Posts

கனவு திரை (வாசிப்பனுபவம்)

Image
எழுத்தாளர் நரேஷ்  அவர்கள் கடந்த  நான்கு வருடங்களாக எழுதிய சினிமா விமர்சனத்தில் சிறந்த  30 படங்களின் புனைவு கட்டுரை தொகுப்பு தான் " கனவு திரை ". தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொரியன், இன்னும் சில வேற்று மொழிப்படங்கள், வெப்சீரிஸ், மற்றும் ஆவணப்படங்கள் என எல்லாம்  சேர்ந்த கதம்பம் தான்  "கனவு திரை" எனக்கு பிடித்த படங்கள் என்று  யோசித்தால் இப்போதைக்கு நினைவில் வருவது, அவள் ஒரு தொடர்கதை,  பூவே பூச்சுடவா, கடலோர கவிதைகள், அழகன், 7ஜி ரெயின்போ காலனி திருடா திருடா  போன்ற படங்கள். இவற்றை பல முறை பார்த்த அனுபவம் உண்டு. இனியும் டிவியில் போட்டால் பார்ப்பேன். ஆனால் படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பதை தவிர எனக்கு சினிமா பற்றிய ஆர்வம் பெரிய அளவில் இல்லை. தமிழ் சினிமா தவிர வேற்று மொழிப்படங்கள் எதையும் அதிகம் பார்த்த அனுபவம் இல்லை. அதிலும்  உலக சினிமா பற்றிய அறிவு எள்ளளவும் கிடையாது.  சினிமா பற்றிய விமர்சனம் என்று பார்த்தால் சன் டிவி சினிமா விமர்சனம், விகடன் விமர்சனம், அதையும் தாண்டி முகநூலில் கண்ணில்படும் விமர்சனம் இவை தான் எனக்கு தெரிந்தது. இ...

நவரசா (2021)

Image
ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் படி நவரசா எந்தோலோஜியை இன்று தான் பார்த்து முடித்தேன். எல்லோரும் வறுத்து எடுத்து விட்டார்கள். அதனால் நான் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இந்த தொடரில் வசந்தின் "பாயாசம்" அற்புதம்!, யோகி பாபு நடித்த "Summer of 92"அபத்தத்தின் உச்சம்!, உருவக்கேலி நிரம்பிய, மூன்றாம் தர நகைச்சுவைக் காட்சிகள் குவிந்த நரகம். பீ, குசு, மூத்திரம் போன்றவற்றை திரையில் காட்டினால் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பைத்தியக்காரக் கதையும், இயக்கமும். இந்த படத்தில் என்ன மயிரை இயக்குநர் சொல்லவருகிறார் என்று புரியவில்லை. ஒரு முதிர்கன்னியின் துயரத்தை கடைசியில் தன் "பீ" நகைச்சுவை மூலம் அசிங்கப்படுத்தி இருப்பார். நக்சலைட், ஈழம் கதையில் வருவது போல போராளிகள் பஞ்சு டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள். "ரௌத்திரம்" கதையில் விதவை தாய் சூழ்நிலைக் காரணமாக தன் சுயவிரும்பம் இல்லாமல் உடலுறவு கொள்கிறாள், அதனால் மகளினால் சாகும் மட்டும் வெறுக்கப்படுவதெல்லாம் சுத்த அபத்தம். சாகும் வரைக்கும் அவள் அப்படியே தியாகச் செம்மலாக இருந்து சாகவேண்ட...

