதர்கள்,
(ஸ்மெர்தியாக்கவ்வையும் சேர்த்து)     பொறுப்பற்ற குடிகார, கேளிக்கைகளில் நாட்டமுள்ள 
பெண் பித்தரான தந்தையின் எவ்வித கவனிப்பும், பரிவும், வழிநடத்தலும் இன்றி கைவிடபடுகிறார்கள்.
பின்னர் அவர்களில் மூவர் 
தாய்வழி உறவினர்களால் வளர்க்கபடுகிறார்கள். 
முறைசாரா உறவின் மூலம் 
பிறந்த ஒருவன் மட்டும் (ஸ்மெர்தியாக்கவ்)
தந்தையுடன் வீட்டு வேலைக்காரனாக வளர்கின்றான். 
வருடங்கள் உருண்டோடுகிறது.
மற்றைய மூவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.
அதற்கு பின்னர் தந்தைக்கும் தனையன்களுக்கும்,
சகோதரர்களுக்கு இடையேயும் 
நிகழும் பூசல்களே கதை. 
நான்கு சகோதரர்களும் உலகின்  வெவ்வேறான மனிதமனங்களின் வெளிப்பாடுகளாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். 
அவர்களின் மூலம் தஸ்தயேவ்ஸ்க்கி
நம்முடன் உரையாடுகிறார்.

தமிழ் பதிப்பில் 1682 பக்கங்கள் (ebook ) கொண்ட பெரிய நாவலாகும்.
மொழிபெயர்ப்பாளர் 
அரும்பு சுப்பிரமணியன் ரஷ்ய மூலத்திலிருந்து நேரடியாக தமிழில்  மொழிபெயர்த்து உள்ளமை சிறப்பு அம்சமாகும். பைபிளில் காட்டப்படும் மேற்கோள்களையும், இதர தரவுகளையும். முறையாக புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இணைந்து உள்ளமை வாசகர்களுக்கு சிறப்பான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

இது நல்ல மொழிபெயர்ப்புதான்.
இருந்தாலும் சில இடங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு 
நேரடி அர்த்தம் கற்பித்தால் நமக்கு 
கதை மாந்தர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது கடினமாகும். 
எல்லோரும் மிகை உணர்ச்சியுடன் 
கூடிய நாடக தன்மையில்தான்
உரையாடி கொள்வார்கள். 
இந்த இடத்தில் 140 வருடங்களுக்கு 
முன்பு எழுதப்பட்ட வேறு ஒரு நிலத்தில் வாழும் மக்களை 
பற்றிய கதை என்பதை நாம் 
மறந்து விடக்கூடாது.

"கரமாஸாவ் சகோதர்கள்"
தத்துவவியல் நூலாகும் கடவுள் நம்பிக்கை, திருச்சபைகளின் செயல்பாடுகள் குறித்த விமர்சனம், மனித மனதில் நிகழும் 
அறப்போராட்டம் என கதை நகரும். 
கிறிஸ்த்துவ மதத்திலும், ரஷ்யாவின் இறையாண்மையிலும் நிகழ வேண்டி மாற்றங்களை. தான் உருவாக்கிய கதை மாந்தர்களின் மூலம் தஸ்தயேவ்ஸ்க்கி வெளிப்படுத்தியுள்ளார்.

இன் நாவல் 19ம் நூற்றாண்டின் 
ரஷ்யாவை களமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் பிரதான பாத்திரங்கள் சில தஸ்தயேவ்ஸ்க்கி நிஜத்தில் சந்தித்த மனிதர்களின் புனைவுருக்கள் தான்.
நாயகர்களில் ஒருவனான "அல்யோஷா" மூன்று வயதில் இறந்துவிட்ட அவரின் மகனின் குணாம்சம் கொண்டு வடிவமைக்கபட்டவன்.  (தஸ்தயேவ்ஸ்க்கியின் இறந்து மகனின் பெயரும் 'அல்யோஷா')
 
இன் நாவலில் வரும் குடிகாரன் கூட தத்துவார்த்தமாக 4, 5 பக்கங்களுக்கு  பேசுவான். ஆழ்ந்து உள்வாங்கினால் 
ஆயிரம் அர்த்தங்கள் புலப்படும்.
உதாரணத்திற்கு எளிமையான 
ஒர்  பகுதியை மட்டும் கீழே குறிப்பிடுகிறேன்.

" இந்த மண்ணுலகில் வாழ்வதற்கு மடத்தனம் மிகவும் தேவை. இவ்வுலகம் மடத்தனத்தால் தான் நிறைந்திக்கிறது.
அது இல்லாவிட்டால் இங்கு எதுவுமே நடக்காது. இது நமக்குத் தெரியும், நமக்கு நன்றாகவே தெரியும்! " 

புத்தகம் முழுவதும் இப்படிதான் இருக்கும். ஒவ்வொரு பக்கத்தையும் மிகுந்த சிரந்தையுடன் உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

ஒர் அமர்வில் 30 பக்கங்கள்படி  
ஒரு நாளைக்கு சராசரியாக 
50 - 60 பக்கங்கள் மட்டும்தான் என்னால் வாசிக்க முடிந்தது. சில இடங்களில் ஓர் அத்தியாயம் 
(20 - 30 பக்கங்கள்) 
முழுவதும் இரு கதாபாத்திரங்கள் 
மட்டுமே தத்துவார்த்தமாக உரையாடியப்படியிருக்கும்.  
இந்த புத்தகத்தை எண்ணிகையில் 
சேர்ந்து கொள்ளும் நோக்கத்தில் படிக்காமல், உண்மையாக உள்ளவாங்கி வாசிக்க வேண்டுமென்றால் மெதுவாக பயணிப்பதே சரியாகயிருக்கும் என்பது என்கணிப்பு. 

தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் பெயர்கள் உங்களை குழப்பமடைய செய்யலாம். பொதுவாக பெரிய நாவல்கள் படிக்கும் போது ஆரம்பத்தில் இவ்வாறு நிகழ்வது இயல்பானதுதான். சில நூறு பக்கங்கள் தாண்டும் போது பழகிவிடும். இக்குழப்பத்திற்கு 
ரஷ்ய நாவல்களில் வரும் நீண்ட பெயர்கள் தான் காரணம். உதாரணமாக கீழ் வரும் பெயரை கவனியுங்கள் 

" ஃபியோதர் பாவ்லவிச் கரமஸாவ் "

இதில் முதலாவதாக வருவது குறிப்பிட்ட நபரின் பெயர், இரண்டாவது அவரின் தந்தையின் முதல் பெயர், கடைசி குடும்ப பெயர்.

வாசிப்பும் கலைதான். 
அதை முழுமையாக உணர்ந்து 
அனுபவிக்க  சில நேரம் நம் உழைப்பும் தேவை. பிரதான கதாபாத்திரங்கள் தொடர்பான குறிப்புகளை எடுத்து 
வைத்த கொள்ளுங்கள். 
குறைந்தது 500 பக்கத்திற்கு 
இதன் உதவி தேவைபடக்கூடும்.  

இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரும் வாழ்நாளில் கட்டாயம் வாசித்தே தீரவேண்டிய மகத்தான படைப்பு. 

நரேஷ் 
26-04-2020

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I