அருணா இன் வியன்னா

எழுத்தாளர் அருணா ராஜ் எழுதிய "அருணா இன் வியன்னா" என்ற
பயண நூலை கிண்டிலில் படித்தேன்.
வாவ்! போட வைத்து விட்டார்.
பின்னர்..., அமேசான் கிண்டிலில் 200 தாண்டி ரேட்டிங், ரிவியூ வாங்குவது என்றால் சும்மாவா?, நீண்ட நாளைக்கு பிறகு ரசித்து ருசித்து வாசித்த புத்தகம்.

புத்தகத்தை படிக்கத் தொடங்கி சில அத்தியாயங்கள் தாண்டும் போது இந்த புத்தகத்தில் அப்பிடி என்ன பிரமாதமாக இருக்கிறது? இப்படி கொண்டாடி  வைத்திருக்கிறார்கள். என்று நினைத்து கொண்டே வாசித்தேன். சற்று நேரம் கழித்து பார்த்த போதுதான் பாதி பக்கங்களை கடந்து இருந்ததை கவனித்தேன். இதுதான் இந்த புத்தகத்தின் பலம். நான் சமீபத்தில் இவ்வளவு வேகமா வேறு எந்த புத்தகத்தையும் படித்து முடித்தது கிடையாது. எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத சுவாரசியமான மொழிநடை. அருணா நகைச்சுவை உணர்வு மிக்கவர் பக்கத்திற்கு பக்கம் வெடித்து சிரிக்க வேறு வைக்கிறார்.

உங்களுடன் சேர்ந்து நானும் ஐரோப்பாவில் சுற்றிய உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
ஏ.கே செட்டியாருக்கு பிறகு நான் ரசித்து வாசித்த பயண நூல் இதுதான். இனி என் சிறந்த பயண நூல் பட்டியலில் இதற்கும் எப்பொழுதும் தனி இடம் உண்டு. கொரோனா அடங்கிய பிறகு நீங்கள் உங்கள் தோழிகளுடன் சேர்ந்து நிறைய பயணங்களை செய்து இது போன்ற சுவையான நூல்களை
சமைத்து தரவேண்டும். 
***
அமேசான் கிண்டிலில் படிக்க கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I