Kuruthi (2021)

Image
Kuruthi (2021) (மலையாளம்) நமக்கு மதப்பற்று, இனப்பற்று இருக்கலாம். அது இயல்பானது தான், அதுவே ஓவர் டோஸாகி வெறியாக மாறிவிடக்கூடாது. பின்பு நீங்கள் எதனை காப்பாற்றுவதற்கு புறப்பட்டிர்களோ அதற்கு இழுக்கை  தேடி வைத்து விடுவீர்கள். நீங்கள் சும்மா இருந்திருந்தாலே அது இவ்வளவு காலம் இருந்தது போல தன் பாதையில் அமைதியாக பயணித்து கொண்டிருக்கும். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உங்களை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைகள் எல்லாம் சோடிக்கப்பட்ட கற்பனை கதைகள். மனித இனமே இந்த கதைகளை சுற்றித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பயணத்திற்கு இது போன்ற கதைகள் தேவைப்பட்டன. மனித குலத்தின் நிலைத்திருத்தலுக்கு அவனின் இந்த கற்பனைத் திறனே காரணம். பணத்தை பாருங்கள் அது வெறும் காகிதம் தான் அதற்கு ஆயிரம், நூறு, பத்து என்று பெறுமதி இருப்பதாக அரசாங்கம் சொல்வதால் நம்புகிறோம். அதே அரசாங்கம் நாளைக்கே இது பெறுமதி இழக்கிறது என்றால் அது மீண்டும் வெறும் காகிதம் ஆகிவிடும். ஒரு கதையை நம்பும் வரைக்கும் மட்டும் தான் அதன் மேல் புனையப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம் உயிர்த்திருக்கும்  மனிதனின் இ...

ஓவியன்

வான்கோ தன் காதலிக்கு காதை அறுத்து கொடுக்கவில்லையாம், நிர்கதியான நிலையை அறிந்திருந்தும் கடனைத் திருப்பிக் கேட்ட விலைமாதுக்கு தான்  அறுத்துக் கொடுத்தாராம். அவர் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம், யாரோ ஒரு சிறுவனை காப்பாற்றத்தான் அப்படிப் பொய் சொன்னாறாம். அவர் சித்தம் கலங்கியவர் கிடையாதாம், மனிதர்களை  கண்டுப்பயந்து தான் ஒதுங்கி நின்றாராம். நேற்றுக் கனவில் வந்தவர், இப்படி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். “ஓவியம் உலகை அடக்கும்  உலகம் ஓவியத்தை அடக்கும்  ஓவியன் தன்னை அடக்கி  உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்." என்ற ஆத்மாநாம் கவிதையை படித்துக் காட்டினேன். சிறு புன்னகை செய்தார். பின்பு சுவற்றில் ஒடுக்கியிருந்த நீலவானில் மாயமானார். 08-03-2021

சிறு சிறு தருணம்

மழை நாளில், சன்னலில் உடலை குறுக்கியப்படி தூறலை ரசிக்கும் பூனைக் குட்டி. யாமத்தில் தழுவிக் கிடக்கும் வெற்றுடல்கள். நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளன். முதல் குழந்தையை ஸ்பரிக்கும் ஆண். சிறுத் தொட்டியை கடலாக்கிய தங்க மீன். முலையின் மென்மை, குறியின் அழுத்தம், கண்டுணர்ந்த அவனும் அவளும். பிடித்த கதையின் கடைசி வரி, முற்று. முதல் காதல், உதட்டு முத்தம் அவள் வாசனை. மழலையின் இமைக்கா நொடிப் பார்வை, பின் தொடரும் குறுஞ்சிரிப்பு. ராஜாவின் இசை, உன் நினைவு, சிறு புன்னகை, வடியும் கண்ணீர் துளி. குறையொன்றும் இல்லை, நான் வாழ்ந்து விட்டேன். 08-01-2021

வடு

ஓர் இன்ப கவிதை புனைய வேண்டும். பொருத்தமான சொற்களை தேடிக்கொண்டிருந்தேன். உன் நினைவு அடுக்குகளால் நிரப்பப்பட்டிருக்கும்  அகப்பெருவெளியில் நான் எங்கனம் அவற்றை கண்டடைவேன். 07-28-2021

சுவடு

நித்தமும் உன் நினைவுகளை கடந்து தான் அவளுடன் காதலுறுகிறேன். போகத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமயத்தில்  உன் பெயரைச் சொல்லி அவளை  விளித்திடுவேனோவென்று அஞ்சுகிறேன்!  நீ இடித்து நிர்மூலமாக்கிய குடிசையை அவள் கட்டிக்கொண்டிருக்கிறாள்.  விரைவில் அங்கு குடியேறிவிடுவோம். பிறகு உன் முகவரியை நான் நிரந்தரமாகத் தொலைத்து விடக்கூடும். 07-28-2021

மறந்து விட்டோம்

 அம்மு! கிறுக்கி!  செல்லக்குட்டி! பைத்தியக்காரி!  பொண்டாட்டி! விசரி! தங்கம்! கன்னு குட்டி! இப்பொழுது எல்லாம் உன் பெயரே நினைவில் வருவதில்லை. 26-07-2021

வாழ்

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்து விட்டார்கள். பிரான்சில் கொரோனாவின் டெல்டா திரிபு மீண்டும் பரவத்தொடங்கி விட்டதாம். இவைகளை பற்றிய எந்த பிரக்ஜையும் இல்லாமல் முலைபால் அருந்திக் கொண்டிருக்கிறது மழலை. 25-07-2021

ஓருடல்

நேற்று இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத்  தாக்கிக்கொண்டோம். சோர்ந்து, காயத்துடன் வெறுத்து ஒதுங்கிச் சென்றோம். அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். பிறகு மறந்து விட்டோம். நான் உன்னை இப்பொழுது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். 07-24-2021

பசி

அன்று முழு நாள் பட்டினி நீரை மண்டி விட்டு படுத்திருந்தோம். சாமத்தில் அப்பா வந்தார், கையிலிருந்த கால் கிலோ  மாவை அம்மாவிடம் நீட்டினார். அவள் விறகடுப்பில் புகைந்து கொண்டே ரொட்டிச் சுட்டாள். சம்பல் செய்யத் தேங்காயில்லை. வெங்காயம், புளி, மீந்து போயிருந்த இரண்டு காய்ந்த மிளகாய் வைத்து ஏதோ அம்மியில் மாயம் செய்தாள். அதற்கு பிறகு, நான் அது போன்ற ஒரு சுவையான உணவை எங்குமே சாப்பிட்டதில்லை. 23-07-2021

சபிக்கப்பட்டவன்

காதலை நான் போகிக்க நினைக்கும் போதெல்லாம் என்னை வன்புணர்ந்து தூக்கியெறிந்து விடுகிறது. சபிக்கப்பட்ட காதலின் தொடர்ச்சியாக...., உன் முன்னால் நான் உருக்குலைந்துக் கொண்டிருக்கிறேன். 22-07-2021

சார்பட்டா (2021)

Image
  Rocky Series முதல் Cinderella Man வரைக்கும் புகழ் பெற்ற அத்தனை குத்துச் சண்டை படங்களையும் பார்த்து விட்டேன். ட்ரைலர் பார்த்து ஏமாந்து போன சமீபத்திய இந்தி படமான Toofaan (2021) முதற்கொண்டு. பாக்ஸிங்கில் செண்டிமெண்டை சேர்ப்பதற்கு பதில், செண்டிமெண்டில் பாக்ஸிங்கை மூழ்கடித்து, ஏமாற்றி விட்டார்கள். பொதுவாக குத்துச் சண்டைப் படங்களுக்கு ஒரு பாணி உண்டு. நாயகன் எப்படிப்பட்ட பலசாலியையும் அடித்து வீழ்த்தி விடும் அளவுக்கு திறமையானவனாக இருப்பான். ஆனால் மாஸ்டர் அவனை உடனே சேர்த்துக் கொள்ளாமல் அலைய விடுவார். பின்பு அவன் திறமையைக் கண்டு நம்பிக்கை கொண்டு, சேர்த்துக் கொள்வார். கடுமையாகப் பயிற்சி அளிப்பார். முடிவில் எப்படியும் ஹீரோ வில்லனை வீழ்த்தி விடுவான் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் ஒரு தடங்கல் அல்லது பெரும் பிரச்சனை ஹீரோவுக்கு வரும். அதை தாண்டி வரவே முடியாது. அப்படியே நாமும் நம்புவோம். அந்த இடரை எப்படி ஹீரோ எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பது தான் படத்தின் உச்சக்கட்டம். இந்த இடத்தில் தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. இங்கு சறுக்கினால் மொத்த படமும்  'ச...

Van Diemen's Land (2009) நரகப்பயணம்

Image
(Van diemen's land இன்றைய Tasmania  Sarah Island இல் உள்ள ஓர் இடம்) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், 1822ஆம் ஆண்டில், Van diemen's land என்னும் ஒரு தீவில் உள்ள சிறையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம். அலெக்சாண்டர் பியேர்ஸ் என்பவனும் அவனுடன் சேர்ந்து ஏழு குற்றவாளிகளும், அந்த கொடுமையான சிறைச்சாலையில் இருந்து தப்பிப் போகிறார்கள். டாஸ்மானியாவின் அடர்ந்த வனாந்திரத்தின் ஊடாக கிழக்கு பக்கம் உள்ள மனிதக் குடியிருப்புக்கு போய்ச் சேருவது தான் திட்டம். "Survaival is not an easy game to play" என்ற கூற்றிற்கு இணங்க  ஆரம்பத்திலிருந்த உற்சாகமும், தையிரியமும் பயணப்பட ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. அடை மழை, பனி, மேடு பள்ளம், மலை, கடுங்குளிர் என்று அந்த அடர்ந்த வனாந்திரம் தன்னுடைய சுயரூபத்தை காட்டத் துவங்குகிறது.  போகப்...., போகப்... முடிவே இல்லாமல் விரிந்துக் கொண்டு போகிறது. கைவசமிருந்த சொற்ப உணவும் தீர்ந்துப் போக பசி, மயக்கம், கலைப்பு எல்லாம் ஒன்றாச் சேர்ந்து வாட்டி வதைக்கிறது. கால்களை தூக்கி ஓரு அடி முன் வைக்க முடியாத அளவுக்கு சோர்ந்து துவண்டுப் போக...

மேதகு (2021)

Image
மேதகு படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவில் பணியாற்றிய ஒருவர் என் முகநூல் நண்பர் பட்டியலில் இருந்தார். கடந்த வருடம் இது தொடர்பான அறிவிப்பும், காட்சி படங்களும் அவர் பதிவில் வந்ததைக் கண்ட போது எதற்கு இவர்களுக்கு வேண்டாத வேலை, தலைவரின் வரலாற்றை படமாக எடுக்கிறேன் என்று சொல்லி எதாவது சொதப்பி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். படத்தின் இயக்குநர் (தி. கிட்டு) பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டது கூட கிடையாது. நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, என எல்லோருமே புதிய முகங்கள். கொஞ்சம் கூட நம்பவில்லை. ஆனால் இன்று என் கணிப்பை பொய்த்துப் போகச் செய்து விட்டார்கள். சில குறைகள் இருந்தாலும், படம் மிகவும் விறுவிறுப்பாகாவும், முடியும் மட்டும் அதனுடனே ஒன்றி இருக்கவும் வைத்திருந்தது. படத்தின் பலமே தலைவரின் இளவயது பாத்திரத்தில் நடித்த நடிகர் குட்டி மணி தான். திரையில் அவரை பார்க்கும் பொழுது அன்பும் மதிப்பும் பொங்கி வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு கொடுத்தப் பாத்திரத்தை செம்மை செய்து விட்டார். கதை வசனம், பின்னனி இசை, ஒளிப்பதிவு என எல்லாம் தரம். கலவரம், வன்முறை காட்சி...

கனவு திரை: சினிமா கட்டுரைகள் (kindle நூல்)

Image
கனவு திரை நான் கடந்த மூன்றரை வருடங்களாக இணையத்தில் எழுதிய சினிமா அறிமுகங்களிலிருந்து தேர்ந்தெடுத்த முப்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் இந்நூல்.  தமிழ் சினிமா, உலக சினிமா, வெப்சீரிஸ், ஆவணப்படம் என கலவையாக எழுதியுள்ளேன். எனது முதல் புத்தகம் வெளியாகி சரியாக மூன்று மாதம் கழித்து "கனவு திரை" வெளிவந்துள்ளது. இந்த சொற்ப காலத்தில் நூறு பக்கம் எழுதுவது எல்லாம் சாத்தியமே கிடையாது. ஒரு கட்டுரை எழுதி முடிக்க எனக்கு குறைந்தது ஒரு வாரம் சரி தேவைப்படும். அதிலும் சினிமா திரையனுபவத்தை எழுத முதலில் சில மணிநேரங்களை சிலவு செய்து அந்த படைப்பை பார்க்க வேண்டும். அதிலும் வெப்சீரிஸ் என்றால் பார்த்து முடிக்கவே மாதக் கணக்காகும். உதாரணமாக; ' பிரேக்கிங் பேட் ' சீரிஸை பற்றிய கட்டுரையை எழுத 5 சீசனையும் பார்த்திருக்க வேண்டும். அதில் மொத்தமாக 62 எபிசொட்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் அளவுக்கு ஓடக் கூடியது. ஆகவே கடந்த மூன்று மாதங்களும் நூலை செப்பனிடுவதற்கே போதுமானதாக இருந்தது. அல்புனைவாக இருந்தாலும் புனைவிற்கு உரிய சுவாரஸ்யத்தில் கனவு திரையை எழுதியுள்ளேன். அதனால் வெறும் சினிமா...

தேனீ

Image
பூச்சி வகைகளில் தேனீ மட்டுமே மனிதனுக்கு பகுதியளவில் கட்டுப்பட்டது. ஆடு, மாடு போல அதனையும் நாம் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து விட்டோம். கொத்து வாங்கிக் கொண்டும் வளர்க்க காரணம் தேனின் சுவைதான். தேன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, இயற்கையான, சுவையான, ஆரோக்கியமான உணவு. தேனை சாப்பிடவும், உடலில் பூசிக் கொள்ளவும் முடியும். இரண்டு வழிகளிலும் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. அதிலும் கருப்பு தேன் என்றால் மேலும் சிறப்பு. சுவையான தேனை நமக்கு தரும். இல்லை…., நாம் அவற்றிடம் இருந்து திருடிக் கொள்ளும், தேனீயின் வாழ்க்கை தேனை விட தித்திப்பானது. தனிப் புத்தகமாக எழுதும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. சில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு தேனீயிடம் வெறுப்பைக் காட்டாதீர்கள். பாவம், அவை விரும்பி தாக்குவதில்லை. நம்மை கொத்திய உடன் அதுவும் இறந்து விடும் மனிதர்களின் மூளையுடன் ஒப்பிட்டால் தேனீக்களுக்கு அளவில் மிகச் சிறிய மூளை தான் உள்ளது. அதன் அளவு 0.4 - 0.6  மில்லி மீட்டர் மட்டுமே, ஆனால் சூப்பர் கம்ப்யூட்டர் அளவுக்குத் திறன் வேகம் கொண்டது. தேனீக்கு பத்த...

அனஸ்தீசியா (Anaesthesia)

Image
மயக்க மருந்து என்ற ஒன்று கண்டுப் பிடிக்கபடுவதற்கு முன்னர் இருந்தே, மனிதன் அறுவைச் சிகிச்சைகளை செய்யத் தொடங்கி விட்டான். 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் போது நோயாளி கடுமையான வேதனையை பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதிகப்படியான இரத்த இழப்பும் ஏற்பட்டது. வாயில் ஒரு மரக்கட்டையை கடிக்கக் கொடுத்து, படுக்கையுடன் சேர்த்து பிணைத்து கட்டி விட்டு, ஆட்டை அறுப்பது போல அறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வலியை குறைக்க ஓபியம் (opium), சில வகை மூலிகைகள் பயன்படுத்தபட்ட போதும். அவை பெரிதாக கைக்கொடுக்கவில்லை.  அவற்றினால் மூளைக்கு தூண்டுதலை ஏற்படுத்தி வலி, சூடு, குளிர் போன்றவற்றை உணரச் செய்யும் நரம்பு தொகுதிகளை கட்டுப்படுத்தி வலியை குறைக்க முடியவில்லை. அவற்றின் வீரிய குறைவே இதற்கு காரணம். இந்த பழமையான அறுவை சிகிச்சைகளின் சில சமயங்களில் நோயாளியின் தலையில் ஓங்கி ஒன்று போட்டு நினைவிழக்க  செய்து அவசர அவசரமாக சிகிச்சையை மேற்கொள்ளவார்கள்.  அத்தருணங்களில் சிலர் பாதியில் விழித்துக் கொண்டு மருத்துவர்களை காண்டாக்குவார்கள், ஒரு சிலர் நிரந்தரமாக கண்ணை மூடி விடுவார்கள். பெரு...

அருணா இன் வியன்னா

Image
எழுத்தாளர் அருணா ராஜ் எழுதிய "அருணா இன் வியன்னா" என்ற பயண நூலை கிண்டிலில் படித்தேன். வாவ்! போட வைத்து விட்டார். பின்னர்..., அமேசான் கிண்டிலில் 200 தாண்டி ரேட்டிங், ரிவியூ வாங்குவது என்றால் சும்மாவா?, நீண்ட நாளைக்கு பிறகு ரசித்து ருசித்து வாசித்த புத்தகம். புத்தகத்தை படிக்கத் தொடங்கி சில அத்தியாயங்கள் தாண்டும் போது இந்த புத்தகத்தில் அப்பிடி என்ன பிரமாதமாக இருக்கிறது? இப்படி கொண்டாடி  வைத்திருக்கிறார்கள். என்று நினைத்து கொண்டே வாசித்தேன். சற்று நேரம் கழித்து பார்த்த போதுதான் பாதி பக்கங்களை கடந்து இருந்ததை கவனித்தேன். இதுதான் இந்த புத்தகத்தின் பலம். நான் சமீபத்தில் இவ்வளவு வேகமா வேறு எந்த புத்தகத்தையும் படித்து முடித்தது கிடையாது. எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத சுவாரசியமான மொழிநடை. அருணா நகைச்சுவை உணர்வு மிக்கவர் பக்கத்திற்கு பக்கம் வெடித்து சிரிக்க வேறு வைக்கிறார். உங்களுடன் சேர்ந்து நானும் ஐரோப்பாவில் சுற்றிய உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். ஏ.கே செட்டியாருக்கு பிறகு நான் ரசித்து வாசித்த பயண நூல் இதுதான். இனி என் சிறந்த பயண நூல் பட்டியலில் இதற்கும் எப்பொழுதும் த...

அரை பிச்சைக்காரன்

ஊருக்கு சென்று வேலையில்லாமல் தெருத்தெருவாக சுற்றி அலைவது போல ஒரு கனவுக் கண்டேன். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. ஊருக்கு சென்றால் நண்பர்களுடன் சேர்ந்து சோமபானம் அருந்தலாம். முகத்தை மறைக்காத  தேவதைகளை பார்க்கலாம். பிறகு கிரகஸ்தனாக மாறி லெளகிக வாழ்க்கையில் உழலலாம். இப்படி சில சந்தோசங்கள் இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் போதே அரை பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஊருக்கு சென்றதும் முழு பிச்சைக்காரனாக மாற வேண்டியிருப்பதை நினைத்து பார்த்தால் தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது. நண்பன் வேறு "மச்சா புத்தகம் எதும் எழுதும் ஆசை இருந்தா, அங்க இருக்கும் போதே எழுதி விடு. இங்கு வந்த பிறகு லோல் படுவதற்கே நேரம் சரியாக இருக்கும்" என்று பயமுறுத்துகிறான். உண்மை தான்  எந்நேரமும் அரிசி வாங்குவதை பற்றிய யோசனை மண்டையில் இருக்கும் போது இலக்கியம் எப்படி வரும். எழுத்தாளனாக வாழ்வது கூட ஆடம்பரம் தான்.